ஆமாம், புதியபாதைகளில் சென்றால் மட்டுமே இடிந்தக் கரையை அடைய முடியும்... ஏற்கனவே போடப்பட்ட பாதைகள் இடிந்தக்கரைக்கு பதிலாக வேறேங்கெங்கோ இழுத்துப் போகும் கெடுவாய்ப்புகளுடன் விரிந்திருக் கின்றன. அந்தச்சாலைகளில் நீங்கள் உங்கள் உழைப்பையும் அறிவையும் விற்பதற்காக ஊர்விட்டு ஊர் போய் வரலாம். அல்லது சரக்கு பரிவர்த்தனை செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்களேகூட சரக்காக மாறி உங்களையே விற்றுக் கொள்வதற்கும் கூட போய் வரலாம். ஆனால் அரசாங்கம் அந்தச் சாலைகளை வேறு நோக்கங்களுக்காகத்தான் அமைத்திருக்கிறது. மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் தேவைப்பட்டால் தனது படைகளை விரைந்தனுப்பி அவர்களை ஒடுக்கவும் ‘பேரமைதியையும் சட்ட ஒழுங்கையும் நிலைநாட்டவும்’ என அரசின் விரிவான திட்டங்களுடன் சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன. எனவே அதிகாரப்பூர்வமான சாலைகள் எப்போதும் அரசின் தேவைகளுக்கானவை என்பதறிக. அவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் பயன்படுத்த முடியும். அதற்குப்பிற்கு நீங்கள் சுயமான பாதைகளை உருவாக்கிக்கொண்டால்தான் இலக்கை அடைய முடியும். அதல்லாமல் அரசாங்கப் பாதைகளை முழுசுமாக நம்பிப்போனால் ஏதாவதொரு போலிஸ் சோதனைச்சாவடியில் கொண்டுபோய் உங்களை அடைத்துவிடும். பிறகென்ன, நீங்கள் கட்டாயம் தேசத்துரோகிதான். உங்களுக்குத் தெரியும்தானே, எல்லோரது நெற்றியிலும் குத்தவதற்கு காவல்துறையிடம் அந்த ஒரேயொரு முத்திரைதான் இருக்கிறது.
இப்படி மனசிலும் உடம்பிலும் ஏழு தேசத்துரோக முத்திரைகள் குத்தப்பட்ட தோழர்.சுப.உதயகுமாரையும் அவரது ஒருங்கிணைப்பில் அணுஉலையை எதிர்த்துப் போராடி வருகிற மக்களையும் சந்திப்பதும்கூட அரசின் பார்வையில் தேசத்துரோகம்தான். ஆகவே, இந்த தேசம் நமக்கெல்லாம் இழைத்துவரும் துரோகங்களுக்கு பதிலடியாக ஒரு எதிர்க்கணக்கை தொடங்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் உடனடியாக செல்லவேண்டிய இடம் இடிந்தக்கரைதான். தேசம், துரோகம், விசுவாசம் என்பவற்றின் இன்றைய வரையறைகளையும் சமன்பாடுகளையும் மாற்றிவிட விரும்புகிறவர்களும்கூட இடிந்தக்கரைக்கு சென்று தேசத்துரோகிகளின் எண்ணிக்கையை பெரும்பான்மையாக்கிவிட வேண்டிய தேவை இருக்கிறது.
தமது வாழ்வாதாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் உயிர் வாழும் உரிமைக்காகவும் அறவழியில் சமரசமின்றி போராடிக்கொண்டிருக்கும் மக்களோடு எமக்கிருந்த ஒருமைப்பாட்டை தெரிவிக்க இடிந்தக்கரைக்கு கிளம்பினோம். நாங்கள் செல்வதற்கு முந்திய நாள்தான், உண்மையறிய வந்திருந்த பதினோரு பேர் கொண்ட குழுவினரை மாவோயிஸ்டுகள் என்று சித்தரித்து கைது பண்ணியிருந்தது காவல்துறை. (மாவோயிஸ்டுகளாகவே இருக்கட்டுமே, அதற்காக அவர்களை கைதுசெய்துவிடுவது என்ன நியாயம்?). எனவே இன்று கெடுபிடிகள் கூடுதலாக இருக்கும் என்று நுட்பமறிந்தவர்கள் எம்மை எச்சரித்தார்கள்.
