முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

June, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நீட்"டலும் மடக்கலும் வேண்டா

நீட் விசயத்தில் தலையிட தமிழக அரசுக்கும் மக்களுக்கும் இன்னமும் வாய்ப்பிருக்கிறது என்பதை தெளிவுபடுத்தும் விதமாக தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு  எழுதிய பதிவு இது.நண்பர்களே! தோழர்களே! "நீட்" குறித்த சில விவரங்களை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். 1. துறைவாரியான நாடாளுமன்ற நிலைக்குழுவின் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை) 92வது அறிக்கை 2016, மார்ச் 8 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் தாக்கல் செய்யப்பட்டது. 2. இந்த அறிக்கை தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை கட்டுப்படுத்திடவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்திடவும் அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வை (CMET) பரிந்துரைத்தது. அது தான் தற்போதைய "நீட்" என்ற வடிவத்தை.பெற்றுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழு நுழைவுத் தேர்வு தான் பரிந்துரைத்ததே தவிர 'தகுதிக் தேர்வை'அல்ல. 3. பத்தி 5.26 யில் உள்ள இந்த பரிந்துரையில் இத்தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விளக்களித்திடவும் அவ்வாறு விலக்களிக்கப்பட்ட மாநிலங்கள் பிறகு இத்தேர்வை ஏற்க முன்வந்தால் அதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்…

மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னமும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை – ஆதவன் தீட்சண்யா

நகரின் சந்தடிமிக்க சதுக்கம். அங்கு சேவல் சண்டை தொடங்கவிருப்பதாக அறிவிப்பு ஒலிக்கிறது. அந்த தென்னமெரிக்க நாட்டினர் சேவல் சண்டையை வெறித்தனமாக ரசிப்பவர்கள். பெருங்கூட்டம் திரள்கிறது. சண்டை தொடங்குகிறது. ஆரம்பத்தில் இரு அணிகளாக பிரிந்திருந்த பார்வையாளர்கள் ஆக்ரோஷமாகவும் சாதுர்யமாகவும் சண்டையிடும் சேவலின் ஆதரவாளர்களாகிவடுகிறார்கள். இந்தச் சேவலின் மூர்க்கமான தாக்குதலை எதிர்கொள்ளும் வலுவும் நுட்பமுமற்ற மற்றொரு சேவல் துவண்டு விழுகிறது. தோற்றுக் கிடக்கும் அந்தச் சேவலை தலைக்கு மேலே தூக்கிக் காட்டும் நடுவர், அதுவே வென்றதாக அறிவிக்கிறார்.
இது அநியாயம் என்கிற கண்டனக்குரலுடன் மக்கள் நடுவரை நோக்கிப் பாய்கிறார்கள். அப்போது நடுவர் கேட்கிறார்: ‘‘தோற்றுப்போன சேவலை வெற்றிபெற்றதாக அறிவித்ததற்கு இப்படி கொந்தளிக்கிறீர்களே, தேர்தலில் தோற்றுப்போன  ஆளுங்கட்சி வெற்றிபெற்றதாக அறிவித்துக்கொண்டு இன்னமும் ஆட்சியில் நீடிப்பதை ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்? இந்த மோசடிக்கு  தேர்தல் ஆணையமும், நீதித்துறையும் உடந்தையாய் இருப்பது சரியா?’’.
மக்களுக்கு அப்போதுதான் புரிகிறது, அந்தச் சேவல் சண்டை ரசிப்பதற்காக நடத்தப்படவில்லை என்ப…

சோஷலிச எழுத்தின் அடிப்படைகள் - தோழர் விஜய் பிரசாத்

சோஷலிச எழுத்து என்பது எழுதுபவரின் மேதமை பற்றியதல்ல; அது அவர்கள் சமூகத்தோடு நடத்தும் உரையாடல் பற்றியது. இடதுசாரி எழுத்துகள் பெரும்பாலும் யாராலும் எளிதில் நுழைய இயலாத குழூஉக்குறிகள் கொண்ட, யாரும் நேரம் செலவழிக்கத் தயாராக இல்லாத, மார்க்சிய மொழியில் இருப்பவை என்றோ, அல்லது மிகு எளிமைப் படுத்தப்பட்ட பிரச்சாரம் என்றோ, கேலிச்சித்திரமாக ஆக்கப்படுகின்றன. எனினும், ஒருவரது அரசியல், அவர் புரியாதபடி எழுதுவதை, வறட்டுத்தனமாக எழுதுவதை, அல்லது சாதாரணமாக ஒரு மோசமான எழுத்தாளராக இருப்பதை, ஒருபோதும் தடுக்க முடியாது. ஆனால், இடதுசாரிகளின் வரலாறு, தம்மிடம் சொல்வதற்கு முக்கியமான செய்தி உள்ளது என்பதற்காக பேனாவைக் கையில் எடுத்துக் கொண்டு, அந்தச் செய்தி பரந்த முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கும் படைப்பாளிகள் நிரம்பியதாக இருந்து வந்துள்ளது.மேலும், ஒரு சோஷலிசப் படைப்பாளியின் குறிக்கோள்கள், அந்தக் குறிக்கோள்களை அடைவதற்கான வழிமுறைகள் எந்த விதங்களில் ஒரு முதலாளித்துவ அல்லது அரசியல்சாராத படைப்பாளியின் குறிக்கோள்கள், வழிமுறைகளிலிருந்து மாறுபடுகின்றன என்பது குறித்து அதிகம் விவாதிக்…