திங்கள், நவம்பர் 28

ரியல் - எஸ்டேட் பிரச்னை - ஆதவன் தீட்சண்யா

ங்குனி சித்திரை
புளியடிக்கும் காலம்
சல்லிசு விலையில்
வருசத்துக்கே வாங்கிவிடுவார் அப்பா

அறுவடைக்காலத்தில் மலிவாய்
அவரை துவரை நெல் பிடிப்பார்
ஏழெட்டு மூட்டை

சேலம் பாசஞ்சர் பயணமென்றால்
கூடைக்காரியிடம்
நாலுதட்டம் காய் வாங்காமல்
வீடு திரும்பமாட்டார்
மார்க்கெட்டில்
ஒரு நாளுக்காகும் காசில்
ஒரு வாரத்துக்கே கிடைப்பதாய் ஒப்பீடு தவறாது

ஒரு மைல் நடந்தால்
ஒரு ரூபாய் மலிவென்றால்
அப்படியொரு பரிவர்த்தனைக்கே
பழகியிருந்த எங்கள் அப்பா
காந்திபுரம்
அண்ணாநகர்
காமராசர் காலனியைப் போலவே
ஊரிலிருந்து ஒன்பது காதத் தொலைவில்
உருவாகும் புதுநகரில்
ஒரு சென்ட் ஒரு லட்சமென வாங்கினார்

பஸ்ஸ்டாண்டுக்கு கூப்பிடு தூரத்தில்
அம்பேத்கர் காலனியில்
அடிமாட்டு விலைக்கு மலிந்திருக்கும் மனை வாங்க
நாதியில்லை யாருக்கும்

சாதியிருக்கிறது
மண்ணுக்கும்.




http://india.poetryinternational.org/piw_cms/cms/cms_module/index.php?obj_id=21009













1 கருத்து:

  1. வலிக்கும் உண்மை.

    இந்த நிலை இந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் வேறு சில காலனிகளுக்கும் ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...