வழிகளை மறித்து காவல்துறை ஆங்காங்கே நிறுவியிருந்த சோதனைச் சாவடிகளில் சிக்காமல் எங்களை இடிந்தக்கரைக்கு அழைத்துப்போகும் பொறுப்பை தோழர்.நாறும்பூநாதன் ஏற்றிருந்தார். இதற்காக அவர் முதல்நாளே பலவழிகளிலும் சுற்றிக்கொண்டு இடிந்தக்கரைக்கு சென்று நோட்டம்விட்டு திரும்பியிருந்தார். தோழர்.புஷ்பராயன் போன்றவர்கள் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், எளிதில் பிடிபட்டுவிடாத வழியொன்றை அவர் தேர்ந்தெடுத்து அழைத்துப்போனார். செல்லும் வழியின் உடனடி நிலவரம் குறித்து அவரும் கிருஷியும் ஆங்காங்கு பலரை தொடர்புகொண்டு விசாரித்த வண்ணமிருந்தனர். ஒருவேளை பிடிபட்டுவிட்டால் தப்பிப்பதற்காக சொல்ல வேண்டிய பொய்கள் ஒரு பாடம்போல எங்கள் நுனிநாக்கில் இருந்தது. இடிந்தக்கரைக்குப் போய்வந்த குற்றத்திற்காக இந்த வண்டிமீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பதாகவும் இன்றைய கதி என்னவாகுமோ தெரியவில்லை என்றும் தனது கவலையை பகிர்ந்துகொண்டார் ஓட்டுநர். கண்டம் விட்டு கண்டம் வந்து ஒரு கம்பனி தனது உயிர்க்கொல்லி உலைகளை பகிரங்கமாக நிறுவிவிட்டு சவடால் பேசிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதேநாட்டின் குடிமக்களை இதேநாட்டு குடிமக்கள் சந்திப்பதற்கு ஏதோ வேறுநாட்டு எல்லையை சட்டவிரோதமாக கடப்பதுபோல ஒளிந்தும் பதுங்கியும் செல்ல வேண்டியிருக்கிறதே என்கிற அங்கலாய்ப்பு எனக்கு. இவ்வளவு கெடுபிடிகளை ஒரு அரசாங்கம் தன் சொந்த மக்கள் மீது திணிப்பதன் மூலம் அது வேறு யாருக்கான அரசாங்கமாகவோ இங்கிருந்து செயல்படுகிறது என்பது மறுபடி நிரூபணமாகிறது. திரும்பிய பக்கமெல்லாம் ஆர்மி செக்பாயிண்ட்டுகளால் நிறைக்கப்பட்ட கொடூரபூமியாம் இலங்கைக்கு சென்று வந்த நினைப்பு எனக்குள் திடுமென தெறித்து நின்றது.
ஒருவழியாக இடிந்தக்கரையை நெருங்கிவிட்டிருந்தோம். ஆனால் அப்போதும் ஆபத்திருந்தது. நல்லெண்ணம் கொண்ட ஜீப்காரர் ஒருவர் எங்களை செம்புழுதி புரளும் கொடித்தடம் ஒன்றில் அழைத்துப்போயிருக்காவிட்டால் போலிசிடம் மாட்டித்தானிருப்போம். போலிசுக்கு சிக்காமல் தப்பித்து வந்துவிட்ட சாகச மனநிலைக்குப் பதிலாக எந்த காலத்தில் நாம் வாழ்கிறோம் என்ற கேள்வியே எங்களை அலைக்கழித்தது. அவமானமாக இருந்தது.
போராட்டக்குழு பொறுப்பாளர் ஒருவர் எங்களை வரவேற்று அழைத்துப் போனார். போராட்டத்திடலின் பந்தலில் அமர்ந்திருந்த பெண்களும் குழந்தைகளும் ஆண்களும் யாரென்றே தெரியாத எங்களை கைதட்டி வரவேற்றார்கள். இவ்வளவு தூரம் தேடி வந்துவிட்டவர்கள் கட்டாயம் தங்களை ஆதரிக்கிறவர்களாகத்தான் இருக்க முடியும் என்று அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து கை தட்டி வரவேற்றார்கள்.
