மாலைக்கண் - ஆதவன் தீட்சண்யா

ன்ன சொல்லிவிட்டீர் என்னைப்பற்றி
அரங்கதிர நிகழ்த்திய சொற்பொழிவில்
வானவில் தோய்த்த ஓவியத்தில்
ஆளுயரம் தடித்த காவியத்தில்

உயிர்த்துயிர்த்து எழுந்தும் உயிரிழந்தேன்
அடிமைகள் கலகம் தொடங்கி

நிறவெறியொழிப்புத் தொட்டு ஒவ்வொன்றிலும்
மிருகாதிகாரத்தால் பின்னும் கொன்றனர்
மிச்சமிருந்த வழிகளில்

நீங்களோ
பூவிதழ்மென்மை புலர்காலை பனித்துளி
அந்திவானம் ஆழ்மனவோட்டம்
வண்ணத்துப்பூச்சி வசீகரப்பாட்டு
குழந்தையின் சிரிப்பு குமரியின் மதர்ப்பு
எல்லாம் படைத்தபின் என்னைப் படித்தீர்
வெறும்
பெயர்களாய் செய்தியாய்
ஸ்பார்ட்டகஸ்... நந்தன்... பகத்சிங்
பெஞ்சமின் மொலாய்ஸ்*
ஜெர்மனியர்... இலங்கையர்...
ரூப்கன்வர்... வெண்மணியர்... சப்தர் ஹஷ்மி...*
மண்டைக்காடு... விழுப்புரம்..
பிஹார்... ராஜஸ்தான்
எமர்ஜென்சி... துர்க்மான் கேட்...
சின்னாம்பதி... வாச்சாத்தி...

இப்போதும்
அழுந்தும் பாறைகளின் அடியிலிருந்து விலகி
முளைவிட முடியாத விதையின் சோகத்தோடு
நிகழும் என் மரணச்செய்தி வெளியாகும்:
"வேலையில்லா வாலிபர் தற்கொலை
ஸ்டவ் வெடித்து இளம்பெண் மரணம்
மதக் கலவரத்தில் 736 பேர் பலி
சோமாலியா காளஹஸ்தியில் பட்டினிச்சாவு''
இதிலும்
கவித்துவம் அழகியல் தேடி
இல்லையென்று கண்புதைப்பீர்
வேறெங்கோ

வேறென்ன சொல்லிவிடப் போகிறீர்
என்னைப் பற்றி
அரங்கதிர நிகழ்த்தும் .......................

எனக்காக
உமது
பேனா தூரிகை மேடை சதங்கை
எதுவும் அசையாத போதும்
உமக்கும் எனக்கும்
மனிதன் என்பதே பொதுப்பெயரா
நீரென்ன செய்வீர்
ஆயிரம் சிந்தனை
"கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத்தும்பி...

( * இங்கு நான் சக கலைஞன் என்பதற்காகவும் நீங்கள் கசியாது வாசீத்தீர்).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக