யுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யுத்தம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 8

எதிரிக்கு... -ஆதவன் தீட்சண்யா

இறகின் மென்மையைக் கொண்டு
பறவையின் வலிமையை
எடை போடும் நீ
அவ்வாறே என் கோபத்தையும்
தவறாகக் கணிக்கிறாய்
எச்சரிக்கை மணியை
ஒலிக்கச்செய்த பிறகே
என் யுத்தம் தொடங்குமென எண்ணுகிறாய் போலும்
உன் அடிமைச்சேனையில்
திரள மறுத்தபோதே
தொடங்கிவிட்டது எனது யுத்தம்
வெறும் உடலெனத் துச்சமாய் எண்ணி தாக்கவரும் நீ
என் ஆயுதமும் அதுவேயெனக் காண்பாய்

06.01.2020

புதன், ஜூன் 20

ஜாக்கிரதை - செங்கருநீலன்

எதிரி ஏந்தியிருப்பதினும்
வலியதும் நவீனமானதுமென்று
நான் ஏந்தியிருப்பதோ
ஜிகினாத்தாள் சுற்றிய அட்டைக்கத்தி

காற்றில் சுழற்றினும் கைப்பிடி உடையும்
உறையுள் செருகினும் முனையது மழுங்கும்
சாணை பிடிக்கவே ஏலாக்கத்தி
சண்டை பிடிப்பது எங்ஙனம்

உக்கிரமாக சத்தம் எழுப்பி
யுத்தம் போலே தோற்றம் கிளப்பி
கத்தியைக் காப்பதே லட்சியமாகுது
கபடம் பூசிய ஜிகினா மினுங்குது.

தகதகத்தொளிரும் கத்தியைக் கண்டு
தப்பியோடி பதுங்கினர் எதிரிகள்
என்னுடன் போரிடும் இழிவினைச் சுமக்க
இனியெவரேனும் களத்தினிலுண்டா?



துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...