லேட்டாக வருகிறவர்களை வெளியே துரத்தி முட்டிப்போட வைக்கும் பள்ளிக்கூட வழக்கப்படி பார்த்தால், உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி 425 நாட்கள் கழித்து மிகமிக தாமதாமாக வந்திருக்கிற நம்மை முட்டிப்போட வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களோ நம்மை இப்படி நேரடியாக மேடை ஏற்றுகிறார்களே என்றேன் தோழர்.ச.தமிழ்ச்செல்வனிடம். தப்பு செய்கிறவர்களையும் தாமதமாக வருகிறவர்களையும் பெஞ்ச் மீது ஏற்றுகிற வழக்கமும் நடப்பில் இருக்கிறதுதானே, இது அப்படியானதென விளங்கிக்கொள் என்றார் அவர். அப்படியுமல்ல, ...நாண நன்னயம் செய்கிறார்கள் போலும் என்றே நினைத்துக்கொண்டேன்.
நாங்கள் வந்த சேர்ந்த தகவல் கிடைக்கப்பெற்ற சிறிதுநேரத்தில் சுப.உதயகுமார், புஷ்பராயன், முகிலன் உள்ளிட்ட தோழர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அணு உலையைத் தடுக்க சட்டரீதியாக போராடிவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன், வெற்றிச்செல்வன், ‘பூவுலகின் நண்பர்கள்’ வழக்கறிஞர் சுந்தரராஜன், பொறியாளர் சுந்தராஜன், வள்ளியூர் செம்மணி ஆகியோரும் வந்தனர். நான் கீழே இறங்கி ஓடிப்போய் உதயகுமாரின் கைகளைப் பிடித்துக்கொண்டேன். எதுவும் பேசத்தோன்றவில்லை. பரவசத்தினாலோ பிரேமையினாலோ அல்லாமல் நான் வாழுங்காலத்தின் மெய்யான போராளிகளுள் ஒருவரான அவரிடம் என் தோழமையை தெரிவித்துவிட்டது போன்றதான ஒரு நிம்மதியில் விளைந்த மௌனம் அது. தமுஎகச தோழர்கள் அனைவருமே என்னொத்த இதே மனநிலைக்குத்தான் ஆட்பட்டிருந்தார்கள். புதுவிசை இதழ்களை கொடுத்தபோது மிகுந்த வாஞ்சையோடு பெற்றுக்கொண்டார்.
இடிந்தக்கரைப் பெண்கள் தொழிலையும் போராட்டத்தையும் ஒரேகளத்தில் இணைத்திருந்தார்கள். உண்ணாவிரதத்தில் பங்கேற்றபடியே பீடி சுற்றிக் கொண்டிருந்த அவர்கள் உரைகளை கேட்கத் தயாரானார்கள். பத்திரிகையாளர் கவிதா முரளிதரனும் எழுத்தாளர் சந்திராவும் அவர்களோடு கலந்து உட்கார்ந்திருந்தார்கள். அக்டோபர்29ம் தேதி நடக்கவிருக்கும் சட்டசபை முற்றுகைப் போராட்டத்திற்கான செலவுகளைச் சமாளிப்பதற்காக கடந்த இரண்டு நாட்களாக கடலுக்குப் போனவர்களைத் தவிர எஞ்சியிருந்த ஆண்களும் பந்தலுக்குள் குழுமியிருந்தார்கள். நாட்டுமக்களிடையே போராடும் குணமும், சூடும் சொரணையும், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும், நாட்டுப்பற்றும் வளரவேண்டும் என்பதற்காக இடிந்தக்கரை மக்களின் கால்பட்ட மணலை அள்ளிப்போய் இந்த நாடு முழுதும் தூவிவிட்டு வரவேண்டும் போலிருந்தது எனக்கு.
