https://youtu.be/O8o9lJfxYzk
உத்திர பிரதேச மாநிலம் தன்கர் கிராமத்தில் ஒரு கும்பல் தலித் குடும்பம் ஒன்றின் பெண்களையும் ஆண்களையும் கடுமையாக தாக்கி அவர்களை ஆடைகளைக் கிழித்தும் உருவியும் அம்மணமாக்கியிருக்கிறார்கள். இதுகுறித்த இந்த வீடியோ காட்சியை நேற்று மாலையிலிருந்து பலரும் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் இன்று காலையில் என்னுடையது உட்பட பலரது பகிர்வும் நீக்கப்பட்டிருக்கிறது.
பெண்களையும் அவர்தம் குடும்பத்து ஆண்களையும் கொடுமைப்படுத்தி ஆடைகளை கிழித்தெறிந்தது பற்றி எவ்வித அவமானமும் கொள்ள துப்பில்லாதவர்கள், அந்தக் கொடுமை பொதுவெளியின் கவனத்திற்குள்ளாகி இந்துமதமும் சாதியாதிக்க மனப்பாங்கும் அதிகாரவர்க்கத்தின் அட்டூழியங்களும் அம்பலமாகிவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். வீடியோவை நீக்குவதன் மூலமாக இப்படியான கொடுமையே நடக்கவில்லை என்று நிறுவுவதும்கூட "டிஜிடல் இந்தியர்களின்" நோக்கமாக இருக்கலாம். டிஜிடல் இந்தியாவின் பங்குதாரியாக சேர்ந்துள்ள முகநூல் நிர்வாகமே நீக்குவதாக இருந்தாலும் முன்னறிவிப்பு செய்திருக்க வேண்டும்.
எங்கோ நடந்ததை இப்படி வெளிச்சம் போடுவது அறக்குறைவான செயலாகாதா என்கிறார்கள். வெட்டவெளியில் இப்படியொரு அட்டூழியம் நிகழும்போது நெட்டைமரங்களென பார்த்திருப்பவர்களுக்கு இல்லாத அவமானம் நமக்கெதற்கு என்பதால்தான் யுடியூப்.காமில் இருந்து இந்த வீடியோவை இணைத்துள்ளேன். படிப்பு, வேலை, சம்பளம், பொருளாதார ஏற்றம், அதிகார அமைப்புகளில் பங்கு உள்ளிட்ட எதுவும் தலித்துகளைப் பற்றிய சாதியவாதிகளின் அணுகுமுறையை மாற்றிவிடவில்லை என்பதற்கான இந்த சாட்சியம் அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்கூட இங்கு வெளியிட்டுள்ளேன்.
இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்ய முடியுமா என்பதை யாரேனும் தெளிவுபடுத்துங்கள்.
பிபிசியில் , அவர்களே தம் உடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்று, தம் புகாரை காவற்றுறை பதிவு செய்து, தாம் குற்றம் சாட்டுபவரைக் கைது செய்யும்படி நிர்ப்பந்தித்ததாகவும், காவற்றுறை அவர்களுக்கு உடையை அணிய முயன்றதாகவும் சொல்லப்படுகிறதே!
பதிலளிநீக்குவருங்கால முதல்வர் கனவு காண்பவர், கிராபிக்கில் அடித்தது போல் காட்சியமைத்துள்ளாதாக கூறுகிறாரே! இதுவும் அப்படியா?- என்ன தான் நடக்கிறது.
இந்த கேவலத்தை, அசிங்கத்தையா தூக்கி பிடித்துக்கொண்டு அழித்தார்கள்? அழிக்கிறார்கள்?
பதிலளிநீக்குஎன்ன செய்யப் போகின்றீர்கள்? எதிர்த்து நிற்க போகின்றீர்களா? அல்லது இணங்கிப்போகப் போகின்றீர்களா?
அனைவரும்
க்ளிக் செய்து >>> “இங்கே" <<<< படித்து சிந்தியுங்கள்.
http://pathivuthokupukal.blogspot.sg/2015/10/blog-post_11.html