புதன், ஜூன் 25

ஜாக்கிரதை: இரவு மணி 12 - ஆதவன் தீட்சண்யா

ரடங்கிய பின்
ஒற்றை நாயெதுவும் ஊளையிடவில்லை
ஆந்தைகளும் அமைதியாகவேயிருந்தன
கண்பறிக்கும் ஒளியம்பாய்
எத்திசையிலும் இறங்கவில்லை எரிநட்சத்திரம்
சாமக்கோடாங்கியும்
நற்செய்திகளையே யாவருக்கும் உரைத்துப்போனான்

கெட்ட சகுனங்களின் முன்னறிவிப்பற்ற அந்நடுநிசியில்
கன்னக்கோலிடுகிறான் திருடன்

ரெண்டாவதாட்டம் பார்த்து வீடுதிரும்புகிறவர்களிடம்
ஆளற்ற முக்கில் நடக்கிறது வழிப்பறி

பொறுக்கியொருவன் முறைத்து விழுங்குகிறான்
கடைசிவண்டியைத் தவறவிட்ட பெண்ணை

சாலையோரத்திலிருந்து திடுமென வெளிப்பட்டு
விபச்சாரத்துக்கு அழைப்பவளைப்போல
சீருடை மிடுக்குடன்
நகருக்கு வெளியே லாரியை மடக்குகிறான் போலிஸ்
மாமூலுக்காக

அரசாங்கமும் தன் பங்கிற்கு
நள்ளிரவிலிருந்தே நடைமுறைக்கு கொண்டுவருகிறது
விலையேற்றங்களை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...