முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

June, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜாக்கிரதை: இரவு மணி 12 - ஆதவன் தீட்சண்யா

ஊரடங்கிய பின்
ஒற்றை நாயெதுவும் ஊளையிடவில்லை
ஆந்தைகளும் அமைதியாகவேயிருந்தன
கண்பறிக்கும் ஒளியம்பாய்
எத்திசையிலும் இறங்கவில்லை எரிநட்சத்திரம்
சாமக்கோடாங்கியும்
நற்செய்திகளையே யாவருக்கும் உரைத்துப்போனான்

கெட்ட சகுனங்களின் முன்னறிவிப்பற்ற அந்நடுநிசியில்
கன்னக்கோலிடுகிறான் திருடன்

ரெண்டாவதாட்டம் பார்த்து வீடுதிரும்புகிறவர்களிடம்
ஆளற்ற முக்கில் நடக்கிறது வழிப்பறி

பொறுக்கியொருவன் முறைத்து விழுங்குகிறான்
கடைசிவண்டியைத் தவறவிட்ட பெண்ணை

சாலையோரத்திலிருந்து திடுமென வெளிப்பட்டு
விபச்சாரத்துக்கு அழைப்பவளைப்போல
சீருடை மிடுக்குடன்
நகருக்கு வெளியே லாரியை மடக்குகிறான் போலிஸ்
மாமூலுக்காக

அரசாங்கமும் தன் பங்கிற்கு
நள்ளிரவிலிருந்தே நடைமுறைக்கு கொண்டுவருகிறது
விலையேற்றங்களை.

சடங்கு - ஆதவன் தீட்சண்யா

கட்டணஉயர்வைக் கண்டித்து
கட்டுக்கடங்காத கூட்டம்

ஊர்வலத்தில் பங்கேற்காமல்
வூட்டுக்குள்ளேயே இருந்த
ஒன்பதுகோடியே சொச்சம்பேரின்
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து
பிடிவாதமாய் மறுத்துவிட்டது
ஜனநாயக அரசு

கிளம்பி வந்ததைப் போலவே
ஊர் திரும்பினர் போராளிகள்
உயர்த்திய கட்டணத்தில்
ஒத்தப்பைசாவையும் குறைக்காமல் கொடுத்து.( மூன்றாம் தொகுப்பான தந்துகியிலிருந்து)

‘1984' - எஸ்.வி.ராஜதுரை

‘உயிர் எழுத்து' ஜூன் 2014 இதழில் வெளிவந்த இக்கட்டுரை, பொற்கோவில் மீதான தாக்குதல் நடந்த நாளிலிருந்து 30 ஆண்டுகளும், ‘அவசர நிலை' அறிவிக்கப் பட்ட  நாளிலிருந்து 39 ஆண்டுகளும் நிறைவுறுவதை மனதில் கொண்டு, கூடுதலான தகவல்களுடன் விரிவுபடுத்தப் பட்ட வடிவத்தில் இங்கு இரண்டு பகுதிகளாக வெளியிடப்படுகின்றது -எஸ்.வி.ஆர்.)

1
‘இறந்தவர்கள் நாள்' என்று ஆண்டு தோறும் மெக்ஸிய மக்கள் கொண்டாடும் திருவிழாவொன்றுள்ளது. அன்று அவர்கள் வண்ணவண்ணமாய், எலும்புக் கூடுகள் போன்ற உடைகளையும் மண்டையோடு போன்ற முகமூடிகளையும் அணிந்து, ஆட்டமும் பாட்டமுமாக அந்த நாளைக் கழிப்பர். இறந்தவர்கள் உயிரோடு இருக்கையில் என்ன உணவுவகைகளை விரும்பிச் சாப்பிட்டு வந்தார்களோ அவையும் அந்தந்த வீடுகளில்  சமைக்கப்படும்; இன்னும் உயிரோடு இருப்பவர்கள் உண்பதற்காக பெரிய கை கால் எலும்புகளின் வடிவங்களில் தயாரிக்கப்பட்ட ரொட்டிகளும் (‘இறந்தவர்களின் ரொட்டி') மிகப் பக்குவமாகச் சுடப்பட்டு  உணவு மேசை மீது அடுக்கியோ, வரிசைப்படுத்தியோ வைக்கப்படும்; சர்க்கரையால் உருவாக்கப்பட்ட மண்டையோடுகளும்தான்.   துலுக்கமல்லிப்  பூக்களால் அலங்கரிப்பட்ட வீடுகளில…

1984 - தொடர்ச்சி - எஸ்.வி. ராஜதுரை

கட்டுரையின் முதல் பகுதி : http://aadhavanvisai.blogspot.in/2014/06/1984.html

4
மோகன் சிங் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை நேரில் பார்த்த ராஜ்குமார், அவரது  மனைவி நெல்லிக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் ஏற்பட்ட கதி என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறான். ஐஐடி வளாகத்திலுள்ள அவர்களது வீடு சூறையாடப் பட்டதும் மோகன் சிங்கின் ஆராய்ச்சி ஆவணங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டதும் அவனுக்குக் தெரிய வருகின்றன. அந்த ஐஐடியின் நிர்வாகத் தலைவரோ, வேறு எவருமோ  இந்த அழிவு வேலைகளைத் தடுக்க முயற்சி செய்யவில்லை. அது மட்டுமல்ல, இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கிய மாணவர்களும்கூட கொலைகாரர்களாகப் பார்க்கப்பட்டனர். சில சீக்கியர்கள் தங்கள் அடையாளத்தை மறைப்பதற்காக  நீண்ட முடியையும் தாடியையும் அகற்ற வேண்டியிருந்தது.
தனது தந்தையின் செய்கை மீது ஏற்பட்ட வெறுப்பு, மேற்படிப்பு ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கப் பல்கலைக் கழகமொன்றில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்கிறான் ராஜ்குமார்.  அமெரிக்காவிலிருந்த சில அறிவியலாளர்களின் அறிவுத் திறன் மோகன் சிங்கிற்கு இருந்தது என்பதைத் தெரிந்துகொள்கிறான்.  அவனுக்கும் அவன் த…

சாவழைப்பு - ஆதவன் தீட்சண்யா