கூட்டம் தொடங்கியது. எங்களை, ஒவ்வொருவரது பெயரையும் சொல்லி வரவேற்றார்கள். எளிமையும் தெளிவும் தீர்க்கமும் ஆவேசமும் செறிந்த தனது உரையினூடாக உதயகுமார் சொன்னார் ‘‘இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்...’’ போராட்டம் தொடங்கி இவ்வளவு காலம் கழித்து இப்போது எதற்கு வந்தீர்கள் என்று அவர் கோபப்பட்டிருந்தாலோ குத்திக்காட்டியிருந்தாலோ கூட நாங்கள் தலைவணங்கி நின்றிருந்திருப்போம். ஆனால் அவரது வார்த்தைகளை கவனியுங்கள், ‘‘இவர்களை வரவேற்று நம்மோடு வைத்துக்கொள்ள விரும்புகிறோம்...’’. இவ்வளவு ஆற்றல் மிகுந்த சொற்களை தெரிவு செய்து பேசுவதற்காக அவர் மெனக்கெடவில்லை. மனசின் ஆழத்திலிருந்து ஆற்றொழுக்காக சொற்கள் வந்து கவ்வுகிறது எம்மை. வெற்றியை நோக்கி போராட்டத்தை உந்தித்தள்ளுவதில் மெய்யான அக்கறையுள்ள ஒருவரால் மட்டும்தான் இப்படியான அரவணைப்புடன் பேசமுடியும் என்று நம்புகிறேன். தங்களிடம் வந்திருக்கும் யாரையும் இழந்துவிடக்கூடாது, எவ்வளவு குறைவான பலம் கொண்டவர்களையும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்காக தம்மோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவரது அணுகுமுறை எந்தவொரு மனிதமனத்தையும் வென்றெடுக்கும் வல்லமை கொண்டது.
நாட்டின் சுதந்திரமும் சுயசார்பும் இறையாண்மையும் ஏகாதிபத்தியங்களுக்கு பலியிடப்படுவதையும் அதை எதிர்க்கும் தேசப்பற்றுள்ள குடிமக்கள் மீது அடக்குமுறை ஏவப்படுவதையும் ஆனாலும் பணியாத மக்களின் போர்க்குணத்தையும் விவரித்து மேலேறியது அவரது உரை. தனக்குள் இருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை அங்கிருந்தவர்களின் மனதிலெல்லாம் ஊறச் செய்து கொண்டிருந்த அவரைத்தான் அந்நிய ஏஜண்ட் என்று நாரவாயணசாமிகள் அவதூறு பொழிகிறார்கள். திருடிக்கொண்டு ஓடுகிறவன் துரத்திப்பிடிக்க வந்தவனைப் பார்த்து திருடன் திருடன் கத்தினானாமே அப்படித் தான் இது. ஆட்சியாளர்களைவிட இந்த நாட்டின் நலனுக்கு ஆகப்பெரும் அச்சுறுத்தலாக வேறு யார் இருந்துவிட முடியும்?
‘‘... அடுத்து என்னதான் செய்வது என்று நாங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்... கடலுக்குள்ளும் இறங்கிவிட்டோம். மணலுக்குள்ளும் புதைந்துவிட்டோம். இந்த அரசாங்கம் எதற்கும் செவிசாய்யக்கவில்லை... இனி, மேலே மண்னெண்ணையை ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொள்வது மட்டும் தான் எங்களுக்கு மிச்சமிருக்கும் வழியா என்று கவலைப்பட்டுக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள்... தாமதமாக வந்துவிட்டதாக நினைத்து வருத்தப்படாதீர்கள். மிகவும் தேவையான ஒரு காலகட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள். இடதுசாரிகளாகிய நீங்கள் எங்களின் Natural ally’’ என்று எங்களை விளித்தச் சொன்ன அவர் மக்களைப் பார்த்துச் சொன்னார், ‘இவர்கள் நமது இயற்கையான சொந்தங்கள்... இவர்கள் இங்கு வந்திருப்பது நமக்கு பலம். இவர்கள் தமது எழுத்தாலும் பாட்டாலும் பேச்சாலும் நடிப்பாலும் அணுஉலையின் தீமைகளையும் நம் போராட்டத்தின் நியாயங்களையும் உலகெங்கும் கொண்டு செல்வார்கள்...’ என்று. ஆமோதிப்பதுபோல மக்கள் கரவொலி எழுப்பினார்கள். இந்த வார்த்தைகளுக்கெல்லாம் நாங்கள் எந்தளவு பொருத்தமானவர்கள் என்கிற கேள்வி என்னை உலுக்கியது. மற்ற தோழர்களும்கூட அவ்வாறே உணர்ந்திருக்கக்கூடும்.

தமுஎகச மாநிலக்குழு சார்பில் சென்றிருந்த 14 பேர் சார்பாக மாநிலத்தலைவர் ச.தமிழ்ச்செல்வனும், பொதுச்செயலாளர் சு.வெங்கடேசனும், நானும் அந்த மக்களிடையே பேசினோம். கடலிறங்கிப் போராடுகிறவர்களுக்கு ஆதரவாக கரையிலேயே நின்று கொண்டு பேசுவதில் உள்ள சங்கடங்களாலும் உளைச்சல்களாலும் நாங்கள் இயல்பாக பேசமுடியாமல் திண்டாடினோம். அந்தந்த ஊரில் உள்ள நீர்நிலைகளில் ஆதரவாக ஏன் இறங்கவில்லை என்கிற கேள்வி உள்ளுக்குள் வாதிட்டுக்கொண்டிருக்கும்போது எப்படித்தான் இயல்பாக பேசமுடியும்? இது குற்றவுணர்ச்சியினால் எம்மை தாழ்த்திக்கொண்டு அமுங்கியக் குரலில் தரப்படும் வாக்குமூலமல்ல. எங்களது மனநிலையை அப்பட்டமாக இப்படித்தான் வெளியில் வைக்கமுடியும்.
வழக்கறிஞர் குழுவுக்கு எளிய பாராட்டுதல்களும் அவர்களது ஏற்புரைகளும் முடிந்த பின் தோழர்.புஸ்பராயனின் உரையோடு கூட்டம் நிறைவுற்றது. 425வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்துவரும் இடிந்தக்கரை மக்கள் எங்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் நாணும் படியாக அவர்கள் இப்படியாக நன்னயங்களை செய்து கொண்டேயிருந்தார்கள். மாலையில் திருநெல்வேலியில் நடக்கவிருந்த கண்டனக்கூட்டத்தில் பங்கெடுக்க வேண்டியிருந்ததால் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.
தோழர்.ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த கண்டனக்கூட்டத்தில் தஞ்சை, குமரி, விருதுநகர், தேனி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டதோழர்கள் திரளாக பங்கேற்றிருந்தனர். இடிந்தக்கரை சென்றவர்களில் சென்னை கலைக்குழு அசோக் தவிர மற்ற தோழர்களாகிய சு.ராமச்சந்திரன், எஸ்.கருணா, உதயசங்கர், இரா.தெ.முத்து, ஜேசுதாஸ், ஈரோடு தி.தங்கவேல், எஸ்.இலட்சுமணப்பெருமாள், நாறும்பூநாதன், தேனி சீருடையான், பேரா.கணேசன், லட்சுமிகாந்தன், ஆனந்தன், நான், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினோம். முரசு கலைக்குழு ஆனந்தனும், கரிசல் கிருஷ்ணசாமியும் தம் பாடல்களால் வலுவூட்டினர். இடிந்தக்கரை மற்றும் திருநெல்வேலி கூட்டங்களில் நாங்கள் பேசியவற்றின் தொகுப்பு:
அணுஉலையை எதிர்ப்பது தேசத்துரோகம் என்றால், இங்கு அணுஉலைதான் தேசமாக உருவகிக்கப்படுகிறதா? அந்தளவுக்கு நச்சும் நாசகாரத்தன்மையும் கொண்டததான் இந்த தேசம் என்றால் அதை ஒப்புக்கொள்ள மறுத்துப் போராடுகிறவர்களோடு நாங்கள் ஒருமைப்பாடு கொள்கிறோம்.
