முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மற்றமையை உற்றமையாக்கிட... - ஆதவன் தீட்சண்யா

வாசுகி பாஸ்கரின் "மற்றமையை உற்றமையாக்கிட"  நூலுக்கு எனது முன்னுரை

முகநூல் பதிவுகளில் பலதும் படிக்காமலே கடக்கத்தூண்டும் நன்னோக்கிலானவை. அவற்றை படித்தாலும் பாதகமில்லை, அந்தளவுக்கு தொந்தரவற்றவை. ஆனால் வாசுகி பாஸ்கரின் பதிவுகள் நம்மை யோசிக்கச் செய்பவை. குறிப்பிட்ட பிரச்னையில் நாம் வைத்திருக்கும் நிலைப்பாடு சரியானதுதானா என்கிற கேள்வியை எழுப்பி தொல்லை படுத்தக்கூடியவை. இப்படியும் கூட ஒரு விசயத்தை பார்க்க ஏலுமோ என வியப்பைத் தருவதாகவோ இப்படி பார்ப்பதற்கு ஏன் நமக்கு முடியாமல் போனதுஎன்கிற தற்சோதனைக்கு உட்படும்படியாகவோ நமக்குள் நம்மை வாதிக்கச் செய்பவை. அவரது எழுத்துகளை இவ்வாறாக நான் கவனித்துவரும் இவ்வேளையில் தான் அவருடைய இந்த கட்டுரைத்தொகுப்புக்கு முன்னுரை எழுத நேர்ந்திருக்கிறது.
சமூகம் பல்வேறு கருத்தியல் குழுக்களாக பிரிந்திருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நமது மனவியல்புக்கேற்ப இவற்றில் ஏதோவொரு குழுவுக்குள் நம்மைப் பொருத்திக்கொள்கிறோம். (இந்த மனவியல்பை கட்டமைப்பதும் இத்தகைய குழுக்கள்தான்.) திட்டவட்டமான விலகல் எல்லையுடன் இருக்கின்ற இந்தக் குழுக்களை அவ்வவ்வாறே பேணி பேதமாக வளர்த்தெடுக்காமல், இளக…

மூக்குத்தி காசியை மூக்குத்தி காசிகளுக்கு மூக்குத்தி காசி அறிமுகம் செய்வித்தல்...

புலியூர் முருகேசனின் மூக்குத்தி காசி நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரை 

‘நம்பிக்கை தரும் விதமாக வளரும் அடுத்தத் தலைமுறை இளம் எழுத்தாளர் என யாரை அடையாளம் காட்டுகிறீர்கள் என்று  மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் கேட்கப்பட்டதாம். அதற்கு அவரால் பரிந்துரைக்கப்பட்ட, வளரும் இளம் தலைமுறை  எழுத்தாளரோ அப்போதே அறுபது வயதை தொட்டவராயிருந்தாராம். சரி, அந்த ‘இளம்’ தலைமுறை எழுத்தாளர் அந்தளவுக்கு எழுதிக் குவித்தவரா / கிழித்தவரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. பின் எப்படி இந்தப் பரிந்துரை? இவ்வளவு பேர் எழுதிக்கொண்டிருக்கும் தமிழிலக்கியக்களத்தில் அவர் கண்ணுக்கு எப்படி இவர் மட்டுமே சட்டெனத் தெரிந்தார்? இருவரும் ஒரே சாதியினர் என்பதற்கும் அப்பால் வேறொரு காரணமும் இதற்குள் இல்லை என்று சொன்னால் வலிந்து காரணம் கற்பிப்பதாக நம்மீதே பழிவிழும். இங்கு பட்டியல்கள் பரிந்துரைகள் பாராட்டுகள் விருதுகள் விமர்சனங்கள் ஆகியவற்றை தீர்மானிப்பதில் சாதியச் சாய்மானம் பெரும்பங்கு வகிக்கிறது என்பதற்கான ஒருசோற்றுப் பதம் இது. எழுத்தாளர், பதிப்பாளர், வாசகர், விமர்சகர் ஆகியோரை இணைப்பதாக படைப்பொருமை தான் இருக்க வேண்டுமேயன்றி வேறு அம்சங்கள் அல்ல. …