முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

November, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விரகமல்ல தனிமை -ஆதவன் தீட்சண்யா

அன்பில் ஊறும் மகாவுக்கு,

ரொம்பவும் சிரமப்பட்டு வந்து சேர்ந்தேன். டிக்கெட் ரிசர்வ் பண்ணிட்டு கிளம்புங்கன்னு நீ சொன்னது வழி முழுக்க ஞாபகத்தில். காலம் கடந்து நினைத்தால் எது நடக்கும். பங்குனி உத்திர கூட்டம் வேறு. ஈரோடு வரைக்கும் ஸ்டாண்டிங். நெரிசல்ல சிக்கி முழி பிதுங்கிருச்சு.

அன்னிக்கு ராத்திரி பஸ் ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளின லாட்ஜ்ல ரூம் கிடைச்சது. பக்கத்து ரூம்ல, உடம்பு முழுக்க மாட்டிக்கிட்டு ஆட்டுற மாதிரி வளையல் கிணுகிணுப்பு. ஓயாத சிணுங்கல். விரசமான பேச்சு. கெக்கக்கேன்னு சிரிப்பு. இம்சை தாங்கலை. அருவருப்பு. இந்த ஊர்ல பொண்ணுங்களும் சிலதுகள் தண்ணி, தம்மெல்லாம் அடிக்கும் போல. நிதானம் தப்பின பேச்சு, பாட்டு, கூத்து கும்மாளம். இடையில, பாத்ரூம் போனவ, "இன்னும் தூங்கலையா சார்...லைட் எரியுதே"ன்னு விசாரிக்கிற அளவுக்கு தைரியம்.

அடுத்த வீட்டு ஆம்பளையை இவளோ, அவன் இவளையோ பாத்துடக் கூடாதுன்னு, விடிகாலைல வாசல் தெளிச்சு கோலம் போட்டுட்டு வீட்டுக்குள்ள அடைஞ்சிடறபடி பொண்ணுங்களை வளர்த்த இந்த மண்ணுல, இப்ப பொண்ணுங்க எப்படி ஆயிடுச்சு பாத்தியா மகா... ஒருவேளை இப்படி வளர்த்தினது தான் அவங்…

சுழல்வு - ஆதவன் தீட்சண்யா

ரியும் பால்சட்டியும் ஒழிந்த வீடுகளின்
வெற்று உத்திரங்களில் தாவிக் களைத்திருந்த
பூனைகளுக்கு
கிலியூட்டும் அச்செய்தி வந்தது
பூனைக்கழுத்தில் மணி கட்ட பயந்து நடுங்கியிருந்த எலிகள்
மணியின் கழுத்தில் சுருக்கிட்டு சாகடித்திருந்தன பூனையொன்றை

பதற்றத்தில் கூடிய மாநாடு
மேலாண்மைச் சரிவு தடுக்க உத்திகள் வகுத்தது:
எலிகள் வளர்ந்து வளர்ந்து பூனைகளை விடவும் பெரிதாக இப்போது
தின்பதிலும் திருடுவதிலும் திறன்நுட்பம் கூட
வழக்கு தொடுத்தாலும் வாய்தாவில் தப்புகின்றன
வளையிலும் தங்குவதில்லை
பொறியிலும் சிக்குவதில்லை
கவ்விப்பிடிக்கக் காத்திருந்தாலும்
கண்ணறியாது வந்து போகின்றன
..................................................................
................................................................
எலிகளுக்கு எப்படியாவது
மணி கட்ட வேண்டும்.

