முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

November, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சடங்குகளைப் பற்றிய பேச்சை சதுர்வர்ணத்திலிருந்தே தொடங்க வேண்டியிருக்கிறது... (ஆயிரத்தோராவது தடவையாக)

மசியின் நிறங்கள் - ஆதவன் தீட்சண்யா

தூங்கா இரவும் தூங்கித் தொலைத்த பகலும் - ஆதவன் தீட்சண்யா

வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்து நவம்பர் 4ம் தேதி மாலை நாடு திரும்ப கோலாலம்பூரில் ஏர் ஏசியா விமானம் ஏறியபோது அதியதிசயமென மிகச்சரியாக 9 மணிக்கு வண்டி கிளம்பியது. ஆனால் கிளம்பிய விமானம் வெகுநேரமாக ஓடுபாதையில் சுற்றிக் கொண்டேயிருந்தது. ஒருவேளை இது தரைவழியாகவே இந்தியாவைச் சென்றடையும் விமானமாக இருக்குமோ என்கிற சந்தேகம்கூட வந்துவிட்டது. இது வெறும் பஸ்ஸா அல்லது ஏர்பஸ்ஸா என்கிற அளவுக்கு எனது யோசனை தாறுமாறாகிகொண்டிருக்க விமானமோ பல சுற்றுகளுக்குப் பின்னும் மேலெழும்பவேயில்லை. கடைசியில் ஏதோ இயந்திரக் கோளாறு என்று புறப்பட்ட இடத்திற்கே கொண்டுபோய் நிறுத்திவிட்டு 10 நிமிடங்கள் பொறுமை காக்குமாறு சொன்னார்கள். நமது பொறுமைதான் உலகறிந்த விசயமாயிற்றே, காத்திருந்தோம். கொஞ்சநேரத்திற்குப் பிறகு, இப்போதைக்கு சரியாகும் வழியைக் காணோம் என்று சொல்லி  கீழேயிறக்கி  அழைத்துப்போய் ஒரு அறையில் உட்காரவைத்துவிட்டார்கள். இப்போ அப்போவென நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நேரம் ஆகஆக அதற்கு முந்தைய நாள் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, காணாமல் போய் ஒருவருடமாகியும் கண்டுபிடிக்க முடியாத மலேசிய விமானம் என்று பயணிகள் விமானம் தொடர…