போலி கர்ஜனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலி கர்ஜனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 18

கரை தட்டியவர்கள் -ஆதவன் தீட்சண்யா




இதோ வந்துவிட்டன முப்படைகளும்
‘ஐந்தாம்படை’யும்கூட அவர்களுடனேயேதான் இருக்கிறது

"...இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்ப நிலவியது" என்று
எம் உயிர் கரையும் ஒவ்வொரு நொடியையும்
துல்லியமாய் ஒளியொலி பரப்பிட 
24X7 செய்திச்சேனல்களும் குவிந்துவிட்டன

நைந்த சொற்களை இரந்து
முன்கூட்டியே எழுதிவைத்திருக்கும்
கண்டன அறிக்கையோடு காத்திருக்கிறார்கள்
கட்சித்தலைவர்களும்கூட

கணினித்திரையே கருகிப்போகுமளவுக்கு
அரசியல்வாதிகளைத் திட்டி நிலைத்தகவல் எழுதிவிட்டு
அடுத்த பரபரப்புக்குத் தாவும் அவசரத்துடன் 
முகப்புத்தகப் போராளிகளால் திரட்டப்படுகின்றன
கார்ட்டூன்களும் வசைகளும்

ஏதொன்றையும் பிராஜக்டாக காட்டி
பெருந்தொகைப் பெயர்த்துவிடும் ஆசையில் 
ஏதேதோ பெயர்களில்  பதுங்கியலையும் என்.ஜி.ஓக்கள்
எம்மிலும் தீவரமாய் பேசுகின்றன எம்மைப்பற்றி

கறிகாய் வாங்கி ஆக்கியவித்து தின்றுவிட்டு
கவலைகொண்டதான பாவனையோடு வந்திருக்கும் இந்த ஆதவனோ
சந்தடிச்சாக்கில் எம்மைக் கச்சாப்பொருளாக்கி
கவிதையொன்றை யாத்துவிடும் எத்தனிப்பிலிருக்கிறான்

கடலிறங்கிப் போராடும் எமக்கான ஆதரவாய்
அவரவர் ஊரின் குளம்குட்டையில் இறங்கவோ
ஆங்காங்கே மணலுக்குள் புதையவோ  முயலாது 
கரையிலிருந்தே கர்ஜிக்கிறார்கள் இவர்கள்

கடல்மூழ்கிச் சாகும் எம்மை கணக்கெடுத்து அறிவிக்க
மறுகரையில் காத்திருக்கிறது அரசாங்கம்.



துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...