ரியல் - எஸ்டேட் பிரச்னை - ஆதவன் தீட்சண்யா

ங்குனி சித்திரை
புளியடிக்கும் காலம்
சல்லிசு விலையில்
வருசத்துக்கே வாங்கிவிடுவார் அப்பா

அறுவடைக்காலத்தில் மலிவாய்
அவரை துவரை நெல் பிடிப்பார்
ஏழெட்டு மூட்டை

சேலம் பாசஞ்சர் பயணமென்றால்
கூடைக்காரியிடம்
நாலுதட்டம் காய் வாங்காமல்
வீடு திரும்பமாட்டார்
மார்க்கெட்டில்
ஒரு நாளுக்காகும் காசில்
ஒரு வாரத்துக்கே கிடைப்பதாய் ஒப்பீடு தவறாது

ஒரு மைல் நடந்தால்
ஒரு ரூபாய் மலிவென்றால்
அப்படியொரு பரிவர்த்தனைக்கே
பழகியிருந்த எங்கள் அப்பா
காந்திபுரம்
அண்ணாநகர்
காமராசர் காலனியைப் போலவே
ஊரிலிருந்து ஒன்பது காதத் தொலைவில்
உருவாகும் புதுநகரில்
ஒரு சென்ட் ஒரு லட்சமென வாங்கினார்

பஸ்ஸ்டாண்டுக்கு கூப்பிடு தூரத்தில்
அம்பேத்கர் காலனியில்
அடிமாட்டு விலைக்கு மலிந்திருக்கும் மனை வாங்க
நாதியில்லை யாருக்கும்

சாதியிருக்கிறது
மண்ணுக்கும்.
http://india.poetryinternational.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=21009

ஊத்தைப்பண்டத்திற்கான வீரமுழக்கம் - ஆதவன் தீட்சண்யா

குளிப்பறையின் தனிப்பில் உனக்குரியதைவிடவும்
கூடுதல் சுதந்திரமுடையதான பாவனை பூசி
வெறும் சந்தையாகத்தான் எப்போதுமிருக்கிறது உலகம்

வலிந்து நீ சூட்டிய மகுடங்கள் உதிர்த்து
நிறுத்தல் முகத்தல் மானிகள் தரித்து
யாவற்றுக்கும் தரகுமண்டியாகிவிட்ட உலகம்
சரக்கு பாரத்தோடு
எடைமேடையில் நிற்குமொரு லாரி போன்றுமிருக்கிறது

எல்லோரும் புசித்தது போக
எஞ்சிய ஒருதுண்டு வேட்டைக்கறி அல்லது நீர்க்கிழங்கிலிருந்து
ரூபமற்று கிளைத்த பரிவர்த்தனை விதிகளின் எந்த ஷரத்திலும்
பண்டமென்பதன்றி வேறு கியாதியில்லை உனக்கு

சுரோணிதம் திரண்டுச் சூலுறும்போதே
சிறைக்கம்பிகளையொத்த International Barcodeல்
உயிரின்மீது விலைப்பட்டியல் அச்சிடுவதை
வேடிக்கை பார்க்கத்தான் தடை; மற்றபடி
பருத்த தொடையும் சிறுத்த இடையும் கொண்ட
காதல் ததும்பும் / உலர்ந்த இருதயத்தை
தாய்மை சுரந்து கசியும் ஸ்தனங்களை
வாழ்வின் மர்மங்களை ரகசியமாய் அவிழ்த்துப் பிணைக்கும்
இலக்கியத்தை
யாருக்கும் அஞ்சா வீரத்தை
தேவையெனில்
உன்னையே நீ
விற்கலாம் வாங்கலாம்
வாங்கி விற்கலாம்
விற்றும் வாங்கலாம்
ஆனாலும்
விற்பனையாளன் அல்லது நுகர்வோன்
கெட்டிக்காரத் திருடன்
அல்லது
களவு கொடுக்கும் இளிச்சவாயன்
- இவர்களில் யாராயிருப்பதென்று ம…

எழுதவேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் - ஆதவன் தீட்சண்யா

வர் கண்ணுமறியா நுண்ணிழையில் பூக்கும் அரூபச் சுரங்கம் மனசு. அரணும் மதிலுமென வாய் பிளந்து மேயும் முதலைகளின் அகழியுமாகிய தடை சூழ் காவற்கோட்டைகள் எப்புறமும் மாயத்தில். அண்டவொணாத கால வெளியற்று ஓயாப்பறவையின் சிறகுகளாகி சதாவும் இயக்கம். அணுவணுவாய் உள்பொதியும் அனந்தகோடி ரகசியம் படிக்க யாரால் கூடும்... முடிவற்ற ஆயுளே சித்தித்தாலும் முடியா இலக்கு. வாழ்நாளெல்லாம் முயன்று நனைந்தத் துணியாய் துவளும் இக்கணத்தில் ஏதுமற்ற வெறுங்கூடாய் என்னையே வீசிக்கொள்கிறேன் படுக்கையில். சதையிணுக்குகளில் சல்லடையிட்டு, சாரம் குடிக்க நாச்சுழற்றும் குரூரத்தின் ரூபமானது இப்படுக்கை. காலத்தின் குழந்தைகள் கடைசி சயனம் கொள்ள கதியிதுவேயென விரிந்த கபடம்- ஆஸ்பத்ரி வார்டின் அழுக்கு படுக்கைகள் போல.

பாயின் ஒரு கோரைபோல ஊடுபாவி மௌனத்தின் உரு பூண்டு படுத்திருந்தேன். பசிப்பும் புசிப்புமற்ற ஏகாந்தமேக, பறக்கும் கம்பளத்தில் படுத்திருப்பதான சிலிர்ப்பு. பாயும் தலையணையும் கெக்கலிக்கின்றன தாமும் படுத்திருப்பதாய். ஓய்விற்கோ உறக்கத்திற்கோ அல்லாது விழிப்பை முன்னிறுத்தியே நான் படுத்திருப்பதை அவற்றுக்கும் யாவற்றுக்கும் பதிலாய் சொன்ன…

என் பெயர் ராணுவன் - ஆதவன் தீட்சண்யா

ம்மைத்தாமே கண்காணித்து வேவு சொல்லும்
ஒற்றர் நாட்டில்
நிழலும் சந்தேகத்திற்குரியதாகையால்
புழுதியும் அடங்கிக் கிடக்கிறது
நகரரீதியில் கிராமங்களிலும்

சைரன் பொருத்திய கவச வண்டிகளிலிருந்து
ஊரெங்கும் படையாட்கள் இறங்கிவரும் நேரமிது

எந்தக் கணத்திலும் எதிரியைத் தாக்க ஏதுவாக
பிறக்கும்போதே ராணுவ உடுப்போடு பிறக்குமாறு
கருவிலிருக்கும் சிசுவுக்கான உத்தரவு நகலை
தாயின் வயிறுமீது ஒட்டிவிட்டுப் போகவோ
தூளியில் துயிலும் குழந்தை இரவுக்குள் வளர்ந்து
விழித்ததும் வெடிகுண்டு வீசலாமென
முன்னெச்சரிக்கையாக கைது செய்யவோ
உத்திரத்தில் மஞ்சள்துணிக்குள் தொங்கும்
ஒண்ணேகால் ரூபாய் காணிக்கைப் பணத்தை
யுத்தகால நன்கொடையாக பறித்தெடுத்துப் போகவோ
எத்தனையோ காரணமுண்டு
எந்தவொரு குடிமகன் வீட்டிலும் அவர்கள் நுழைய

வேசித்தெருவுக்குள் நுழைந்த நினைப்பில்
இன்றிரவும் அவர்கள் யார் வீட்டுக்கதவையும் உடைத்து நுழையக்கூடும்
நேற்றின் வதையில் உதிரப்போக்கு நிற்காத இளம்பெண்
மறுபடியும் முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டால்
கண்ணெதிரே கதறும் மகளை கையறு நிலையில் காண்பதினும்
தேவலாம் இதுவென தேறுதலடைய
பெற்றோர்க்கு சுதந்திரமுண்டு இன்னமும்

பூட்ஸின் லாடக்குறடு அரக்கிய காயங்களுக்கு
களி…

வேட்டை - ஆதவன் தீட்சண்யா

ந்தியில் கிளம்புது சேனை
பம்மி வருகிறது இருட்டு

நிலவு வருமோ
அமாவாசையாகத்தானிருக்கட்டுமே
கண்கள் ஜொலிக்கிறது
திமிர்க்கிறது கால்களும் தோள்களும்

எங்கோ விலகி நெளிந்துக்கிடந்த பாதை
அடங்கியசைகிறது பாதங்களுக்கடியில்
இலக்கை முன்னறிந்து

