வேண்டுதல்- ஆதவன் தீட்சண்யா

ப்பாவுக்கு வியாபாரம்
அம்மாவுக்கு மஞ்சள் குங்குமம்
அண்ணனுக்கு வேலை
அக்காவுக்கு வரன்
தம்பிக்கு படிப்பு

கோடுதாண்டாத வேண்டுதல்
எல்லோருக்கும்

முன்னிரவில் கூட்டமொழிய
ஊர்க்காக்கும் பெருமானை
உள்வைத்துப் பூட்டி கிளம்பினார் அர்ச்சகர்
காலைவரை
கதவு உடைக்கப்படாமல் இருக்கணுமென்று
நெஞ்சுருக வேண்டி.

2 கருத்துகள்:

 1. உள்வைத்துப் பூட்டி கிளம்பினார் அர்ச்சகர்
  காலைவரை
  கதவு உடைக்கப்படாமல் இருக்கணுமென்று
  நெஞ்சுருக வேண்டி.

  மிகச்சரியான உண்மை நன்றி

  பதிலளிநீக்கு
 2. ஹா ஹா ஹா... நம்மைப் படைத்தவரை நாம் படைத்தோம். நம்மைக் காப்பவரை நாம்தானே காக்க வேண்டும். :)

  பதிலளிநீக்கு