முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிவகாசி: பட்டாசு படுகொலைகள் - எவிடென்ஸ் அமைப்பின் முதற்கட்ட ஆய்வறிக்கை


            
# பட்டாசு தொழிற்சாலை விபத்து - கடுமையான விதிமீறல்கள்  

# 35 கட்டிடங்களுக்கு மட்டுமே அனுமதி வாங்கிய இத்தொழிற்சாலையில் 55 கட்டிடங்கள் உள்ளன 
# 120 தொழிலாளர்கள் இருக்கவேண்டிய தொழிற்சாலையில் 300 பேர் பணி செய்துள்ளனர்
 # 50 தொழிலாளர்களுக்கு மட்டும் இ.எஸ்.ஐ. போடப்பட்டுள்ளது # இத்தொழிற்சாலை அரசு அதிகாரிகளால் முறையாக கண்காணிக்கப்படவில்லை

பத்திரிகைச் செய்தி - 06.09.2012

விருதுநகர் மாவட்டம், சிவகாசிருகிலுள்ள முதலிப்பட்டி - ஓம்சக்தி பயர் ஓர்க்ஸ்ன்கிற பட்டாசு தொழிற்சாலையில் 05.09.2012 அன்று பிற்பகல் சுமார் 12.10 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 38பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் கடுமையான தீக்காயங்களுடன் சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மதுரை ஆகியரச மருத்துவமனைகளில் சிகிச்சைடுத்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்துமதுவிடன்ஸ்மைப்பின்ண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்டடத்திற்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின்டிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி  வெளியிடப்படுகிறது.

ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் வெடி உருட்டு, ராக்கெட், சங்குச்சக்கரம் உள்ளிட்ட பல்வேறு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. முருகேசன்ன்பவருக்கு சொந்தமான இப்பட்டாசு தொழிற்சாலையை பால்பாண்டின்பவர் குத்தகைடுத்து நடத்திவந்துள்ளார். பட்டாசு உற்பத்தி செய்யப்படுகிற அறை, மருந்து லோடு வைக்கிற அறை, பதப்படுத்தப்பட்ட பட்டாசுகள் வைக்கிற குடோன் என்று சுமார் 55 கட்டிடங்களைக் கொண்டது ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலை. ஆனால் 35 கட்டிடங்களுக்கு மட்டுமே கட்டுவதற்கு இத்தொழிற்சாலைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. சுமார் 120 தொழிலாளர்கள் பணிசெய்ய அனுமதித்த இத்தொழிற்சாலையில் சுமார் 320 தொழிலாளர்கள் பணி செய்து வந்துள்ளனர். திருத்தங்கல், வாடியூர், செல்லைநாயக்கன்பட்டி, நாரணாபுரம், சங்கரலிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு வேலை செய்து வந்துள்ளனர். இவர்களில் 50 தொழிலாளர்கள் மட்டும் இ.எஸ்.ஐ. விதிகளுக்குட்பட்டு உள்ளனர். இறந்துபோனவர்களில் 90 சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு இ.எஸ்.ஐ. இல்லை.

இந்நிலையில் கடந்த 05.09.2012 அன்று பிற்பகல் 12.10 மணியளவில் ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு செய்கிறபோது வெடி மருந்துராய்வினால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னாலும் விபத்திற்கானண்மைக்காரணம்ராயப்பட்டு வருகின்றன. குறிப்பாக கெமிக்கல் குடோன் மற்றும் ரசாயனத்துகள்கள்டைத்துவைக்கப்பட்டுள்ள குடோன் ஆகிய இரண்டு அறைகளின் கடும் பாதிப்பினால் அதிகளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கு பணிசெய்த பல தொழிலாளர்கள் உயிர் பயத்துடன் பயந்துகொண்டு சிதறி ஓடியுள்ளனர். இவர்களில் சிலர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோன்று விபத்தினால் காயமடைந்தவர்களை காப்பாற்றுவதற்காக ஓடிவந்த பொதுமக்களும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டாசு விபத்தில் ராஜான்கிற 16 வயது சிறுவன் முதல் 50 வயதுந்தோணி ராஜ் வரை இதுவரை 38 பேரை பலியாகியுள்ளனர்.

ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலையில் எவ்வித பணிப்பாதுகாப்பு சாதனங்களும், தொழிலாளர் பாதுகாப்பிற்கானத்திரவாத கருவிகளும் இல்லை. குறிப்பாகந்தெந்த மருந்துகளுக்குந்தெந்த அறைகளை பயன்படுத்த வேண்டுமென்கிற நிபுணத்துவ திட்டமிடல் இங்கு இல்லை. உதராணத்திற்குலுமினியயிட் பவுடரைரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும். அலுமினிய பிளாக் பவுடரை தண்ணீர் படாமல் மிகவும் பாதுகாப்புடன் காய்ந்தநிலையில் வைத்திருக்கவேண்டும். ஆனால் இத்தொழிற்சாலையில் இதுபோன்ற விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும்ன்கிற விதிமுறை உள்ளது. இங்கு வேலை செய்யக்கூடியந்த தொழிலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை. குறிப்பாக தொழிலாளர்கள் பலர் தங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்ன்கிற விபரம் கூட தெரியாது என்று கூறுகின்றனர்.

பட்டாசு தொழிற்சாலை விபத்து ஏற்பட்டவுடன் சுமார் 1 மணி நேரம் கடந்து தான் தீயணைப்புத்துறையினர் சம்பவடத்திற்கு வந்துள்ளனர். இதற்கிடையே பொது மக்களேப்பகுதிக்குச் சென்ற பலரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். பட்டாசு விபத்துகள் ஏற்படக்கூடிய சிவகாசி பகுதியில் தீயணைப்புத்துறையினரின் பணிகள் சிறப்பு நிபுணத்துவத்துடன் இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்பகுதியில் உள்ள தீயணைப்பு பணிகள் சாதாரண நிலையில் உள்ளன.

பட்டாசு விபத்தினால் கொல்லப்படுவதுரு பக்கம் துயரமான சம்பவமாக இருந்தாலும் இவ்விபத்தில் பாதிக்கப்பட்டோரை காப்பாற்றுவதற்காக சென்ற பலரும் கொல்லப்பட்டுள்ளனர். ஆகவே பட்டாசு விபத்திற்கான விழிப்புணர்வு சிவகாசி பகுதியில் எள்ளளவும் ஏற்படவில்லைன்பதுச்சம்பவம் சிவில் சமூகத்திற்குணர வைக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2011ம்ண்டு 20,149 தீவிபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் சிறியளவிலான தீவிபத்துகள் 19,517, சாதாரணமான தீவிபத்துகள் 478, பயங்கரமான தீவிபத்துகள் 154 ஏற்பட்டுள்ளன. கடந்தண்டு மட்டும் தீ விபத்தினால் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2010ல் 75 பேரும், 2009ல் 127 பேரும், 2008ல் 69 பேரும், 2007ல் 72 பேரும், 2006ல் 65 பேரும், 2005ல் 99 பேரும், 2004ல் 249 பேரும், 2003ல் 89 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற கோரவிபத்துகள் ஏற்பட்டவுடன்ரசின் நடவடிக்கைகள் துரிதமாக இருந்தாலும் நாளடைவில்லட்சியத்துடன் இருப்பது கண்டனத்திற்குரியது.

பட்டாசு தொழிற்சாலையின் விதிகளும் மீறல்களும்

1.     தொழிற்சாலை விதிகள் 1950 பிரிவு 95ல் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள பாதைகள் திறந்தவெளிப் பாதையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இங்கு திறந்தவெளிப் பாதையாக இருந்தாலும் போதியடைவெளியுடன்ல்லாமல் 35 கட்டிடங்கள் இருக்கவேண்டியடத்தில் 55 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

2.     3F Rules, schedule 24 Rule 95 -ல் பட்டாசு தொழிற்சாலையின் தரையில் 3 மி.மீ. அளவிற்கு திக்னஸ் கொண்ட ரப்பர் சீட் போடவேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள்ந்த விதத்திலும் தீ பிடிக்காதளவிற்கு தனியாக அறையில் மிகுந்த பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும் Rule 7-ல் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற திக்னஸ் கொண்ட ரப்பர் சீட் போடப்படவில்லை.