தாழங்குத்திலிருந்து
ஓசையற்று இறங்கிவரும் பூநாகங்கள்
தீண்டும் முன்பே மிதிபட்டுச் சுருள
காரை சூரைப் புதர் விலக்கி கடக்கிறோம்

வெந்துகொண்டிருக்கும் பிணத்தை
எட்டுக்கையாலும் பிய்த்துத் தின்னும் ஓங்காரி
எதிர் நேர்வோரை காவு கொண்டுவிடுமென்று
பயங்காட்டி மறித்தோரை உதைத்தோட்டிவிட்டு
சுடலைகள் வழியேயும் தொடர்கிறது பயணம்

சில்வண்டுகளும் காட்டுராசிகளும் சதங்கையென ஜதியூட்ட
மோகினியோவென அஞ்சிக் கிளர்ச்சியுற்று
மல்லியப்பூ வாசத்துக்கு அலைகிறது நாசி

கக்கிவைத்த மாணிக்கக்கல்லொளியில்
இரைதேடிய முதிர்நாகம்
அச்சத்தில் விழுங்கி மறைகிறது புற்றுக்குள்

உருவிய உடைவாளை
உறைக்குள் சொருகிக் கொள்ளவே நேரமில்லை

குழியிலும் சுழியிலும் இறங்கிய புனித அழுக்குகளை
சொந்த நதிகளில் கழுவிக்கொண்டு
கடல்மேல் நடந்து மலைகளைப் பிளக்கிறோம்

வெள்ளி முளைக்கையில்
சிறகுகள் பொசுங்கப் பொசுங்க
கிரணமண்டலத்துள் பாயும்
எங்களது முகமும் காலடியும்
தகித்து வ…

புது ஆட்டம் - ஆதவன் தீட்சண்யா

நான் உம்மைத் தீண்ட மறுக்கும் முடிவின் பின்னே
எந்த அரசியலும் இல்லை
தீண்டுவது வெறுமனே சரீரம் சம்பந்தப்பட்டதல்ல
உங்களை விலக்கிவைக்கும் இத்தருணம்
மிக முக்கியமானது
எனது குற்றச்சாட்டுகளைப்போலவே

குமிந்து ஊரையே நாறடிக்கும் இந்நரகலெல்லாம்
நேற்றிரவு நீங்கள் தின்றவைதான் தெரியுமா
நீங்கள் எத்தனை அழுக்கானவர்கள் என்பதை
பாழ்பட்டிருக்கும் நீர்நிலைகளைப் பார்த்தறியுங்கள்
சுத்தபத்தமாக இல்லாதாரோடு
சுமூகமாய் பழகமுடியாது என்னால்

புராண இதிகாச காலந்தொட்டு
அரசாங்கத்தின் தத்துப்பிள்ளைகளாகவே   வளர்ந்திருக்கிறீர்கள்
அடுத்தோரை அண்டிப்பிழைக்கும் கையாலாகாதவர்களோடு
உழைத்து வாழும் என்னால் ஒத்துப்போக முடியுமா

காலங்காலமாக
நீங்கள் இப்படியே கிடந்து பழகியதற்கு
யாரையும் குற்றம் சுமத்தாதீர்கள்
எல்லாக்காலத்திலும் உங்களைத் தூக்கிச் சுமக்க யாராலாகும்?
இறங்குங்கள் எல்லா பல்லக்குகளிலிருந்தும்
சலுகை இருக்குமிடத்தில் தகுதியும் திறமையுமிருக்காது
இந்த நொடியிலிருந்து யாருக்கும் எச்சலுகையுமில்லை
ஆட்டம் பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது இப்போது

பெண்டுபிள்ளை ஒண்டிப்பிழைக்க ஒரு கொட்டாய் போடத் தெரியாது
வக்கணையாய் பொங்கித் திங்க ஒரு சொப்பு வ…

நுரையின் மைந்தர்கள் மற்றும் கூழாங்கற்களுக்கு - ஆதவன் தீட்சண்யா

கொலையாயுதம் ஏந்தாத ஒருவரும் காணக்கிடையாத துர்வெளியில்
யாருக்கும் நேரத்தகாத சொந்தத் துயரங்களில்
யாமே மருகிப் பொசுங்குமாறு தனித்துவிடப்பட்டுள்ளோம்

