புதன், ஜூன் 20

ஜாக்கிரதை - செங்கருநீலன்

எதிரி ஏந்தியிருப்பதினும்
வலியதும் நவீனமானதுமென்று
நான் ஏந்தியிருப்பதோ
ஜிகினாத்தாள் சுற்றிய அட்டைக்கத்தி

காற்றில் சுழற்றினும் கைப்பிடி உடையும்
உறையுள் செருகினும் முனையது மழுங்கும்
சாணை பிடிக்கவே ஏலாக்கத்தி
சண்டை பிடிப்பது எங்ஙனம்

உக்கிரமாக சத்தம் எழுப்பி
யுத்தம் போலே தோற்றம் கிளப்பி
கத்தியைக் காப்பதே லட்சியமாகுது
கபடம் பூசிய ஜிகினா மினுங்குது.

தகதகத்தொளிரும் கத்தியைக் கண்டு
தப்பியோடி பதுங்கினர் எதிரிகள்
என்னுடன் போரிடும் இழிவினைச் சுமக்க
இனியெவரேனும் களத்தினிலுண்டா?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மிபூ - ஆதவன் தீட்சண்யா

  ஓவியம்: அரஸ், நன்றி: ஆனந்தவிகடன், 31.08.2025 மிதமான வெப்பத்துடன் தகதகவென சுடர்ந்துகொண்டிருந்த சூரியன் மறைந்து கொண்டிருந்தது. சற்றைக்கெல்...