விடிந்தால் வாக்கு எண்ணிக்கை, விடியற்காலையில் ஒரு வேட்பாளர் அதுவும் அந்த
தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தப்பட்டவர் காணவில்லை என்றால்
அந்த நாடு எப்படி இருக்கும்? ‘‘பிரதமர் வேட்பாளரையே காப்பாற்ற முடியாத
உங்களுக்கு வண்டி எதுக்கு வாகனம் எதுக்கு என்று காவல்துறையினரின் வாகனங்கள்
கொளுத்தப்பட்டிருக்கும். குறிவைத்து அடித்து நொறுக்கப்பட்டதில்
மாற்றுக்கட்சிகளின் அலுவலகங்கள் ஒன்றுகூட மிஞ்சியிருக்காது.
பூட்டப்பட்டிருக்கும் கடைகளை உடைத்து கொள்ளையிடுவதில் ஒரு கும்பல்
மும்முரமாக ஈடுபட்டிருக்கும். கைக்கு கிடைத்ததை தூக்கிக்கொண்டு
நாலாத்திக்கிலும் சனங்கள் ஓடும். தீய்ந்து கருகும் நெடியும் அடர்ந்துயரும்
புகையும் ஒவ்வொருவரது உள்ளிருந்த பகையையும் இழுத்துக் கொண்டு வந்து
நடுத்தெருவில் கடாசும். எதெதற்கோ எவ்வப்போதோ உருவாகி கணக்குத்
தீர்க்கப்படாமல் உறுமிக் கொண்டிருந்த முன்விரோதமெல்லாம்
நேர்செய்யப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில். கோடாலியும்
குத்தீட்டியும் அரிவாளும் கொடுவாளும் ஆட்களின் கைகளாய் நீளும். அந்த
நாட்டுக்கு மயானமென்று தனியாக எதுவும் தேவைப்படாத அளவுக்கு எங்கு
பார்த்தாலும் பிணங்கள் வீழும். வன்முறையையும் கலவரத்தையும் நியாயப்படுத்தி
பிரதமர் வேட்பாளரின் வாரீசுகள் ‘ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது இப்படியான
சேதாரம் ஏற்படத்தான் செய்யும்’ என்று அறிக்கை விடுவார்கள். தூங்கும்
குழந்தையைப்போல சற்றுமுன்புவரை சாந்தமாக தோற்றமளித்துக் கொண்டிருந்த அந்த
நாடு அதிகாலை வேளையில் கலவரத்தாலும் வன்முறையாலும் திணறத் தொடங்குவதை
தொலைக்காட்சிகள் துல்லியமாக பரப்பி எஞ்சிய பகுதிகளையும் உசுப்பிவிடக்
கூடும்’’ என்றெல்லாம்தான் எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் அப்படி எந்த
ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அன்டெமாக்ரட்டிக்கான்பேட்டை என்று பூர்வோத்திரப்
பெயர் கொண்ட லிபரல்பாளையம் இன்னும் அமைதியாகவேதான் இருக்கிறது. இன்று
நடக்கவிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் வென்று அடுத்துவரும்
ஐந்தாண்டுகளுக்கு நாட்டை ஆள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர
வேட்பாளர் காணாமல் போய்விட்டதை முதலில் அறிந்த அவரது வீட்டுக் காவலாளி அந்த
திகிலூட்டும் விசயத்தை யாரிடமாவது சொல்லும் வரைக்குமான அமைதி அது.
மலைகள்.காம் இணைய இதழில் வெளியாகியுள்ள இக்கதையை முழுமையாக வாசிக்க
//தீய்ந்து கருகும் நெடியும் அடர்ந்துயரும் புகையும்//
பதிலளிநீக்குஹைதராபாத்துல ஆரம்பிச்சுட்டாங்களாம்.
http://www.satrumun.net/2014/05/10-2-3.html