ஞாயிறு, ஜூலை 12

சமூகநீதி கவிழ்த்த வீராங்கனைகளே வீராங்கன்களே.. ஆதவன் தீட்சண்யா

IIT: Iyer Iyengar institute of Technology என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோவம் வருதோ இல்லியோ அவர்களின் இரப்பாளிகள் எகிறி குதிக்கிறார்கள். ஆனால் என்ன நடந்துகொண்டிருக்கிறது? அண்ணல் அம்பேத்கர் பெரியார் என்கிற பெயர்களைக்கூட உள்ளேவிடமாட்டோம் என்று சென்னை IIT அக்ரஹாரம் செய்த அலப்பறை அடங்குவதற்குள் ரூர்கி IIT அக்ரஹாரம் தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய அதன் செனட், CGPA என்னும் மதிப்பெண் புள்ளி 5க்கும் குறைவாக எடுத்தவர்கள் என்று முதலாமாண்டு மாணவர்கள் 73பேரை நீக்கியுள்ளது.  இது ஏதோ தகுதி திறமை என்கிற அளவுகோல்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது போல காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் போலியானவை என்பது உடனடியாகவே    அம்பலமாகியுள்ளது.  இந்த 73 பேரில் 7 பேரைத்தவிர மற்றவர்கள்   அதாவது 90.4% பேர்  இடஒதுக்கீடு வழியாக நுழைந்தவர்கள் என்கிற விவரம் இவ்விசயத்தில் சாதியவாதத்தின் பங்கை ஆராயுமாறு கோருகிறது. மொத்தமுள்ள 75 எஸ்.டி மாணவர்களில் 31 பேர் இப்போது நீக்கப்பட்டுள்ள நிலையில் இதே அளவீடு தொடருமானால் எஞ்சியுள்ளவர்களும் மூன்றாமாண்டு முடிவில் வெளியேற்றப்படுவார்கள் என்று நியாயமான கவலையை மாணவர்கள் வெளிப்படுத்துகின்றனர்.   இதேபோல் இப்போது நீக்கப்பட்டுள்ள   23  எஸ்.சி, 4 மாற்றுத்திறனாளர், 7 ஓபிசி தவிர்த்து எஞ்சியுள்ள மாணவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியேற்றப்படுவார்கள். பிறகென்ன? கொஞ்சம் கோமியத்தை தெளித்து தீட்டுக்கழித்து அக்ரஹாரம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டியதுதான். 

நுழைவுத் தேர்வில் 160  மதிப்பெண் பொதுப்பட்டியலுக்கு. பெரும்பாலும் நகர்ப்புற/ உயர்சாதி மேட்டுக்குடியினருக்கே இந்த மதிப்பெண்ணை ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உண்டு.  எஸ்.சி.க்களுக்கு 87,  எஸ்.டி.களுக்கு 68 என்று கட் ஆப் நிர்ணயம் செய்வதற்கு காரணமே இந்த மதிப்பெண்களைப்  பெறுவதற்கு அவர்களுக்குள்ள மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புகளை கணக்கில் கொண்டு தான். சமூகநீதிக்கான போராட்டத்தின் அழுத்தம் காரணமாக இவ்வாறு உள்ளே நுழைந்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மாற்றுத்திறனாளி மாணவர்களை அநீதியான ஓர் அளவீட்டைக் கையாண்டு வெளியேற்றி உள்ளது ரூர்க்கி IIT.
ஒரு கல்வியாண்டு முடிந்த நிலையில் அவர்களை வெளியேற்றி அவர்களது எதிர்காலத்தை பாழடிக்கும் அராஜகத்தை முறியடிக்க சமூகநீதியில் நம்பிக்கை உள்ள சக்திகள் ஒருங்கிணைந்து குரலெழுப்ப வேண்டும்.  Take them back என்கிற பெயரில் ஒரு குழுவினர்  சமூக வலைத்தளங்களில் இதுகுறித்த கருத்தியல்களையும் கண்டனங்களையும் ஒருங்கிணைக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்கள் உத்தரகாண்ட் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கவிருக்கிறார்கள்.  சமூக நீதி கவிழ்த்த -  ஸாரி- காத்த வீராங்கனைகளும் வீராங்கன்களும் மலிந்திருக்கும் தமிழ்நாடு ஏதாவது செய்யாமலா போய்விடும்?

http://www.jantakareporter.com/india/90-4-of-iit-roorkees-expelled-students-were-from-reserved-category-decision-unfair-for-all/6527

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...