முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

March, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒசூர் : தன் சதையைத் தானே அறுத்துத் தின்னும் அவலம் - ஆதவன் தீட்சண்யா

"ஒசூர் எனப்படுவது யாதெனின்" தொடர், scroll.in என்ற இணைய இதழில் வெளியான எனது நேர்காணல் (http://scroll.in/article/815373/interview-there-is-no-political-idea-this-is-what-happens-when-a-society-has-been-sedated) ஆகியவற்றால் உந்தப்பட்ட பத்திரிகையாள நண்பர் ஒருவர் தான் பணியாற்றும் நாளிதழுக்காக என்னிடம் எடுத்த நேர்காணல் இது. மிக நீண்ண்ண்ண்ண்ட பரிசீலனைக்குப் பிறகு இதை வெளியிடவியலாது என்கிற தகவல் அவருக்கு சொல்லப்பட்டதை  மிகுந்த சங்கடத்துடனும் வருத்தத்துடனும் பகிந்துகொண்டார்.  அதனாலென்ன, நீங்கள் வாசியுங்கள்...1.     ஒசூர் எந்தக் காலகட்டத்தில் எந்தச் சூழலில் தொழில் நகரமாக மாறியது? ஒசூர் மக்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி கூறுங்கள்?
ஒசூர் என்பது குறிப்பிட்ட ஓர் ஊரின் பெயராக குறுகாமல் நிலவியல்தன்மை, தட்பவெப்பம், வாழ்நிலை மற்றும் பண்பாட்டு ஒருமையால் பிணைந்துள்ள ஒரு வட்டாரத்தின் பொதுப்பெயராக விரிந்துள்ளது. தற்போதைய ஒசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய முன்று வருவாய் வட்டங்களை உள்ளடக்கிய இந்நிலப்பரப்பு கடல்மட்டத்திலிருந்து 3300 அடி முதல் 4500 அடி வரையான உயரத்தில் அமைந்த மலைப்பகுதி. மிதமான வெ…

90 வாக்குகள் : இந்திய ஜனநாயகத்துக்கு ஓர் இரங்கற் பா - கிருஷ்ண காந்த்

(அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தல்கள் பற்றிய பல்வேறு கருத்துரைகளில் முக்கியமானதொன்று, மாபெரும் மனித உரிமைப் போராளி இரோன் ஷர்மிளாவின் தோல்வியைப் பற்றியதாகும். அந்தத் தோல்வி பற்றி  கிருஷ்ண காந்த் ஹிந்தியில் எழுதிய கட்டுரையை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, The Wire  இணையதள நாளிதழில்  13.03.2017 அன்று சித்தார்த் வரதராஜன் ‘Thanks for 90 Votes’: In Four Words, an Elegy for Indian Democracy வெளியிட்டுள்ளார். அதன் (ஆங்கிலம் வழித் தமிழாக்கமும் அடிக்குறிப்புகளும் : எஸ்.வி.ராஜதுரை)
மலோம், மணிப்பூர், நாள்: நவம்பர் 2, 2000. ஓர் இளம் கவிஞர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறார். இராணுவப் படைப் பிரிவொன்று அங்கு வந்து கண்மூடித்தனமாகச் சுட்டு பதினைந்து இளைஞர்களைக் கொல்கின்றது. குற்றவாளிகளையும், ஏன்  பயங்கரவாதிகளயும்கூட  இவ்வாறு நடத்த அரசியல் சட்டத்தில் இடம் இல்லை.
எவரும் இப்படி ஏன் கொல்லப்பட வேண்டும் என்று கவிஞர் கேட்கிறார். அத்தகைய குற்றத்தை அனுமதிக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராட  முடிவு செய்கிறார். எது அந்தச் சட்டம்? வடகிழக்கு மாநிலங்கள் சிலவற்றிலும் காஷ்மிர…

