முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

March, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை - ஆதவன் தீட்சண்யா

தலித்துகள் மற்றும் பழங்குடிகள் மீது வன்கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. இவற்றில் பலவும் வெளியுலகத்தின் கவனத்திற்கு வருவதேயில்லை. நிகழும் வன்கொடுமைகளில் சிறுவீதமே வழக்காக பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு வழக்கு பதிவதற்கே பெரும் போராட்டங்களைநடத்த வேண்டியுள்ளது.அப்போதும் கூட காவல்துறை, புகார் செய்யும் பாதிக்கப்பட்டவர்களை பணிய வைப்பதற்காக அவர்கள் மீதும்எதிர் வழக்குகளைபொய்யாக புனைந்து புகார்களை திரும்பப் பெற வைத்து வன்கொடுமையருக்கு ஆதரவாகவே நடந்துகொள்கிறது. வெளிப்படையான சாதிய வன்கொடுமைகள் கூட எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை. களத்திலும் சட்டரீதியாகவும் போராடினால் மட்டுமே இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 15.4% அளவுக்கே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு ஆவணகத்தின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பொதுவான பிற வழக்குகளில் 33.3% அளவுக்குகுற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எஸ்.சி/ எஸ்.டி வன்கொடு…

ஆறு கோடி தீண்டாதார் ( தாழ்த்தப்பட்டோர் விடுதலை) - தோழர். பி.டி.ரணதிவே

கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ அங்கத்தினர் தோழர். பி.டி.ரணதிவே எழுதியது. மொழி பெயர்த்தவர் ஸி.எஸ்.சுப்ரமண்யம். சென்னை ‘ஜனசக்தி’ பிரஸில் பி.ராமமூர்த்தியால் அச்சிடப்பட்டு ஜனசக்தி பிரசுராலயத்தாரால் (1-6, டேவிட்ஸன் வீதி) 1945 பிப்ரவரியில் பிரசுரிக்கப்பட்டது. விலை:அணா.2இந்தச் சிறு வெளியீடு தாழ்த்தப்பட்டவர் நிலைமையைப் பற்றியது. 6கோடி மக்கள் பொருளாதாரத்துறையில் அடிமைப்பட்டு, தங்களிஷ்டப்படி வேலை செய்து வயிற்றை வளர்க்க வசதியற்றிருக்கின்றனர். அவர்கள் சமூக அந்தஸ்தும் தாழ்த்தப்பட்ட அந்தஸ்து. சுதந்திர ஒளி எல்லா பகுதிகளின் மீது வீசும் சமயத்தில், அவர்களுடைய சுதந்திர உணர்ச்சியும் வளர்ந்து வருகின்றது. தமிழ்நாட்டில் இப்பிரச்னை விசேஷ முக்யத்வம் வாய்ந்த பிரச்னை. காந்திஜி தீண்டாமை ஒழிப்பு வேலையில் தென்னாட்டுக்குத் தனிப்பங்கை வற்புறுத்தி இருக்கின்றார். இதனால் தமிழ்நாட்டில் வேலைசெய்யும் ஒவ்வொரு அரசியல்வாதியும் இப்பிரச்னையை நன்கு உணர்ந்தாக வேண்டும். இதுவிஷயமாக திட்டவட்டமான ஒரு அரசியல் கொள்கை அவசியம். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாங்கள் கூறுவது இதுதான். இவ்விஷயத்தில் முற்போக்கான தேசீய கட்சிகள் ஒரு அரசியல் கொள…

காலுள்ளோர் நடக்கக்கடவர் - ஆதவன் தீட்சண்யா

பூமியின் அங்குலந்தோறும்
உழைப்பால் செழிப்பித்து
எமது ஒவ்வொரு பருக்கையினையும்
உழுவித்து ஈந்தவர்கள்
கருகி மடியும் கனவுகளை உயிர்ப்பிக்க
தமது நிலத்தைப் போலவே
வறண்டு வெடித்த பாதங்களோடு வருகிறார்கள்

உயிரான அவர்களது நிலத்தை விழுங்கி
உலகின் மறுகோடிக்கு நெளியும் இச்சாலைவிரியனை
கருப்புக்கம்பளமென விரித்துப் போட்டு
ஒவ்வோர் அடியையும் தீரத்தால் ஊன்றி
விரையும் அவர்தம் கால்களின் போக்கில்
கண்குவித்திருக்கிறது இவ்வுலகம்

தாளாமல் மாண்டவர்களின் துயராலும்
மாளாமல் வாழ்ந்துவிடும் துணிவாலும்  வலுவேறி
வனத்தை நிலத்தை
விதையை வெள்ளாமையை மீட்டெடுக்க
ராப்பகலாய் நடந்து
கோட்டை புகும் அக்கால்களைப் பற்றியபடி
அவர்களோடே வரும் இக்கவிதை
அவர்களது வெறுங்காலுக்குச் செருப்பு
வெடித்தப் பாதங்களுக்கு களிம்பு
வீங்கிய காலுக்கு ஒத்தடத் தவிடு
அறுந்த செருப்புவாரை இழுத்துக்கோத்த ஊக்கு
அல்லது
அவர்களது ஆவேசத்தின் ரூபமான செங்கொடி

12.03.2018
சாதியற்ற தமிழர் காவியற்ற தமிழகம் - ஆதவன் தீட்சண்யா

தமுஎகச புதுவை மாநாட்டு கருத்தரங்கிற்கான விவாதக்குறிப்பு
ஒரேயொரு சாதி என்று எப்போதும் இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. சாதியென்றால் குறைந்தபட்சம் ஒன்றுக்கு மேற்பட்டதாக இருக்கவேண்டும். அப்போதுதான் கீழ்ச்சாதி, மேல்சாதி என படிநிலைப்படுத்த முடியும். சாதியம் கிடைமட்டத்தில் ஆனதல்ல. அது, செங்குத்து வரிசையிலானது.
தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் சாதிகளின் எண்ணிக்கை நிலவரம் பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) - 143, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) - 41, சீர்மரபினர்(டி.என்.சி) - 68, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் - 7 பட்டியல் சாதியினர் (எஸ்.சி) - 76, பட்டியல் பழங்குடியினர் ( எஸ்.டி) - 36
இந்த 371 சாதிகள் மட்டுமல்லாது முன்னேறிய சாதிகள் என்கிற வகைமைக்குள் அடங்கினவற்றையும் சேர்த்தால் தமிழகத்தில் சற்றேறக்குறைய 400 சாதிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பலபத்து உட்சாதிகளாகவும் பிளவுண்டிருக்கின்றன. இவற்றில் எந்தவொரு சாதியும் இன்னொரு சாதியை தனக்கு சமமாக ஏற்பதில்லை. இந்தப் போக்கு உட்சாதிகளுக்கு இடையிலும் வலுவாக இயங்குகிறது.பட்டியல் சாதியினரும், பட்டியல் பழங்குடியினரும் சாதிய கட்டமைப்புக்குள் ஒருபோதும் இல்லாதவர்கள் என்ற போத…