எதிர்க்கவேண்டும் என்பதற்காக இம்மக்கள் அணுஉலையை எதிர்க்கவில்லை. அது தங்களது உயிர்வாழும் உரிமையையும் வாழ்வாதாரங்களையும் பறிக்கக்கூடியது என்பதை உலகளாவிய அனுபவங்களிலிருந்து உணர்ந்துகொண்டதனால் எதிர்க்கிறார்கள். அவ்வாறு எதிர்ப்பதற்கும் போராடுவதற்கும் அவர்களுக்குள்ள ஜனநாயக உரிமையை மறுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் அடக்குமுறைகளை ஏவுகின்றன. அறவழியில் போராடிய அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவரைக் கொன்றிருக்கிறது காவல்துறை. தமிழக மீனவர்களை தினம்தோறும் கடல்வெளியில் தாக்கி சித்திரவதை செய்கிற இலங்கை ராணுவத்தினரை விரட்டுவதற்கு ஒருமுறைகூட தனது விமானத்தைப் பறக்கவிடாத மத்திய அரசு அணுஉலைக்கு எதிராக போராடுகிறவர்கள்மீது விமானத்தை மோதவிட்டு ஒருவரைக் கொன்றது. எளிய மக்களை ஒடுக்க முப்படைகள். யார் பயங்கரவாதிகள் என்பதற்கு இங்கு விளக்கம் எதுவும் தேவையில்லை.
ஒரு சின்னஞ்சிறு காவல் நிலையத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை பதிந்து கேடுகெட்டவகையில் ஒரு உலகச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒருவேளை, அணுஉலை விசயத்திற்கு ஒரு தீர்வு வந்துவிட்டாலும்கூட இந்த மக்கள் வாழ்நாள் முழுக்க காவல் நிலையத்திற்கும் நீதிமன்றத்துக்கும் அல்லாடிச் சாகுமளவுக்கு ஒவ்வொருவர் மீதும் பல வழக்குகள். இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்துசெய்யுமாறும், தொடரும் கைது நடவடிக்கைகளை நிறுத்துமாறும், சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் ஆட்சியாளர்களின் மென்னியைப் பிடித்துக் கேட்கும் திராணி கொண்ட பேராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

போராடும் மக்களுக்கு ஆதரவாக பேசுவதோ இயக்கம் நடத்துவதோ திருநெல்வேலி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல வெளியார் யாரும் இடிந்தக்கரைக்கு சென்றுவிட முடியாதபடி தடுக்கப்படுகின்றனர். மீறிச் செல்பவர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். இடிந்தக்கரைக்கு வாகனங்களை அனுப்பக்கூடாது என்று எல்லா டாக்ஸி ஸ்டாண்டுகளுக்கும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அணுஉலை எதிர்ப்பு தொடர்பான நிகழ்வுகளுக்கு இடம் தரக்கூடாது என்று மண்டபங்களும் எச்சரிக்கப்பட்டுள்ளன. வழக்கு வாய்தா சிறை என்று அச்சமூட்டி நாட்டின் இதரபகுதி மக்களை இடிந்தக்கரை பக்கம் திரும்பவொட்டாமல் செய்கிற தந்திரத்தை போலிஸ் கையாள்கிறது. திருநெல்வேலி மாவட்டம் போலிசுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ என்று ஐயுறுமளவுக்கு அங்கு கருப்புச்சட்டங்களும் ஆள்தூக்கும் கொடுமைகளும் நடந்துகொண்டிருக்கின்றன. சோதனை என்கிற பெயரில் கொள்ளையர்களைப்போல நள்ளிரவுகளில் கதவுடைத்துப்புகும் போலிசார் பெண்களிடம் அத்துமீறி நடப்பதையும் ஆபாசமாக பேசுவதையும் கண்டு பதறாதவர்களுக்கு மனசாட்சி என்று ஏதேனும் இருக்கிறதா? தேவாலயத்தில் நுழைந்து வழிபாட்டுக்குரிய சிலையை சேதப்படுத்தி அதன் தலையில் மூத்திரம் பெய்யுமளவுக்கு வக்கரித்துப்போனவர்களுக்கு காவல்துறை என்று பெயர் வைத்த மூடர்கள் யார்? அறவழியில் போராடிக்கொண்டிருப்பவர்களை இப்படியெல்லாம் ஆத்திரமூட்டி ஒரு நேரடி மோதலுக்குள் இழுத்துவிட்டு நரவேட்டையாடுவதற்கு காவல்துறை தந்திரமாக வேலைசெய்தவருகிறது.
