முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

May, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கையூட்டும் விதமாக எழுதப்பட்ட இரங்கற்பா - ஆதவன் தீட்சண்யா

நாம் கொலைகாரர்களின் காலத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம்
நாமாக நம்மை ஒப்புக்கொடுத்தும்
அவர்களாக நம்மை கைப்பற்றியும்
நாம் வந்து சேர்ந்திருக்கும் இந்த கொலைகாரர்களின் காலம்
திடுமெனத் தொடங்கிவிடவில்லை
எத்தனையோ நூற்றாண்டுகளில் இயல்பாக சாகவேண்டியவர்களை
ஏற்கனவே கொன்றுவிட்டுத்தான்
இன்றைய தேதிக்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள்

கொலைகாரர்களின் காலம் தொடங்கிவிட்டபடியால்
எப்போதும் கொன்றுகொண்டேயிருப்பார்களென
அஞ்சியஞ்சி சாகவேண்டியதில்லை
அவர்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும் காலத்தில்
நாம் உயிரோடிருந்துவிட்டுப்போவதை ஆட்சேபிக்குமளவுக்கு
அப்படியொன்றும் அவர்கள் கொடூரர்களல்ல

கொலைகாரர்கள் என்பதற்காக
அவர்கள் எல்லோரையும் கொன்றுவிடுவதில்லை
தற்காத்துக்கொள்ளும் சுதாரிப்பின்றி
ரேஷன் கார்டுக்கும் தேசிய அடையாள அட்டைக்கும் விண்ணப்பித்து
நாமாக நமது பெயரை பகிரங்கப்படுத்திக்கொள்ளாதவரை
அவர்களாகவே நம்பெயரை
கொல்லப்படுகிறவர்களின் பட்டியலில் சேர்த்துவிடப்போவதில்லை
உயிர்வாழ்வதை
ஓர் உரிமையாகக் கோராத வரைக்கும்
எவரையும் கொல்லாத அவர்களது ஆளுகையில்
நிம்மதியாகத்தான் இருக்கப்போகின்றன பிணங்கள்

தைரியமாக இருங்கள்
கொல்லப்படுவோம் என்கிற அ…

லிபரல்பாளையத்தில் தேர்தல் - ஆதவன் தீட்சண்யா

1.கடவுள் வாழ்த்து
நற்சிந்தனை நன்மொழியையும், அத்தகு நன்மொழி நல்லெழுத்தையும், அந்த நல்லெழுத்து நல்ல வாசகர்களையும் பெற்றுத்தருமாதலால் யார் மனதையும் தொந்தரவு செய்யாமல் இந்தக் கதையையாவது எழுதுவதற்கான வல்லமையை அல்லது கருணையை எனக்கு கடவுள் வழங்குவாராக. அப்படி வழங்குவதற்கு சத்தும் சாமர்த்தியமும் இல்லாதிருக்கும் பட்சத்தில் கடவுள் என்ற ஸ்தானத்தில் என்ன மயித்துக்கு இருக்கணும் என்று தற்கொலை செய்துகொள்ளும் துணிச்சலாவது அந்த கடவுளுக்கு வந்து தொலைப்பதாகுக.
2.ஜேம்ஸ்பாண்ட்ஸ் 00007777.5
2008 ஏப்ரல் 1 அல்லது மற்றவர்களை முட்டாளாக்கும் நாள். இடம் - கொள்ளை மாளிகை. ஜி-19 ( கேங்-19 ) நாடுகளின் பொச்சி மாநாடு. (உச்சிமாநாடுகளை நடத்தி எதுவும் விளங்காமல் போனதால் நேமாலஜி படி இந்த புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.) கொள்ளைக்குப் போனாலும் கூட்டு ஆகாது என்ற முதுமொழியைப் பொய்யாக்கி, கூட்டுச் சேர்ந்தால்தான் கொள்ளையடிக்க முடியும் என்ற புதுவிதியின் கீழ் இணைந்திருக்கும் இந்த நாடுகளின் தலைவர்கள் பளபளக்கும் சூட்கேசுகளுடன் மாநாட்டரங்கில் நுழையும்போது உலகத்தின் கெட்ட நேரம் காலை 10 மணி என்று காட்டியது. உலகத்தில் எஞ்சியிருக்கும் ஓட்டை…

அலை என்பது சொல்லல்ல – ஆதவன் தீட்சண்யா

விடிந்தால் வாக்கு எண்ணிக்கை, விடியற்காலையில் ஒரு வேட்பாளர் அதுவும் அந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தப்பட்டவர் காணவில்லை என்றால் அந்த நாடு எப்படி இருக்கும்? ‘‘பிரதமர் வேட்பாளரையே காப்பாற்ற முடியாத உங்களுக்கு வண்டி எதுக்கு வாகனம் எதுக்கு என்று காவல்துறையினரின் வாகனங்கள் கொளுத்தப்பட்டிருக்கும். குறிவைத்து அடித்து நொறுக்கப்பட்டதில் மாற்றுக்கட்சிகளின் அலுவலகங்கள் ஒன்றுகூட மிஞ்சியிருக்காது. பூட்டப்பட்டிருக்கும் கடைகளை உடைத்து கொள்ளையிடுவதில் ஒரு கும்பல் மும்முரமாக ஈடுபட்டிருக்கும். கைக்கு கிடைத்ததை தூக்கிக்கொண்டு நாலாத்திக்கிலும் சனங்கள் ஓடும். தீய்ந்து கருகும் நெடியும் அடர்ந்துயரும் புகையும் ஒவ்வொருவரது உள்ளிருந்த பகையையும் இழுத்துக் கொண்டு வந்து நடுத்தெருவில் கடாசும். எதெதற்கோ எவ்வப்போதோ உருவாகி கணக்குத் தீர்க்கப்படாமல் உறுமிக் கொண்டிருந்த முன்விரோதமெல்லாம் நேர்செய்யப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில். கோடாலியும் குத்தீட்டியும் அரிவாளும் கொடுவாளும் ஆட்களின் கைகளாய் நீளும். அந்த நாட்டுக்கு மயானமென்று தனியாக எதுவும் தேவைப்படாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிண…