முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கௌரவக் (?) கொலைகளின் பட்டியல் - எவிடென்ஸ் ஆய்வறிக்கை


1.ரோடு மாவட்டம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் தலித் இளைஞர் திரு.இளங்கோ (25). வர் திருப்பூரில் உள்ள கடை ன்றில் வேலை பார்த்து வந்தார். கடை ரிமையாளர் சரவணன் என்பவரின் சகோதரி மகள் செல்வலட்சுமி (18) என்பவருக்கும் தலித் இளைஞர் இளங்கோவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சாதி இந்துவான சரவணன், அவரது உறவினர்கள் சிலர் திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதிக்கு தந்திரமாக இளங்கோவை வரவைத்து கடந்த 05.08.2011 அன்று கொடூரமான முறையில் கொலை செய்தனர். ப்படுகொலை குறித்து முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் கடந்த 29.04.2012 அன்று கைது செய்யப்பட்டனர்.
2.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ருகில் உள்ள கிராமம் கலையூர். இக்கிராமத்தில் வசித்து வந்த திருச்செல்வி என்கிற சாதி இந்து பெண்ணும், டேனியல்ராஜ் என்கிற தலித் இளைஞரும் காதலித்து வந்தனர்.வர்களது காதலுக்கு திருச்செல்வியின் குடும்பத்தினர் ஏதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 05.06.2008 அன்று திருச்செல்வியை அவரது தாயார் இளஞ்சியமும், பாட்டி ராக்கும் கழுத்தை நெறித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து குற்றஏண்.90/2008 பிரிவுகள் 302, 201 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகள் 3 வருடம் 10 மாதங்கள் கழித்து கடந்த 20.04.2012 அன்று கைது செய்யப்பட்டனர்
3. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், ரெட்டியார்பாளையம் ருகில் உள்ள துறிஞ்சிக்குட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் துரை (21). பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த துரையும் சாதி இந்துவான தேன்மொழி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தேன்மொழியின் அண்ணன் ஜெயவேலும், பெரியப்பா ழுமலை என்பவரும் கடந்த 01.09.2011 அன்று துரையை ரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். ஆறுமாதம் கடந்த பிறகு குற்றவாளிகள் இருவரும் 17.03.2012 அன்று கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தானிப்பாடி காவல்நிலையத்தில் குற்ற எண்.627/2011 பிரிவு 302, 201 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
4.தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் காவல்நிலைய ல்லைக்குட்பட்ட கிராமம் ய்யாநல்லூர். இக்கிராமத்தில் வசித்து வந்த இளையராணி என்கிற தலித் பெண்ணை பசுபதி என்கிற சாதி இந்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரு கட்டத்தில் சாதியரீதியாக தம்முடைய மனைவி மீது துவேசத்தை கடைபிடித்த பசுபதி தலித் பெண் இளையராணியை கடந்த 15.09.2011 அன்று ம்மிக்கல்லால் தலையில்டித்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல்நிலைய குற்ற எண்.251/2011 பிரிவு 302 இ.த.ச. மற்றும் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 பிரிவு 3(2)(5) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
5.   திருவாரூர் மாவட்டம், ரிதுவார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாதி இந்துவான லெட்சுமி, தலித் சமூகத்தைச் சேர்ந்த சிவாஜி என்பவரை காதலித்து வந்துள்ளார். லெட்சுமியின் வீட்டில் இக்காதலுக்கு கடுமையான திர்ப்பு. இதனால் இருவரும் வீட்டை விட்டு டிவந்து திருமணம் செய்துகொண்டு நிலக்கோட்டையில் வசித்து வந்துள்ளனர். று மாதம் கடந்த பின்னர், லெட்சுமியும் சிவாஜியும் நிலக்கோட்டையில் வசித்து வருவதை றிந்த லெட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார் ஆகியோர் கடந்த 07.09.2008 அன்று லெட்சுமியின் கணவர் சிவாஜியை கடத்திச் சென்று தஞ்சாவூரில் வைத்துவரை கொலை செய்துள்ளனர்.துமட்டுமில்லாமல் தாழ்ந்த சாதி பையனுக்கு பிறந்த குழந்தையை வாழவிடமாட்டோம் ன்று கூறி லெட்சுமியையும், லெட்சுமியின் குழந்தையையும் கொலை செய்ய முயற்சி செய்தனர். இக்கொலை முயற்சியிலிருந்து தப்பித்த லெட்சுமி சிவாஜியின் குடும்பத்தாரின் பாதுகாப்பில் தற்போது நலமுடன் ள்ளார்.

6. பழனி ருகில் உள்ள .கலையமுத்தூர் என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர் திரு.பத்ரகாளி (25) /பெ. ம்மாபட்டியான். தலித் சமூகத்தைச் சேர்ந்த திரு.பத்ரகாளி, ஸ்ரீபிரியா என்கிற சாதி இந்துப்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபிரியாவின் தந்தை திரு.சீனிவாசன்,வருடைய உறவினர்கள் திரு.ராஜ்கண்ணன், திரு.பண்ணாடியான் ஆகியோர் கடந்த 04.11.2009 அன்று ஸ்ரீபிரியா தங்கியிருந்த வீட்டிற்கே சென்றுரிவாளால் வெட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தற்போது  வ்வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது.
7.சென்னை, சிமென்ட்ரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் தலித் இளைஞர் திரு.டேனியல் செல்வக்குமார். வங்கி திகாரியான டேனியல் செல்வக்குமார், சதுரா என்கிற சாதி இந்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சதுராவின் உறவினர்கள் சதுராவை கடந்த 23.03.2009 அன்று காதில் விஷம் ற்றி கொலை செய்துள்ளனர் ன்று டேனியல் செல்வக்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
8.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், கே.புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் /பெ.ஜெயராமன்.  வரும் கட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த திருமிகு. மேகலா (19) என்கிற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மேகலாவின் குடும்பத்தினர் மேகலாவிற்கு 37 வயதான ருவரை திருமணம் செய்து வைத்துள்ளனர். மேகலாவிற்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதனால் சிவக்குமாரோடு வாழ விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த மேகலாவின் குடும்பத்தினர் கடந்த 04.07.2010 அன்று சிவக்குமாரை கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்தனர். மேகலாவின் மீதும் கடுமையாக வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. முப்பது நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மேகலா பிழைத்துக்கொண்டார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை காவல்நிலையத்தில் குற்ற எண்.266/2010 பிரிவுகள் 302, 307 இ.த.ச. ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
9.தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வெற்றிவேல் (23) என்பவர் சாதி இந்து பெண் சுகன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யாவின் தந்தை தம்முடைய மகளை கடந்த 23.06.2010 அன்று படுகொலை செய்துள்ளார்.
10.திருச்சியைச் சேர்ந்த ஜெயா என்பவர் கார்த்திக் என்கிற இளைஞரை காதலித்து வந்தார். ஆத்திரமடைந்த ஜெயாவின் தந்தை செல்வராஜ் தம்முடைய மகளை 07.08.2010 அன்று படுகொலை செய்துள்ளார்
துபோன்ற படுகொலைகள் தமிழகத்தில்திகளவு நடந்து வருகின்றன.

கருத்துகள்

  1. ஆனால் இவைகள் எல்லாம் எதோ தனி மனித பிணக்குகள் என்ற ரீதியில் மூடி மறைக்கப்படும் .. என்னக் கொடுமை இது .. தலித்கள் வேறு நாடுகளுக்கு அகதிகளாக அடைக்கலம் கோரவேண்டி வரும் அபாயமும் உள்ளது ...

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா