முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிடில் இல்லாத நீரோக்களை நோக்கி - ஆதவன் தீட்சண்யா

பரிசல் மறுபதிப்பாக வெளிவந்துள்ள "வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள்" - சிறுகதைத் தொகுப்பிற்கு நானெழுதிய முன்னுரை
தெலங்கானா விவசாயிகளின் எழுச்சியை மையப்படுத்திய இந்தக் கதைகள் குறித்து எழுதத்தொடங்கும் இவ்வேளையில் இந்திய உழைக்கும் மக்களது போராட்ட வரலாற்றின் தீரமிகு அத்தியாயத்தை எழுதுவதற்காக நாட்டின் தலைநகரில் லட்சோபலட்சம் விவசாயிகள் திரண்டிருக்கிறார்கள். அன்றாடம் படுகிற அவதிகளை ஒப்பிடும்போது இந்த உறைபனியும் கடுங்குளிரும் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற உறுதியை வெளிப்படுத்தியவாறு அவர்கள் நாடெங்குமிருந்து வந்திருக்கிறார்கள். வேளாண்துறை எதிர்கொண்டு வரும் இன்னல்கள் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத்தை உடனே கூட்டவேண்டும் என்கிற கோரிக்கை முழக்கத்தை டெல்லியெங்கும் நிறைத்தபடி அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நலிவுற்றுவரும் விவசாயத்தை நம்பி வாழமுடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை பெருகிவரும் அபாயகரமானச் சூழலில், தற்கொலை தீர்வல்ல- வாழ்வதற்காகப் போராடுவோம்- சாவதென்றாலும் போராடிச் சாவோம் என்று அவர்கள் களமிறங்கியுள்ளனர…

மறு கண்ணிலும் வெண்ணெய் அல்லது இரு கண்ணிலும் சுண்ணாம்பு -ஆதவன் தீட்சண்யா

...டபிள்யூ.டி.வைட்சரின் ‘பூஜ்ஜியத்திற்கு முன்னால் இலக்கமிடுதல்’ என்கிற கதையை நினைவுபடுத்தி இங்கு பேசிப் பார்ப்போம்.
‘‘பெண்கள் மனிதகுலத்தில் சரிபாதி. சிலநாடுகளில் ஆண்களை விடவும் பெண்கள் கூடுதலாகவே இருக்கின்றனர். மாறிய பாலினத்தவரின் விருப்பப்படி அவர்களையும் பெண்களோடு சேர்த்தால் இந்த எண்ணிக்கை மேலும் கூடும். தங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வீதத்தில் சொத்துரிமையோ வாக்குரிமையோ அரசியல் பிரதிநிதித்துவமோ இல்லை என்பது குறித்துப் பெண்கள் வெளிப்படுத்திவரும் அதிருப்தி ஒரு கோபாவேசமாக உருத்திரளக் கூடும் என்று வைட்சர் யூகிக்கிறார் அல்லது விரும்புகிறார். எனவே பெண்கள் ஓட்டு பெண்களுக்கே என்கிற தீவிர முழக்கத்தோடு பெண்களுக்காக மட்டுமேயான கட்சி ஒன்றை உருவாக்கி அவர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி எல்லாவற்றையும் நேர் செய்வதாக அந்தக் கதையில் குறிப்பிடுகிறார். சமூகத்தை வழி நடத்துவதில் புராதனக்காலம் தொட்டு பெண்களுக்குள்ள தலைமைப்பண்புகளை சுவைபடச் சொல்லிப்போகும் வைட்சர் அந்த நிலையைப் பெண்கள் மீட்டெடுத்துக் கொள்ளவேண்டும் என்று தூண்டிவிடவில்லை. ஆனால் கதை அதைத்தான் செய்தது. தங்களுக்கென தனிக்கட்சி ஒன்றை தொடங்கியாக வே…