இடிந்தக்கரை மக்களை தனிமைப்படுத்தி சோர்வடையச் செய்து பணியவைக்கும் இத்தகைய இழிமுயற்சிகளுக்கு எதிராகப் போராடாமல் இருப்பவர்களும் மௌனம் காப்பவர்களும் ஆட்சியாளர்களைவிடவும் ஆபத்தானவர்கள். 17 தலித்துகள் தாமிரபரணிக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட நாளிலும்கூட வழக்கம்போலவே அல்வாவும் மிக்சரும் தின்று கொண்டிருந்த திருநெல்வேலியின் மிஸ்டர்.பொதுஜனத்திற்கும் விதவிதமான காரணங்களை கண்டுபிடித்து தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டு செயலற்று கிடப்பவர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. உலகமயமாக்கலின் மூன்றாம் பத்தாண்டுக்குள் நாடு நுழைந்திருக்கும் இவ்வேளையில், மக்களின் வாழ்வாதரங்களை அபகரிபபதும் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதும் தீவிரமடைவது தவிர்க்கவியலாதது. எனவே மக்களும் வாழ்வா சாவா என்று போராட களமிறங்கும் காலமிது. போராடுவதற்கான வெளியை- உரிமையை தக்கவைத்துக்கொள்வதன் அடையாளமாக இடிந்தக்கரை மக்களின் போராட்டம் வெற்றிபெற்றாக வேண்டும். அவர்களது உழைப்பும் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையும் வீணாகிவிடக்கூடாது. இந்த மக்களின் போராட்டம் தோற்றுப் போகுமானால் எல்லா நிலைகளிலும் நாமே நம்மை தோற்கடித்துக்கொள்ள தயாராகிவிட்டோம் என்று அர்த்தம்.
மக்களின் அச்சம் போக்கப்பட வேண்டும் என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லி அவர்களை பயந்தாங்கொள்ளிகள் போல சித்தரிப்பவர்கள் உண்மையில் அவர்களை தம்மையறியாமலே அவமதிக்கிறார்கள். இவ்வளவு அட்டூழியங்களை இழைக்கின்ற போலிசையும் அடக்குமுறைகளை ஏவுகிற மத்திய மாநில அரசுகளையும் அவர்களின் முப்படைகளையும், அரசு சார்பு ஊடகங்களின் அவதூறுகளையும் எதிர்த்து சமரசமில்லாது சற்றும் அஞ்சாது போராடிவரும் இடிந்தக்கரை மக்கள் கேவலம் இந்த அணுஉலையைக் கண்டா அஞ்சுகிறார்கள்? இல்லை, அவர்களது அச்சம் அணுஉலை பற்றியதல்ல. அது, அணுஉலையின் தீமைக்கு பலியாகிவிடக்கூடாதே என்று மனிதகுலதத்தின் மீது கொண்டிருக்கும் அச்சம். உலகளாவிய மானுட நேயத்திலிருந்தும் இதர உயிர்களையும் இந்த புவிக்கோளத்தையும் நேசிப்பதிலிருந்தும் எழுகிற அச்சம். அவர்கள் தமது சொந்த உயிர் பற்றி பயந்திருந்தால் இவ்வளவு கொடிய அடக்குமுறைகளுக்கு தாக்குப்பிடிக்காமல் என்றைக்கோ சரணடைந்திருப்பார்களே?
இவ்வளவு எதிர்ப்புக்கிடையிலும் அணுமின்உலை பாதுகாப்பானது என்கிறார்கள் ஆட்சியாளர்கள். அப்படியானால் சர்வதேச நிபுணர்களும் மக்கள் பிரதிநிதிகளும் உள்ளூர்ச்சமூகத்தினரும் அங்கம் வகிக்கிற சுயேச்சையான ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கலாமே? பாதுகாப்பு ஏற்பாட்டில் எவ்வளவு அசட்டையாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் உளறியதே சாட்சியமில்லையா? அணுமின் உலை பாதுகாப்பானது என்றால், குடியரசுத்தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புப்பகுதிகள், ஆளுநர் மாளிகைகள், சட்டமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர் விடுதிகள் போன்ற இடங்களில் அததற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்திச் செய்யுமளவிலான அணுமின் உலைகளை நிறுவி அவை உண்மையிலேயே பாதுகாப்பானவை என்று நிரூபிக்கும்பட்சத்தில் உதயகுமாரும் போராட்டக் குழுவினரும் இடிந்தக்கரை மக்களும் எவ்வித தயக்கமுமின்றி ஏற்றுக் கொள்வார்கள். கோன் எவ்வாறோ குடிமக்கள் அவ்வாறு. தலைவர்களே, நாடாள்பவர்களே, இப்போதாவது, இந்த விசயத்திலாவது உதாரணப் புருஷர்களாகவும் புருஷிகளாகவும் நடந்து காட்டுங்கள், நாங்கள் உங்களை பின்பற்றி வருகிறோம்.
13 ஆயிரம் கோடியை செலவிட்டு அணுமின் நிலையத்தைக் கட்டியாச்சு, அவ்வளவு பணத்தை விரயமாக்கினால் நாடு தாங்காது, எனவே அணுமின் உலை இயங்கட்டும் என்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. 700 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தமிழக சட்டமன்றக் கட்டிடம் இப்போது பாம்பு பல்லி பாச்சை தவக்களை விளையாடுவதற்காக கைவிடப்பட்டுள்ளது. சூழலியலாளர்களது எச்சரிக்கைகளையெல்லாம் புறந்தள்ளி தொடங்கப்பட்ட சேதுக்கால்வாய் திட்டம் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை விழுங்கிவிட்டு இப்போது மதவாதப்பார்வையினால் மணலேறி தூர்ந்துகொண்டிருக்கிறது. வருடாவருடம் பட்ஜெட்டில் முதலாளிகளுக்கும் வர்த்தகச்சூதாடிகளுக்கும் வழங்கும் வரிச்சலுகைகள் எத்தனை ஆயிரம் கோடிகள் என்பது நிதியமைச்சருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். வாராக்கடன் என்று தள்ளுபடி செய்யப்படும் தொகையைக்கூட அவர் மட்டுமே அறிவார். இப்போதெல்லாம் இங்கு ஊழல்களும் கூட லட்சங்கோடிகளுக்கு குறைவாக நடப்பதேயில்லை. தனிநபர்களின் கௌரவப் பிரச்னைக்காகவும் மதவாதத்திற்காகவும் லாபவெறியினாலும் இந்த நாட்டு மக்களின் பணம் லட்சலட்சங்கோடி நாசமாகிக் கொண்டிருப்பதுடன் ஒப்பிடும் போது 13 ஆயிரம் கோடி என்பது அற்பத்தொகை. 13ஆயிரம் கோடி பெரிதா ஒரு உயிர் பெரிதா என்றால் எழுத்தாளர்களும் கலைஞர்களும் உயிரின் பக்கமே நிற்போம்.
நாட்டுமக்கள் நிம்மதியாக வாழ்வதற்காக இந்த 13 ஆயிரம் கோடி விரயம்தான் ஆகட்டுமே, என்ன குடிமுழுகிவிடப் போகிறது? அட, அப்படியேதான் 13ஆயிரம் கோடி விரயத்தால் இந்த நாடு நாசமாகிக் போய்விடும் என்றால் போய்த் தொலையட்டும், வாழ்கின்ற வேட்கையில் எமது மக்கள் தங்களுக்கான ஒரு வலிய நாட்டை விருப்பம்போல உருவாக்கிக்கொள்வார்கள்.