முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

February, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீசக் காரியமும் நீசக் காரியனும்... ஆதவன் தீட்சண்யா...

சாகித்ய அகாடமி 2015 பிப்ரவர் 21,22 தேதிகளில் சென்னையில் நடத்திய "இலக்கிய முழுமையை நோக்கி- தலித் இலக்கியம்" என்கிற கருத்தரங்கில் சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் - என்கிற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து... சாதியானது, அதன் உச்சத்தில் இருக்கும் பார்ப்பன ஆண்களைத் தவிர பார்ப்பனப் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்குமே எதிரானதுதான். பார்ப்பனர்கள் மற்ற சாதியினருக்கு நிகழ்த்தியக் கொடுமைகளுக்கு சற்றும் குறையாதவகையில் தம் சொந்தப்பெண்களையும் கொடுமைப்படுத்தும் அளவுக்கு சமத்துவத்துவவாதிகள். பார்ப்பனப் பெண்கள் அறியாப் பருவத்திலேயே கிழட்டுப் பார்ப்பனர்களுக்கு மணமுடிக்கப்பட்டனர். பருவமெய்துவதற்கும் முன்பாகவே அப்பெண்கள் விதவைகளாயினர். விதவைகளால் தமது “சாஸ்திரங்களுக்கும் சாதித்தூய்மைக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை கணவனின் பிணத்துடன் சேர்த்தே எரித்துக் கொல்லும் சதியைக் கடைபிடித்தனர். சதியில் எரிந்தொழியாமல் தப்பிக்கிற விதவைகள் தீயினும் கொடிய வாதைகளுடன் காலந்தள்ள நேர்ந்ததை பலரும் எழுதியுள்ளனர். வாழ்நாள் நெடுக கைம்மையில் உழலும் அவர்கள் ஓய்வின்றி தொடர்ந்து ஏதேனுமொரு வேலையில் …

இந்தா பிடியுங்கள் இந்தியா டுடே (கழிப்பறையில் தண்ணீரை மிச்சம் பிடிக்க) - ஆதவன் தீட்சண்யா

சாவு வீட்டில் விமர்சிப்பது சரியான மரபல்ல என்பதுபோல இந்தியா டுடே நின்று போனது குறித்து பலரும் பலவிதமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வி.பி.சிங் மறைந்த போது அவருக்கு இந்தியா டுடே எப்படி அஞ்சலி செலுத்தியது என்று பாருங்கள். 
அஞ்சலி / வி.பி.சிங் 1931-2008
மண்டல் நாயகனான இவர் இந்தியாவின் அரசியலில் மாபெரும் சமூக சீரழிவைக் கொண்டு வந்தவர்.

அலகாபாத்தில் கங்கைக்கரையில் நவம்பர் 29ம் தேதி எரிந்த சிதை இந்திய அரசியலின் மிக சாகசமிக்க ஒருவரின் வாழ்வை முடித்து வைத்தது. அந்தத் தீயின் அர்த்தத்தைப் புரி்ந்துகொள்ள கடந்த நூற்றாண்டின் கடைசி காலங்களில் கொழுந்துவிட்டெரிந்த இன்னமும் இருக்கும் தீயின் நாவுகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சமூகத்தை சீரழித்த செயலும் அதன் விளைவாக பிறந்த மக்களை மிக மோசமாக பிளவு படுத்திய மண்டலுக்கும் எதிர்வினையாக வந்ததுதான் தில்லி பல்கலைக்கழக மாணவர் ராஜீவ் கோஸ்வாமியின் நெருப்பு யுத்தம். அவரது தியாகம் தடுக்கப்பட்டது.

அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை சிபாரிசு செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை…

துக்கத்தின் நெடுவேலில் - ஆதவன் தீட்சண்யா

உன் பெயரை ஜெபித்தபடி
புலர்ந்திருக்கும் இவ்விரவை
நான் தன்னந்தனியே கடக்க வேண்டியிருக்கிறது
ஒரு நிலவைப்போல
கடைசி சந்திப்பின் வெதுவெதுப்பான ஞாபகங்களன்றி
வழித்துணைக்கு ஏதுமில்லை

இதோ இதோவென தளர்ந்து நகரும்
கிழட்டு நொடிகளைக் கோர்த்தபடி  
எண்திசையும் கண்சுழற்றிப் பார்க்கிறேன்
நீ வந்துவிடுவாயென

இருளின் அரூபங்களில் உன் முகங் கண்டு பித்தேறி
வெற்றுவெளி துழாவி கட்டித் தழுவியது மாயமென்றறிந்து
துக்கத்தின் நெடுவேலில் பாய்ந்து
துடித்தடங்குகிறேன் உயிரைப்போல

இதே வானத்தின் கீழ்
பெருமூச்சை உகுத்தபடி நீயும் கிடப்பதறியாது
என்பொருட்டு இரக்கமுற்ற ராப்பூச்சிகள் வினோத ஒலியெழுப்பி
உன்னையழைக்கும் இப்பகல் கவியும் வேளையில்
அயர்ந்து முளைக்கிறது சூரியன் வீடு திரும்பும் கூர்க்காபோல
கூசும் கண்களை மூடிக்கொள்கிறேன்
பின்வரும் இரவுகளிலும்
இவ்வாறே விழித்திருக்கத்தான் வாய்த்திருக்கிறதென்று.

அலை என்பது சொல்லல்ல – ஆதவன் தீட்சண்யா

விடிந்தால் வாக்கு எண்ணிக்கை, விடியற்காலையில் ஒரு வேட்பாளர் அதுவும் அந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தப்பட்டவர் காணவில்லை என்றால் அந்த நாடு எப்படி இருக்கும்? ‘‘பிரதமர் வேட்பாளரையே காப்பாற்ற முடியாத உங்களுக்கு வண்டி எதுக்கு வாகனம் எதுக்கு என்று காவல்துறையினரின் வாகனங்கள் கொளுத்தப்பட்டிருக்கும். குறிவைத்து அடித்து நொறுக்கப்பட்டதில் மாற்றுக்கட்சிகளின் அலுவலகங்கள் ஒன்றுகூட மிஞ்சியிருக்காது. பூட்டப்பட்டிருக்கும் கடைகளை உடைத்து கொள்ளையிடுவதில் ஒரு கும்பல் மும்முரமாக ஈடுபட்டிருக்கும். கைக்கு கிடைத்ததை தூக்கிக்கொண்டு நாலாத்திக்கிலும் சனங்கள் ஓடும். தீய்ந்து கருகும் நெடியும் அடர்ந்துயரும் புகையும் ஒவ்வொருவரது உள்ளிருந்த பகையையும் இழுத்துக் கொண்டு வந்து நடுத்தெருவில் கடாசும். எதெதற்கோ எவ்வப்போதோ உருவாகி கணக்குத் தீர்க்கப்படாமல் உறுமிக் கொண்டிருந்த முன்விரோதமெல்லாம் நேர்செய்யப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில். கோடாலியும் குத்தீட்டியும் அரிவாளும் கொடுவாளும் ஆட்களின் கைகளாய் நீளும். அந்த நாட்டுக்கு மயானமென்று தனியாக எதுவும் தேவைப்படாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் பிண…