எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 23

சடங்கு - ஆதவன் தீட்சண்யா

 கட்டணஉயர்வைக் கண்டித்து
கட்டுக்கடங்காத கூட்டம்

ஊர்வலத்தில் பங்கேற்காமல்
வூட்டுக்குள்ளேயே இருந்த
ஒன்பதுகோடியே சொச்சம்பேரின்
பெரும்பான்மைக்கு மதிப்பளித்து
பிடிவாதமாய் மறுத்துவிட்டது
ஜனநாயக அரசு

கிளம்பி வந்ததைப் போலவே
ஊர் திரும்பினர் போராளிகள்
உயர்த்திய கட்டணத்தில்
ஒத்தப்பைசாவையும் குறைக்காமல் கொடுத்து.



( மூன்றாம் தொகுப்பான தந்துகியிலிருந்து)

துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...