3.     தொழிலாளர்கள் பாதுகாப்பு, தொழில் நுட்பதிறன், பாதுகாப்பு ஏற்பாடுகள், காற்றோட்ட வசதி, இ வசதி, பணியாளர்களின் நலன் உள்ளிட்ட வசதிகள் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படுத்த வேண்டுமென்று தொழிலாளர் நல சட்டம் 1948 மற்றும் வெடிமருந்து சட்டம் 1884 விதிகள் 1993 ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் பாதுகாப்பு குறித்து எவ்விதமான கட்டமைப்புகள் இத்தொழிற்சாலையில் ஏற்படுத்தப்படவில்லை.

4.     பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கக்கூடிய தொழிலாளர்களுக்கு பட்டாசு உற்பத்தி பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும். ஒரு தொழிலாளருக்கு கூட இப்பயிற்சி அளிக்கப்படவில்லை.

5.     பட்டாசுத்தொழிலில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான்டுபட வேண்டும் என்று தொழிலாளர் நலச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இங்கு வேலை பார்த்தவர்களின் வயது விபரம் கண்டறிய முடியவில்லை. இதுகுறித்து அரசு தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

6.     பட்டாசு தொழிற்சாலையின் பணிப்பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு குறித்து மூன்று மாதத்திற்குருமுறை Deputy Chief Inspector of Factoryவர்கள் தொழிற்சாலைக்கு திடீர் விசிட் சென்று கண்காணிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலச்சட்டம் வலியுறுத்துகிறது. இங்கு முறையான கண்காணிப்பு முறை கடைபிடிக்கப்படவில்லை. உரிமம் ரத்து செய்த தொழிற்சாலையில் பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டு வந்துள்ளது. முறையான கண்காணிப்புமுறை இருந்தால் அதிகளவு தொழிலாளர் இருப்பதும், அனுமதிக்கு அதிகமான கட்டிடங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கும்.

7.     20 பேருக்கு மேல் உள்ள தொழிற்சாலையில்னைத்து தொழிலாளர்களுக்கும் Employee State Insurance போடவேண்டும்ன்ற விதிகள் இருக்கின்றன. 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்த இத்தொழிற்சாலையில் 50 பேருக்கு மட்டுமே இ.எஸ்.ஐ. . போடப்பட்டுள்ளது.

8.     தொழிலாளர்களுக்கான ஓய்வறை, குடிநீர், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான ஓய்வெடுக்கும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் பட்டாசு தொழிற்சாலையில் வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேசிய தொழிலாளர் ஆமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிவகாசி பகுதி மற்றும் தமிழகத்தில் நடந்த மிக முக்கியமான
பட்டாசு விபத்துகளின் பட்டியல்

#     கடந்த 24.09.2002ல் கோவில்பட்டிருகில் உள்ள முடக்கமிட்டான்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு  தொழிற்சாலை விபத்தில் 16 பேர் மரணமடைந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.

#     சிவகாசி - மீனாம்பட்டி கிராமத்தில் கடந்த 02.07.2005ல் ஏற்பட்ட பட்டாசு தீ விபத்தில் 20 பேர் மரணமடைந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.

#     சிவகாசி - பர்மா காலனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 22.02.2006 அன்று 12 பேர்றந்துபோயினர்.

# கடந்த 12.06.2007ல் சிவகாசி - நாராயணபுரம் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 4 பேர் பலியாகினர்.

#     கடந்த 07.07.2009ம்ண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டிருகில் உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 19 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

#     கடந்த 20.07.2009 அன்று சிவகாசி - நமஸ்கரித்தான்பட்டி பகுதியில் ஸ்ரீகிருஷ்ணா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பலியாகினர்.

#     கடந்த 27.07.2009 அன்று சிவகாசிணில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.

#     கடந்த 16.06.2010 அன்று சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 7 பேர் பலியாகினர்.

#     கடந்த 24.09.2010 அன்று சிவகாசி - மாரணேரி பகுதியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் ஓரு பெண்தொழிலாளர் பலியாகினார்.
#     கடந்த 21.01.2011 அன்று விருதுநகர்ருகில் நடந்த பட்டாசு விபத்தில் 8 பேர் பலியாகினர்.

