ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும் விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால் “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும் நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அதாவது, இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு 1996இல் வெளிவந்தபோதே, இந்தக் கருத்தை நீங்கள் சொல்லிவந்ததாக நீங்களே கூறியுள்ளீர்கள்.
அதாவது உங்கள் ‘ நினைவுப் பிழை', ஏறத்தாழ பதினாறு ஆண்டுகாலமாக இருந்து வருகிறது என்பதுதானே இதற்கு அர்த்தம்?
மேலும், அன்னிய நிதியைக் கொண்டு ஆராய்ச்சி செய்து எழுதுவர்கள் என்று 1996இலேயே உங்களுக்குத் தெரிந்திருக்குமானால், அப்படிப்பட்டவர்களின் நூலை வெளியிடக்கூடாது என்று என் மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கும் நீங்கள் எப்போதாவது என்னிடம் சொல்லியிருக்கலாம் அல்லவா?
உங்களது அப்பட்டமான,அபாண்டமான பொய் அம்பலப்பட்ட பிறகே, என்னிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள்.
தோழர்கள் எஸ்.வி.ஆரும் வ.கீதாவும் எழுதிய ‘Towards a Non-Brahmin Movement:From Periyar to Iyoothee Thass' என்னும் நூல், அவர்கள் இருவரும் தமிழில் எழுதிய நூலின் ஆங்கில மொழியாக்கமே தவிர வேறு அல்ல என்று கூறியுள்ளதன் மூலம், அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைக்கூட நீங்கள் படித்ததில்லை என்பதை அம்பலப்படுத்திக் கொண்டீர்கள்.
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோர் பற்றிய எனது மதிப்பீடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறீர்கள். அது உங்கள் சொந்த விஷயம். ஆனால், விடியல் பதிப்பகத்தின் செயல்பாடுகளிலிருந்தும் அதன் நோக்கங்களிலிருந்தும் இந்த இருவரையும் பிரித்துப் பார்க்க நான் மறுக்கிறேன். இது என் உரிமை; கடமை.
பெரியாரியம்,அம்பேத்கரிய,பெண்ணிய, மார்க்ஸியம் பேசும், எழுதும் சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கருத்துநிலைரீதியாக எதிர்கொள்ளத் திராணியற்று, அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவதன் மூலம், அவர்களது செயல்பாடுகளை முடக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்- சங் பரிவாரக் கூட்டத்தின் முகவராகவே நீங்கள் செயல்படுகிறீர்கள். ஏகாதிபத்தியத்தின் கள்ளக்கூட்டாளிகளாக உள்ள இந்த சங் பரிவாரத்தைச் சேர்ந்த அமைப்புகள் எத்தனை அன்னிய நிதியில் திளைக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் ஏதேனும் ‘ஆராய்ச்சி' செய்ததுண்டா?
உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது.
பெ.சிவஞானம் (விடியல் சிவா)
கோவை,24.06.2012