முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொங்காரம் - ஆதவன் தீட்சண்யா

நெளியாத்து பரிசலாட்டம் தட்டுவட்டம் போட்டு சுத்தி நவுரும் நெலா இல்லை. அது மூஞ்சி காட்ட மூணு நாளாகும். நெறஞ்ச அமாவாசை. பேயும் பிசாசும் பித்தேறி நாயா நரியா அலையும் ராக்காடு. கிலியேத்தும் இருட்டு கிர்ருனு நாலா திக்கும்.

இருட்டு பழகுனதும் எதெது எங்கெங்கன்னு நெப்புப்படுது. கூமாச்சியா உச்சி சிலுப்பி நிக்கிது கரடு. குட்டான் பிடிக்காத ஜல்லி குத்தேரியா குமிஞ்சிருக்கு அடிவாரத்துல. அந்தாண்ட, வெள்ளெருக்கஞ்செடியில ஆரம்பிச்சு கிளுவமரம் வரைக்கும் மால் போட்டு அளந்து கட்டுன குட்டான் அச்சுவெல்லமாட்டம் லச்சணமா கெடக்கு. சக்கை புடிச்சி எகனைமொகனையா கெடக்குற பெருங்கல் எப்படிப் பாத்தாலும் நூறு லோடுக்கு தாங்கும்.

இங்கிருந்து பாத்தா சாளையில எரியற ராந்தல் காத்துக்கு தூரியாடறது தெரியுது. எப்பவும் போல இப்பவும் உள்ளார ஆளுங்க இருக்காங்கன்னு நம்ப வைக்கறதுக்கு அதே போதுந்தான். ஆனா இருக்காங்களா இல்லையானு சோதிக்க இந்த பக்கம்பராந்திரியில யாருமில்ல இப்ப. ஜாமயாம கணக்கில்லாம தொலவுல சன்னமா ரயில் சத்தம் கேக்குது.

வெடிஞ்சா ஞாயித்துக்கெழம. ஞாயிறு ஒண்ணு, சோமாரம் ரண்டு, செவ்வா மூணு, செவ்வான்னைக்கு காத்தாலதான் லோடுக்…

காக்கைக் குருவி உங்கள் ஜாதி - ஆதவன் தீட்சண்யா

வீட்டைமாற்றிக்கொண்டுவேறெங்கும்போய்விடலாமாஎன்றுமிகுந்ததயக்கத்தோடு தான்இவன்கேட்டான். அருங்கிளியும்அதேயோசனையில்தான்புழுங்கிக்கிடந்திருப்பாள்போல. இவனதுமுன்மொழிவுக்காகவேகாத்திருந்தவளைப்போலஉடனடியாய்வழிமொழிந்துஒப்புதல்சொன்னாள். வீடுமாறிப்போவதுஅவர்களுக்கொன்றும்புதுஅனுபவமல்ல. மாறுவதற்கானகாரணம்தான்ஒவ்வொருதடவையும்மாறும்.
வேறுஊருக்குமாற்றலாகிப்போகும்வரைஇதிலேயேஇருந்துவிடலாம்என்னுமளவுக்குபிடித்துப்போய்தான்ஒவ்வொருவீட்டிலும்குடியேறுவார்கள். அப்படியேமாற்றலில்செல்லும்நிலைவந்தாலும்இந்தஊரில்- இதேவீட்டிலேயேஇருந்துகொண்டுவேலைக்குப்போய்வரவேண்டியதுதான்என்கிறஅளவுக்கும்கூடசிலவீடுகள்பிடித்துப்போவதுண்டு. ஆனால்குடியேறிமூன்றாம்வாரத்தில்முன்பணத்தைக்கூடவாங்கிக்கொள்ளாமல்காலி பண்ணிக் கொண்டுதெறித்தோடும்அளவுக்குஒம்பாதஏதோவொன்றுஅங்குநடந்துவிடுகிறது. உப்புத்தண்ணி, காற்றோட்டமில்லை, போதாவெளிச்சம், கொசுக்களின்பிரியம், அண்டைஅயலார்பிணக்கு,  வீட்டுஉரிமையாளர்