செத்தது நீயில்லையா... ஆதவன் தீட்சண்யா

அன்றிரவு ஏனோ சற்று முன்கூட்டியே வீடு திரும்பியிருந்தேன். விளையாடிக் கொண்டிருந்த தீட்சண்யாவோடு கொஞ்சநேரம் இருந்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தேன். எட்டரை மணி இருக்கும், யாரோ கதவைத் தட்டினார்கள். திறந்தால், தோழர்.சுப்பிரமணியம் நின்றிருந்தார். எதிர்வீட்டில் வசித்துவரும் அவர் வீட்டிற்குள் வந்தது அதுதான் முதல் தடவை. சாப்பிட விடுத்த அழைப்பை மறுத்துவிட்ட அவர், ‘பேச்சு சத்தம் கேட்டது, இந்நேரத்துக்கே வந்துட்டீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். நான் இரவில் வீடு திரும்பும் நேரம் குறித்து அக்கம்பக்கத்தில் இப்படியான நல்லபிப்ராயம். ஆனாலும் இதைச் சொல்லவா அவர் வந்தார் என்று நானும் மீனாவும் பேசியபடியே சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் மீண்டும் அவரே கதவைத் தட்டினார். என்ன விசயம் என்று நான் கேட்பதற்கு முன்பு அவராகவே சொன்னார். ‘லேலண்ட்டுக்கு எதிர்ல ஒரு ஆக்சிடென்ட்... ஸ்பாட் அவுட்டாம்... டெலிபோன் எக்சேஞ் ரவின்னு சொன்னாங்க... அதான் பதட்டத்துல வந்து பார்த்தேன். நீங்க இருக்கிறத பார்த்தப்புறம்தான் நிம்மதியாச்சு...’
எங்கள் அலுவலகத்தில் என்னோடு சேர்த்து மூன்று ரவிகள் இருந்தோம். ‘நான் இ…

நீதிக்குற்றம் - ஆதவன் தீட்சண்யா

நம்மில் யாரேனும் கொல்லப்பட்டதாக வரும் செய்தி குன்றச் செய்கிறது எனது ஆன்மாவை வெடிகுண்டில் பொருத்திய கடியாரமென அவமானத்தால் துடிதுடிக்கும் என்னிதயம் நடுங்கிச் சீறுகிறது: நாங்கள் கொல்லப்பட முடியாதவர்கள்.
கற்றாழை போல நம் திரேகத்தை கண்டந்துண்டமாய் அரிந்தெடுப்பவர்களின் நினைவுத்தைலத்தில் பதனமாகிவிடும் நமதுயிரை கொல்லும் வழியறியாது குமைகிறார்கள் -ஆம், கொல்லப்பட முடியாதது நமதுயிர்
நெற்றிப்பொட்டைத் துளைத்தேகும் தோட்டா கிட்டித்த பற்களுக்கிடையே பாயும் மின்கம்பி ஏன், விர்ரென மோதும் ரயிலினாலும்கூட  எதுவும் செய்துவிட முடியாது நம் உயிரை.
வாழும் நம் உடல்மீது ஐம்பூதங்களையும் அரசப்படைகளையும் ஏவி முடிவற்றதாய் தொடுக்கும் தாக்குதல்கள்  அற்பமான கொலைமுயற்சிகளே உயிரை விடும் கணத்தை நாமே தீர்மானிப்பதால் நம் மரணம் இயல்பானது நம்மைக் கொல்லும் வழியை எமனுமறியான்.
நமக்கஞ்சி தப்பியோடும் மரணத்தை இவ்வுலகின் விளிம்புவரை துரத்திப்போய் நாமாகவே விரும்பிச் சாகும் மாயத்தை  மை தடவி கண்டறியும் நீதிமன்றங்கள் சந்தேகத்தின் பலனை எப்போதும் குற்றவாளிகளுக்கே தந்து தம்மையும் விடுவித்துக்கொள்வதோடு நம்மை பிணக்கிடங்கில் பதப்படுத்தி கண்காணிக்கின்றன
இனி உயி…