#     கடந்த 26.04.2011 அன்று சிவகாசியில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 2 பேர் பலியாகினர்.

#     கடந்த 29.06.2011 அன்று தூத்துக்குடி - குறும்பூர்ருகே நடந்த பட்டாசு விபத்தில் 4 பேர் பலியாகினர்.

#     தமிழகத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் மிகப் பயங்கரமான விபத்து கடந்த 2002ல் 36, 2003ல் 35, 2004ல் 40 ஏற்பட்டுள்ளது. பயங்கரமற்ற விபத்து 2002ல் 2134, 2003ல் 1908, 2004ல் 1838 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

#     சிவகாசி பகுதியில் 650 பட்டாசு தொழிற்சாலைகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிசெய்து வருகின்றனர்.

#     விருதுநகர் மாவட்டட்சியர் கடந்த ஜுலை 2011ல் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்புப்பிரிவு ஏற்படுத்துவதற்காக தமிழகரசிற்கு ரூ.4 கோடிளவில் புரபோசல் அனுப்பியுள்ளார். தற்போது சிவகாசி அரசு மருத்துவமனையில் தீக்காயங்களுக்கான ஏ.சி. வசதியுள்ள 6 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

பரிந்துரைகள்
#     பட்டாசு தொழிற்சாலை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு, தொழிற்சாலையில் அமைக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதாரம், தொழில்நுட்பத்திறன், அறிவு, உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கொண்டதாக உள்ளதா என்பதை குறித்து உடனடியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் ஆய்வில் மேற்கண்ட உரிமைகள் கடைப்பிடிக்கப்படவில்லை அல்லது போதியளவிற்கு இல்லை என்று தெரிய வந்தால் தொழிற்சாலையின் உரிமத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்

#     பட்டாசு தொழிற்சாலைகளில் ‘பாதுகாப்பு வசதிகளை’ அமைக்க நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளவேண்டும் இந்த திட்டத்தில் தொழிலாளார் உரிமை ஆர்வலர்களையும், குழந்தை உரிமை, மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆய்வாளர்கள் வழக்கறிஞர்கள், தொழிற்சங்கவாதிகள் அரசு சாரா அமைப்பினர் உள்ளிட்டவர்களையும் இணைத்து திட்டம் வகுக்கப்பட வேண்டும்

#     இறந்துபோனவர்களுக்கு மாநில அரசு ரூ.5,00,000 மற்றும் மத்திய அரசு ரூ.5,00,000 என்று நஷ்ட ஈடு வழங்க வேண்டும் (மத்திய மாநில அரசு பொறுப்பு இருப்பதால்)

#     பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.3,00,000 நஷ்டஈடு வழங்க வேண்டும்.

#     சிவகாசி பகுதியில் பட்டாசு விபத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு என்று சிறப்பு மருத்துவக்குழுக்களை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
#     சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்து குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும். இந்த விசாரணை கமிஷனில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், தொழிலாளர் உரிமை வல்லுநர்கள் இடம் பெறுவது அவசியமானது.

#     சர்வதேசிய தொழிலாளர் அமைப்பு இதுப்போன்ற சம்பவங்களில் உடனடி தலையிட்டு தேசிய, சர்வதேசிய அளவிற்கு அரசின் பதில் சொல்லும் கடமையை உறுதிப்படுத்தும் அளவிற்கு கவனம் கொண்டுவரப்படவேண்டும்.

# இதுவரை இப்பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் இறந்துபோனவர்கள் ஊனமானவர்கள், ஆதரவற்றவர்கள், குழந்தைத்தொழிலாளர்கள் என்கிற அளவில் கணக்கிடப்பட்டு அவர்களுக்கான மறுவாழ்வு, நீதி, நிவாரணம், குறித்த திட்டங்களில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் இவை யாவும், “Fire Workers Victim Protection Programme” அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

#     சிவகாசி வெடிவிபத்துக்கு மத்திய வெடிமருந்து துறையும், மாநில Inspector of Factories’ துறையும் பொறுப்பேற்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

#     உடனடியாக Chief Controller of Explosives’ சிவகாசி பகுதிக்கு வந்து - பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

(A.கதிர், செயல் இயக்குநர்) 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா