முகவரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முகவரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், பிப்ரவரி 9

முகவரி - ஆதவன் தீட்சண்யா

பறையர் சக்கிலியர் பள்ளர் சேரி
அல்லது
அம்பேத்கர் காலனியே
 என்
கிரகம்
உலகம்

நாடு
மாநிலம்
மாவட்டம்
வட்டம்
ஒன்றியம்கூட
அவையே

அவற்றால் ஒதுக்கப்பட்டு
புறத்தே இருப்பவை எவையானாலும்
நானறியாதவை
மற்றும்
நானறியக்கூடாதென்று நீங்கள் விரும்பியவை.