முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உ.பி. தன்கர் கொடூரம்: ஆடை கிழிக்கப்பட்ட தலித் உடல்களில் தெரிவது எவரின் அம்மணம்?


https://youtu.be/O8o9lJfxYzk

உத்திர பிரதேச மாநிலம் தன்கர் கிராமத்தில் ஒரு கும்பல் தலித் குடும்பம் ஒன்றின் பெண்களையும் ஆண்களையும் கடுமையாக தாக்கி அவர்களை ஆடைகளைக் கிழித்தும் உருவியும் அம்மணமாக்கியிருக்கிறார்கள்.  இதுகுறித்த இந்த வீடியோ காட்சியை நேற்று மாலையிலிருந்து பலரும் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் இன்று காலையில் என்னுடையது உட்பட பலரது பகிர்வும் நீக்கப்பட்டிருக்கிறது. 

பெண்களையும் அவர்தம் குடும்பத்து ஆண்களையும் கொடுமைப்படுத்தி ஆடைகளை கிழித்தெறிந்தது பற்றி எவ்வித அவமானமும் கொள்ள துப்பில்லாதவர்கள், அந்தக் கொடுமை பொதுவெளியின் கவனத்திற்குள்ளாகி இந்துமதமும் சாதியாதிக்க மனப்பாங்கும் அதிகாரவர்க்கத்தின் அட்டூழியங்களும் அம்பலமாகிவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். வீடியோவை நீக்குவதன் மூலமாக இப்படியான கொடுமையே நடக்கவில்லை என்று நிறுவுவதும்கூட "டிஜிடல் இந்தியர்களின்" நோக்கமாக இருக்கலாம். டிஜிடல் இந்தியாவின் பங்குதாரியாக சேர்ந்துள்ள முகநூல் நிர்வாகமே நீக்குவதாக இருந்தாலும் முன்னறிவிப்பு செய்திருக்க வேண்டும். 

எங்கோ நடந்ததை இப்படி வெளிச்சம் போடுவது அறக்குறைவான செயலாகாதா என்கிறார்கள். வெட்டவெளியில் இப்படியொரு அட்டூழியம் நிகழும்போது நெட்டைமரங்களென பார்த்திருப்பவர்களுக்கு இல்லாத அவமானம் நமக்கெதற்கு என்பதால்தான் யுடியூப்.காமில் இருந்து இந்த வீடியோவை இணைத்துள்ளேன். படிப்பு, வேலை, சம்பளம், பொருளாதார ஏற்றம், அதிகார அமைப்புகளில் பங்கு உள்ளிட்ட எதுவும் தலித்துகளைப் பற்றிய சாதியவாதிகளின் அணுகுமுறையை  மாற்றிவிடவில்லை என்பதற்கான இந்த சாட்சியம் அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்கூட இங்கு வெளியிட்டுள்ளேன். 

இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்ய முடியுமா என்பதை யாரேனும் தெளிவுபடுத்துங்கள்.


கருத்துகள்

 1. பிபிசியில் , அவர்களே தம் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்று, தம் புகாரை காவற்றுறை பதிவு செய்து, தாம் குற்றம் சாட்டுபவரைக் கைது செய்யும்படி நிர்ப்பந்தித்ததாகவும், காவற்றுறை அவர்களுக்கு உடையை அணிய முயன்றதாகவும் சொல்லப்படுகிறதே!
  வருங்கால முதல்வர் கனவு காண்பவர், கிராபிக்கில் அடித்தது போல் காட்சியமைத்துள்ளாதாக கூறுகிறாரே! இதுவும் அப்படியா?- என்ன தான் நடக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. இந்த கேவலத்தை, அசிங்கத்தையா தூக்கி பிடித்துக்கொண்டு அழித்தார்கள்? அழிக்கிறார்கள்?

  என்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?

  அனைவரும்

  க்ளிக் செய்து >>> “இங்கே" <<<< படித்து சிந்தியுங்கள்.

  http://pathivuthokupukal.blogspot.sg/2015/10/blog-post_11.html

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாஸ்திரம் சடங்கு சம்பிரதாயம் - ஆதவன் தீட்சண்யா

‘‘....ஒரு இந்துவின் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மதம் கட்டுப்படுத்துகிறது. வாழ்வில் அவன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்றும், செத்த பின்பு அவனது உடல் எவ்வாற கழித்துக் கட்டப்பட வேண்டுமென்றும் அவனுக்கு ஆணையிடுகிறது. சிற்றின்ப வேட்கையில் அவன் எப்படி எப்பொழுது ஈடுபட வேண்டுமென்பதையும் அது அவனுக்குக் கூறுகிறது. ஒரு குழந்தை பிறந்தவுடன் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டும், குழந்தைக்கு எப்படிப் பெயரிட வேண்டும், அதன் தலையிலுள்ள முடியை எவ்வாறு சுத்திகரிக்க வேண்டும், அதற்கு முதல் ஆகாரம் எப்படிக் கொடுக்க வேண்டும் என்பனவற்றை மதம் அவனுக்கு எடுத்துரைக்கிறது. அவன் எந்தத்தொழிலில் ஈடுபட வேண்டும், எந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையும் அது கூறுகிறது. யாருடன் உணவருந்துவது, என்ன உணவை உட்கொள்வது, எந்தெந்த காய்கள் அனுமதிக்கப்பட்டவை, எவை தவிர்க்கப்பட வேண்டியவை என்பதையும் ஒரு நாளை அவன் எவ்வாறு கழிக்க வேண்டும், எத்தனை முறை உணவருந்துவது, எத்தனை முறை தொழுவது என்பதையும் அவனுக்கு உரைக்கிறது. மதம் தழுவாத அல்லது அதனால் ஆணையிடப்படாத எந்தவொரு செயலும் இந்துவின் வாழ்வில் கிடையாது....’’ அண்ணல் அம்பேத்கரின் இவ்வ…

ஜெயமோகன், உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது- விடியல் சிவா

ஜெயமோகன்,
தோழர்கள் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா ஆகியோரால் எழுதப்பட்டதும்  விடியல் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டதுமான ‘பெரியார்:சுயமரியாதை' நூல் -முன்விலைத் திட்டத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட நூல், அன்னிய   நிதி உதவியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்று நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் எழுதிய அபாண்டமான பொய்க்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்கள். ஆனால்  “நான் சொன்ன கருத்து நூலாசிரியர்களைப் பற்றியது மட்டுமே தவிர பதிப்பகம் பற்றியது அல்ல” என்று கூறியுள்ளீர்கள். எனது நேர்மையை நீங்கள் சந்தேகிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
“பெரியார்;சுயமரியாதை சமதர்மம்' பற்றிய அந்தக்கருத்து ஒரு பிழையான நினைவில் இருந்து எழுதப்பட்டது” என்று கூறுகிறீர்கள். உங்களது 'பிழையான நினவு'க்கு ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் இந்தக் கருத்தை கடந்த ஒருவார காலமாக தோழர் எஸ்.வி.ராஜதுரைக்கும் உங்களுக்கும் நடந்து வரும் விவாதங்களூடாக மட்டும்  நீங்கள் வைக்கவில்லை என்பதையும் நீண்டகாலமாகவே இந்தக் கருத்தைச் சொல்லி வருகிறீர்கள் என்பதையும் நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள…

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா