காத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காத்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜனவரி 2

வேண்டுதல்- ஆதவன் தீட்சண்யா

அப்பாவுக்கு வியாபாரம்
அம்மாவுக்கு மஞ்சள் குங்குமம்
அண்ணனுக்கு வேலை
அக்காவுக்கு வரன்
தம்பிக்கு படிப்பு

கோடுதாண்டாத வேண்டுதல்
எல்லோருக்கும்

முன்னிரவில் கூட்டமொழிய
ஊர்க்காக்கும் பெருமானை
உள்வைத்துப் பூட்டி கிளம்பினார் அர்ச்சகர்
காலைவரை
கதவு உடைக்கப்படாமல் இருக்கணுமென்று
நெஞ்சுருக வேண்டி.