இழந்தவை உயிர்த்துவரும் வழி முடங்கிய சாம்பல்வனத்தில்
அனாதைகளாய் உழன்றலையுமாறு அனுமதிக்கப்பட்டுள்ளோம்

வம்சமே சூறையாடப்பட்ட பிறகு
இடிக்கப்பட்ட வீட்டின் சுவற்றில் தெறித்து
இன்னும் துடிக்கும் குழந்தையின் சதையிணுக்குகளை
கொத்தித் தின்கிறது வலியறியாத காகம்

குப்பைவண்டியில் அள்ளிப்போய் குமித்துப் புதைத்தது போக
தெருமருங்கில் வீசியெறியப்பட்ட எமது மீதிப் பிணங்களுக்காக
நரபட்சிணிகள் நகரம் முழுக்க வெறிகொண்டலைகின்றன

நேற்றுவரை நாங்களும் சுதந்திரமாய் இருந்த வரலாற்றை
என்றென்றைக்குமாய் மறக்கடிக்க
குரோத்தின் கூரேறிய வல்லாயுதங்கொண்டு
எதிராளி தனது குலக்குறியை
நினைவின் ஆழடுக்குகளில் பொறித்துப் போயிருக்கிறான்

வெற்றிகொண்ட அவனது சந்ததிகளை கர்ப்பம் சுமக்கும் எம் பெண்டிர்
அவமானத்தின் கொடுங்கங்கில் அக்கணமே மரித்தனர்
பிறக்கவிருக்கும் குழந்தைகளின் புனிதம்
இன்னொருமுறை ஆயுதங்களால் தீர்மானிக்கப்படும்வரை
எங்கள் மீதான வெற்றிக்கு
அவலமிக்க சாட்சியாயிருக்கும் நிபந்தனையின்பேரில்
கொல…

சுய விலக்கம் - ஆதவன் தீட்சண்யா

கரத்தின் மோஸ்தருக்குள் முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய் அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமென்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம்தான் தைத்துக்கொள்கிறேன்

வீட்டுக்கே வந்து டோபி துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மாபோல

நீயமரும் இருக்கையிலேயே எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்

அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே தெரியாது
என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்குகெதிரான
உங்களின் உரையாடலின்போதும்
"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்...'' என்கிற போதும்
யாரையோ வைவதாய் பாவனை கொள்கிறேன் பதைக்கும் மனமடக்கி

"உங்கம்மாளப் போட்டு பறையன் சக்கிலிப் போக...'' என்ற வசவுகளின்போது அதுக்கும்கூட உங்களுக்கு நாங்கதான் வேணுமா   என்றும்     
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை
எத்தனை சிரமப்பட்டு
அடக்கிக்கொள்கிறேன் தெரிய…

ரகசியத்தில் பாயும் நதி –ஆதவன் தீட்சண்யா

பருவங்கெட்டுபெய்துகொண்டிருந்ததுமழை. முனிமலைமேலிருந்துபாறாங்கல்உருண்டுவருவதைப்போல, அடர்ந்தடர்ந்துகிடுகிடுக்கும்இடியோசைக்குகுலைநடுங்கியது. சாளைக்குள்ளேயேமுடங்கிக்கிடந்தாலும்ரோமக்கால்சிலிர்ப்பில்மண்டியிருந்ததுகுளிர். பழஞ்சீலையைமேலுக்குப்போர்த்திசாக்குப்பைக்குள்கழுத்துவரைக்கும்நுழைத்துக்கொண்டாலும்வெடவெடப்புகுறையவில்லை. விளையாட்டுக்குஒருமோதுமோதினாலும்இற்றுவிழுந்துவிடுமளவுக்குசாளையின்சுவர்களில்ஓதமேறிவிட்டது. கூரையிலிருந்துவிழும்மரவட்டைகள்காதுக்குள்நுழைந்துவிடுமோஎன்கிறபயத்தில்