முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

October, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆனாலும் இதுகதையல்ல - ஆதவன் தீட்சண்யா

சொல்லில் அஹிம்சையும் நேரெதிர் குணக்கேடுகள் நித்யகர்மமாயும் கொண்டியங்கி, ஊழிப்பசிக்கு உணவாக அணுகுண்டைத் தின்று, செரிமானமற்று தற்கொலையுண்டது இந்தியா என்ற பண்டையநாடு. தன்னைக் குறித்து மற்றோரறிய தடயமொன்றையும் மீத்தாது தணலிடையழிந்து அவலத்தின் கோரநர்த்தன மேடையென ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிற பூமியிது.
பொசுங்கியழிந்த பரப்பும் வெளியும் இதுகாறும் அனல் தணியாது புனல் குளிராது தகித்திருப்பது குறித்து தமக்கேயுரிய முன்னுணர்வால் எச்சரிக்கை பெற்ற பறவையினங்கள் இந்நாட்டின் வானெல்லைக்குள் பறப்பதை கவனமாகவே தவிர்த்து வருகின்றன. காலபருவ மாற்றங்களின் உன்னதங்களை களித்தாட கடலும் மலையுங் கடந்து வான்நிரப்பி வந்திறங்கும் பறவைகளுக்கான சரணாலயங்களுக்கு ஒருகாலத்தில் புகழ் பெற்றிருந்த இந்நாடு இப்போது மரணத்தை மட்டுமே பரிசாகத் தர காத்திருப்பதையும் அவை அறிந்தேயிருக்கின்றன. அடர்பனிப் பொழிவில் பாதை பிசகிய பயணியர் விமானமொன்று உள் நுழைந்த கணத்திலேயே அணுக்குளிரில் விறைத்து பனிமூடிக் கிடக்கிறது.
மிச்சமீதி ஏதுமிருப்பின் கொள்ளையிட்டு அள்ளிப்போக வந்த வாஸ்கோடகாமாவின் வம்சாவளி லூஸ்கோடகாமாவின் கலம், இந்தியக் கடற்பரப்பை…

அணா பைசா விவகாரம் - ஆதவன் தீட்சண்யா

மாநகராட்சியின்குப்பைவண்டிகள்மட்டுமேவந்துபோகும்அவ்விடத்தில், மிகச்சமீபத்தில்சந்தைக்குஇறக்குமதியாகியுள்ளஒருவெளிநாட்டுக்கார்வந்துநிற்பதுபொருத்தமற்றதாகத்தெரிந்தது. தலைநகரின்புறத்தேநீண்டோடும்தங்கஎண்கரச்சாலையின் (என்.ஹெச் 001) ஏழாவதுசுங்கச்சாவடியைநெருங்கும்எவரும்இவ்விடத்தைவேகமாககடந்துவிடவேதுடிப்பார்கள். மூர்ச்சையடையவைக்குமளவுஅங்குதுர்நாற்றத்தைவிளவிக்கொண்டிருக்கும்அந்தகுப்பைகள்யாவும்அவர்களதுவீட்டிலிருந்துவந்தவைதான்என்பதைவசதியாகமறந்துவிட்டுமூக்கைப்பிடித்துக்கொள்ளவும்அவர்கள்தயங்குவதேயில்லை. ஆனால்இந்தக்காரில்வந்தவரோகண்ணாடியைஇறக்கிவிட்டுஉள்ளிருந்தபடியேகுப்பைமண்டியைவெறித்துப்பார்க்கத்தொடங்கினார்.