ஆட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 15

அலை என்பது சொல்லல்ல – ஆதவன் தீட்சண்யா

விடிந்தால் வாக்கு எண்ணிக்கை, விடியற்காலையில் ஒரு வேட்பாளர் அதுவும் அந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தப்பட்டவர் காணவில்லை என்றால் அந்த நாடு எப்படி இருக்கும்? ‘‘பிரதமர் வேட்பாளரையே காப்பாற்ற முடியாத உங்களுக்கு வண்டி எதுக்கு வாகனம் எதுக்கு என்று காவல்துறையினரின் வாகனங்கள் கொளுத்தப்பட்டிருக்கும். குறிவைத்து அடித்து நொறுக்கப்பட்டதில் மாற்றுக்கட்சிகளின் அலுவலகங்கள் ஒன்றுகூட மிஞ்சியிருக்காது. பூட்டப்பட்டிருக்கும் கடைகளை உடைத்து கொள்ளையிடுவதில் ஒரு கும்பல் மும்முரமாக ஈடுபட்டிருக்கும். கைக்கு கிடைத்ததை தூக்கிக்கொண்டு நாலாத்திக்கிலும் சனங்கள் ஓடும். தீய்ந்து கருகும் நெடியும் அடர்ந்துயரும் புகையும் ஒவ்வொருவரது உள்ளிருந்த பகையையும் இழுத்துக் கொண்டு வந்து நடுத்தெருவில் கடாசும். எதெதற்கோ எவ்வப்போதோ உருவாகி கணக்குத் தீர்க்கப்படாமல் உறுமிக் கொண்டிருந்த முன்விரோதமெல்லாம் நேர்செய்யப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில். கோடாலியும் குத்தீட்டியும் அரிவாளும் கொடுவாளும் ஆட்களின் கைகளாய் நீளும். அந்த நாட்டுக்கு மயானமென்று தனியாக எதுவும் தேவைப்படாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிணங்கள் வீழும். வன்முறையையும் கலவரத்தையும் நியாயப்படுத்தி பிரதமர் வேட்பாளரின் வாரீசுகள் ‘ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது இப்படியான சேதாரம் ஏற்படத்தான் செய்யும்’ என்று அறிக்கை விடுவார்கள். தூங்கும் குழந்தையைப்போல சற்றுமுன்புவரை சாந்தமாக தோற்றமளித்துக் கொண்டிருந்த அந்த நாடு அதிகாலை வேளையில் கலவரத்தாலும் வன்முறையாலும் திணறத் தொடங்குவதை தொலைக்காட்சிகள் துல்லியமாக பரப்பி எஞ்சிய பகுதிகளையும் உசுப்பிவிடக் கூடும்’’ என்றெல்லாம்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அன்டெமாக்ரட்டிக்கான்பேட்டை என்று பூர்வோத்திரப் பெயர் கொண்ட லிபரல்பாளையம் இன்னும் அமைதியாகவேதான் இருக்கிறது. இன்று நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் வென்று அடுத்துவரும் ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேட்பாளர் காணாமல் போய்விட்டதை முதலில் அறிந்த அவரது வீட்டுக் காவலாளி அந்த திகிலூட்டும் விசயத்தை யாரிடமாவது சொல்லும் வரைக்குமான அமைதி அது.

மலைகள்.காம் இணைய இதழில் வெளியாகியுள்ள இக்கதையை முழுமையாக வாசிக்க 
 

ஞாயிறு, டிசம்பர் 29

முக்காலம் - ஆதவன் தீட்சண்யா

உடலை தளர்வாக வைத்துக்கொண்டு
இறுக மூடிக்கொள்ளுங்கள் கண்களை
இப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறீர்கள்
நீங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்
விழித்துக்கொள்கிறது உங்களது ஆழ்மனம்
 
ஆழ்மனதில் உறைந்துள்ள நினைவுகள் கிளர்ந்து 
பால்யகாலத்திற்கு திரும்புகிறீர்கள் நீங்கள்
ஆமாம்... இப்போது உங்கள் வயது
40..25... 10, 9, 8.... 1... 0.9, 0.7...
அதாவது இன்னும் நீங்கள் பிறக்கவேயில்லை
இன்னும் பிறந்திராத நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள்?
-கருப்பையில்
நல்லது, கருப்பை எப்படியிருக்கிறது?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு
 
ஆழ்மனதில் தங்கியுள்ள அச்சங்களின் துரத்தலில்
நீங்கள் உங்களது முதுங்காலத்திற்குச் செல்கிறீர்கள்
முதுமைகூடிய நீங்கள் என்னவாகிறீர்கள்...?
- செத்துப்போகிறேன்
சாவுக்குப்பிறகு எங்கேயிருக்கிறீர்கள்?
-குழிக்குள்
குழிவாழ்க்கை எப்படியிருக்கிறது?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு
 
அறிதுயில் நிலைக்குச் சென்ற நீங்கள்
வாழ்வின் சூட்சுமங்களை அறிந்தவராகி
என் கட்டளைப்படி
நிகழ்காலத்திற்குத் திரும்புகிறீர்கள் இப்போது
ரிலாக்ஸ்.... பி ரிலாக்ஸ்.... ரிலாக்ஸ்....
மெதுவாக கண்களைத் திறந்திடுங்கள்... மெதுவாக...
இப்போது என் கண்களைப் பாருங்கள்
குட்...
அப்படியே ஊரை பாருங்கள்
என்ன தெரிகிறது... ?
- ஒண்ணும் தெரியல, கருங் கும்முனு ஒரே இருட்டு.

சக்சஸ்… சக்சஸ்…
நீங்கள் தமிழ்நாட்டுக்கே திரும்பிவிட்டீர்கள். 
நன்றி: ஆனந்தவிகடன், 1.1.2014

வியாழன், நவம்பர் 10

இன்றைய நிலவரம் - ஆதவன் தீட்சண்யா

காலுக்குத் தொப்பியும் தலைக்கு செருப்பும் அணியுமாறு
இந்த நிமிடம்வரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை

கண்ணிருக்கும் இடத்தில் கண்ணும்
காதிருக்கும் இடத்தில் காதுமே இருந்துவிட்டுப்போகட்டுமென்று
மாட்சிமை தங்கிய அரசு
குடிமக்களை இன்றும் அனுமதித்திருக்கிறது கருணையுடன்

தொடர்ந்தும் வாய்வழியாகவே உண்பதை மாற்றுவது குறித்து
இன்றைய அமைச்சரவைக்கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்

ஒரு மாறுதலுக்காகவும் காற்றை மிச்சப்படுத்தவும்
மூக்கின் ஒரு துவாரத்தை தூர்த்து மூடும் திட்டம்
நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது

உலகிலேயே முதன்முறையாக
தண்டவாளத்தில் பேருந்து தார்ரோட்டில் ரயில்
துறைமுகத்தில் விமானம் விமானநிலையத்தில் கப்பல் என்று
அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வ மாற்றங்களுக்கு ஆதரவளிக்குமாறு
குடிமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள்

பிரசவ ஆஸ்பத்திரியை சுடுகாட்டுக்கு மாற்றியுள்ள அரசு
நாட்டையே சுடுகாடாக மாற்றும் திட்டம் படிப்படியாக நிறைவற்றப்படும்

கோன் எவ்வாறோ குடிக்களும் அவ்வாறேயானபடியால்
அவர்களும்
எதையும் எப்போதும்
ஒரே இடத்தில் நீடித்திருக்கவிடமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நன்றி: ஜூனியர் விகடன், 13.11.11

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...