முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும் - ஆதவன் தீட்சண்யா

கக்காநாட்டின் இந்த ஜனாதிபதியும் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே பதவி விலகிவிட்டார். இது எதிர்பார்க்கப்பட்டது தான். அண்டையிலிருக்கும் உச்சாநாட்டிலும் கலீஜ்பாளையத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகள் முழுமையாக தங்கள் பதவிக்காலத்தில் நீடிக்கிறார்கள். இங்கு அப்படியா... கடந்த பத்துவருடங்களில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தேர்தலை அறிவிப்பது, நடத்துவது, பதவியேற்கிறவர் ஜனாதிபதியாகிவிட்டதன் அடையாளமாக தனது மாளிகையில் உள்ள கழிவறைக்கு சென்று திரும்பியதும் அவர் ராஜினாமா செய்துவிடுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. பக்கத்துநாடான இந்தியாவில் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் நடந்ததைப்போல கக்காநாட்டு ஜனாதிபதியை யாரும் வற்புறுத்தியோ மிரட்டியோ பதவி விலகச் சொல்வதில்லை. இவர்கள் தாங்களாகவே முன்வந்து விலகிவிடுகின்றனர்.
கடந்த பத்தாண்டுகளாக இங்கு தொடர்ந்து ஜனாதிபதியே இல்லாததால், இந்நாட்டிற்கு வருகிற வெளிநாட்டு அதிபர்களுக்கும் அரசர்களுக்கும் அவர்களோடு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வருகிற குட்டைக்கவுன் மொழி பெயர்ப்பாளினிகளுக்கும் வரவேற்பளித்து தேநீர் விருந்து கொடுக்கிற மிக முக்கியமான பணி மு…

துக்க விதி 2015 - ஆதவன் தீட்சண்யா

ழுகைக்கான கால அளவு
அழுகைக்குப் பிறகான விசும்பல் நீடிக்கும் நேரம்
பொது அமைதிக்கு குந்தகம் நேராவண்ணம்
ஒலி குறுக்கி கதறுவதற்கான உறுதிமொழி
உடன் அழுவோரின்
அங்க அடையாளங்கள் மற்றும் தேசிய அடையாள எண்
அழுகை வரி செலுத்தியதற்கான ஒப்புகைச்சீட்டு
அழுகைக்கூடத்தில் புழங்குவதற்கான அனுமதியின் நகல்
சாத்வீகத்தை நிலைநிறுத்த போலிஸ் உதைக்குமானால்
தாங்குவதற்கான உடலுறுதிச்சான்று என
நடப்பிலுள்ள விதிகளனைத்தையும் அனுசரித்து
நிரப்பப்பட்டிருந்தும்
உன் மரணத்தின் பொருட்டு அழுவதற்கான
எனது விண்ணப்பத்தை
கிடப்பில் போட்டுவைத்திருக்கிறது அரசாங்கம்

ஒப்பாரியில் தெறிக்கும் வாசகங்களுக்கு
ஒப்புதல் பெற வேண்டும் என்கிற
அதன் பிடிவாதத்துக்கும்
அழும்போது குறித்துக்கொள் என்னும்
தன்மானத்துக்கும் இடையில்
உனக்காக உகுக்கத் திரண்ட கண்ணீர்
இந்தக் கவிதையை எழுதி முடித்திருக்கிறது. புதுவிசை - செப் 2015


பா.ம.க ஆட்சி: அப்படியொரு கேடு 22016ல் கூட நடந்துவிடாது - புதுவிசை 44வது இதழ்