வியாழன், ஆகஸ்ட் 4

டாக்டரை கலெக்டராக்கும் ரசவாதி அல்லது கதைத்திருடன் - ஆதவன் தீட்சண்யா


புதுவிசை இதழில் வெளியிடுமாறு சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.லட்சுமணபெருமாள் "தனது" (ஆமாம், தனது) கதையொன்றை அனுப்பியிருந்தார். துப்புரவுத் தொழிலாளியான தலித் ஒருவர் (வேறு யார்?) படித்து மருத்துவராகிவிடுவார். அவர் தலித்தல்லாத பெண்ணொருத்தியை திருமணம் செய்துகொள்வார். தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய தாயை உடன் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று அவரை ஊரிலிருந்து அழைத்து வந்துவிடுவார் மருத்துவர். அவரது மனைவிக்கு இதில் ஒப்புதலில்லை. தனது குழந்தைகள் ஒரு துப்புரவுத் தொழிலாளியான பாட்டியிடம் நெருங்குவது அவளுக்கு அசூயையாகப்படுகிறது. போதாதற்கு, அந்தக் கிழவியும் சும்மா அடக்கஒடுக்கமாக இருக்காமல் தனது மகனின் பகுமானத்திற்கு அவமானம் தேடித்தரும்படியாகவே நடந்து கொள்கிறார். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கவனிப்பாரற்று கிடக்கும் நோய்வாய்ப்பட்ட ஒரு முதியவரைக் கண்டு தாளாமல், அவரை குளிப்பாட்டி சுத்தம் செய்து அந்த  இடத்தையும் துப்புரவாக்கிவிடுகிறாள். இது மற்றவர்களின் கேலிகிண்டலுக்குரியதாகிறது. ஒரு கட்டத்தில், நானும் பிள்ளைகளும் இந்த வீட்டில் இருக்கவேண்டுமானால், உங்கம்மாவை வெளியேற்று என்று புருசனிடம் மல்லுக்கு நிற்கிறாள் மனைவி. வேறுவழியின்றி, நேர்ச்சைக்குப் போகவேண்டும் என்று நீ கூறிக்கொண்டிருக்கும் கோவிலுக்குப் போய வரலாம் வா என்று அம்மாவை காரில் கூட்டிப்போகும் மருத்துவர் கண்காணாத இடமொன்றில் அவளை இறக்கிவிட்டு விட்டு இருளில் மறைந்து வீடு திரும்பிவிடுவார்.

சொல்லொணா அவமானங்களுக்கிடையே வளர்த்து ஆளாக்கிய தன் மகனை பிறர் முன்னால் கூனிக்குறுகச் செய்யும்  விதமாக ஒரு தாய் செய்வாளா, அப்படி ஆளாக்கிய தாயை போக்கடிக்க மகன் துணிவானா என்கிற சென்டிமென்ட் கேள்விகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு புது இடத்தில் தன்னை மறைத்துக்கொள்வதிலேயே பெரிதும் முனைப்பு கொண்டியங்கும் உளவியல் நெருக்கடிக்குள் தலித்துகள் தள்ளப்பட்டிருப்பதை இக்கதை கவனம் கொள்ளவில்லை. அதனாலேயே ஒரு மருத்துவனின் தாய் என்கிற என்கிற நாசுக்கு நிலையைக் காப்பாற்றிக்கொள்ள தெரியாமல் தனக்குள் இருக்கிற துப்புரவுத்தொழிலாளியை அவ்வப்போது வெளியிட்டபடி இருக்கிறாள். முதியவர் மீதான அவளது மனிதாபிமான நடவடிக்கை துப்புரவுத் தொழிலாளியின் இயல்பான தொழில் மற்றும் சாதிப்புத்தியாக புரிந்துகொள்ளப்படும் கெடுவாய்ப்பு கதைக்குள் இருக்கிறது. எந்த இடத்திற்கு / நிலைக்குப் போனாலும் தங்களது சாதிப்புத்தியை காட்டிவிடுவார்கள் என்கிற பொதுப்புத்தியே கதைக்குள் இயங்குகிறது. தலித்துகள் படித்து வளர்ந்துவிட்டால் பெற்ற தாயைக்கூட அனாதையாக்கிவிடுவார்கள் என்கிற தொனியும் இருக்கிறது- எனவே உங்கள் கதையை மீண்டும் ஒருமுறை நீங்களே வாசித்துப் பாருங்கள். ஏதும் திருத்தியெழுத வேண்டும் எனத் தோன்றினால் திருத்தி அனுப்புங்கள் -  என்கிற குறிப்பொன்றை லட்சுமண பெருமாளுடன் பகிர்ந்து கொண்டோம். பிறகு தொடர்புகொண்டு கேட்டபோது கொஞ்சம் அவகாசம் தேவை என்றார். சரி அனுப்பும்போது பார்த்துக்கொள்ளலாமென விட்டுவிட்டோம், மறந்தும் போனது. ( பிற்பாடு இக்கதை ‘புறத்தாக்கம்’ என்ற பெயரில் யுகமாயினி முதல் இதழில் வெளியானது. திருத்தி எழுதினாரா அப்படியே வெளியிட்டாரா என்று தெரியவில்லை.)

இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழின் ஒரே ஒரு உளறுவாயன் நூறுநாற்காலிகள் என்றொரு கதையை எழுதியிருப்பதாகவும், தமிழில் தலித் இலக்கியமே அதிலிருந்துதான் முளைப்பு விட்டிருப்பதாகவும் அதுக்குள்ளேயே வளர்ந்து வானோங்கி நிற்பதாகவும், இனி யாரும் தலித் இலக்கியம் என்று எதையும் எழுதி கிழிக்கத் தேவையில்லை என்றும் ஒரு பேச்சு காதில் விழுந்தது. அடடே, தவிட்டுப் பானைக்குள்ளிருந்து தானியம் எப்படி வந்திருக்க முடியும் என்கிற ஆச்சர்யத்தோடு தேடிப் பிடித்து அந்த அதியற்புத குறுநெடு நுண்விரிகதையை வாசித்தேன். ஆஹா, இந்தக் கதையை நாம் ஏற்கனவே எங்கோ வாசித்திருக்கிறோமே என்று பொறி தட்டியது. பிறகுதான் பிடிபட்டது, இது லட்சுமணபெருமாள் எழுதிய கதையென்பது. ஆமாம் கதை அவருடையதுதான். லட்சுமணபெருமாளின் கதையில் வரும் அம்மா, மனைவி, குழந்தைகள் எல்லாரும் நூறு நாற்காலிகளிலும் அப்படியப்படியே இருக்க டாக்டர் மட்டும் கலெக்டராகிவிட்டிருந்தார்.  


திருடித் தின்னும் மாங்காய்க்கு மட்டுமல்ல, திருடி எழுதும் தைக்கும் கூ ருசி கொஞ்சம் அதிகம் போ, அறம் முறம்னு ஒரே அமாகிவிட்து. எச்சிலை திருடித் தின்வன் விட்ஏப்த்திலும் இன்னொன்றிலும் இலக்கித்தின் மெய்யாவானையை முகர்ந்றியும் வல்மை பெற்றுவானின் வாகர்கள் அந்தக் தையை ஹா ஒஹோன்னு புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். லட்சுமண பெருமாள் கதையில் டாக்டராக முடக்கிப் போடப்பட்ட தலித்தை, எப்படியாவது கலெக்டராக முன்னேற்றிவிடவேண்டும் என்கிற அக்கறையில்தான் அந்தக் கதை திருடப்பட்டது என்றொரு விளக்கத்தை உளறுவாயனோ உளறுவாயனின் ஆதரவாளர்களோ சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் 15 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழிசை குறித்த இன்னொருவரது கட்டுரையைத் திருடி சொல்புதிதில் வெளியிட்டுக் கொண்தற்கா ஞ்சாத்தே இன்மும் தீராலிருக்கிது. 

(விடன் டம் இழ் 3ல் என்மீது உறுவாயன் கக்கிவன்த்திற்கு எதிர்வினையாக இதை ழுதியிருக்கிறேனோ என்று சிலர் கேட்கக்கூடும். இது எதிர்வினை அல், முதல் வினை. நூறு நாற்காலிகள் தையைப் டித்திலிருந்து தை  சொல்லி ருகிறேன். விநா முருனின் லம் நாவல் குறித்நிகழ்விலும் கூறினேன்.து திருட்டு அம்லப்பட்டுப் போத்தித்தில் இருந்றுவாயன்தான் என் மீதான திர்வினைக்கு ம் நேர்காலை யன்டுத்திக் கொண்டிருக்கிறார்.)

2 கருத்துகள்:

  1. நேர்காணல் மொத்தமும் கோணல்தான் ஆதவன்!
    இதில் நேர்மையை எங்கே எதிர்பார்ப்பது?
    விகடனும் வணிக நோக்கில் இதையெல்லாம் வெளியிடுவதுதான் வருந்தத் தக்கது.

    பதிலளிநீக்கு
  2. இது போல நிறைய நடந்திருக்கு.நான் சில வாசகர் கடிதம் எழுதினேன்.அதிலுள்ள மேற்கோள்களை எடுத்து இவர் தான் புதிதாய் கண்டுபிடித்தது போல எழுதினார்.அவர் அடிவருடிகளும் ஆசானே என்று சிலாகித்தனர்.ஜெயகாந்தனுக்கு எழுதிய அஞ்சலியிலும்,கம்ப ராமாயண வரிகளிலும் அவர் என் எழுத்தை அப்படியே பயன்படுத்தியது அதிர்ச்சியாக இருந்தது.இதையெல்லாம் சொன்னால் நம் குரல் ஒலிக்குமா?அவர்தான் தமிழ் இலக்கியத்துக்கே அதிபராமே.கம்யூனிசம் பற்றி ஓராண்டிற்கு முன் விமர்சனம் ஒன்று அனுப்பியிருந்தேன்.சரியாக ஒரு மாதம் கழித்து அதனை அவரது நடையில் சிறிய மாற்றங்களுடன் வெளியிட்டிருந்தார்.குறைந்த பட்சம் இன்னாரின் விளக்கத்திற்கு பதில் என்ற குறிப்பு கூட இல்லை.அவரது கூழை கும்பிடு வட்ட எழுத்தாளர்களை(!)மட்டுமே அறிமுகம் செய்வார்.பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் எழுத்தென்றாலே வெறுப்பை,வஞ்சத்தை வீசுவார்.அவர் தான் இலக்கியத்திற்கு அத்தாரிட்டி என்று குறிப்பிடுபவர்களைச் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...