குடியரசுத் தலைவர் அவர்களே
இதோ உங்களுக்கு ஒரு கடிதம்
நீங்கள் ஒருவேளை அதைப் படிக்கலாம்
உங்களுக்கு நேரம் இருந்தால்.
இப்போதுதான் கிடைத்தன எனக்கு
ராணுவத்திலிருந்து உத்தரவு காகிதங்கள்
புதன் பொழுது சாய்வதற்குள்
போருக்கு புறப்படச் சொல்லி.
குடியரசு தலைவர் அவர்களே
நான் அப்படிச் செய்யப் போவதில்லை
இந்த பூமியில் நான் பிறந்தது
ஒன்றுமறியா மக்களைக் கொல்வதற்கல்ல.
உங்களுக்குக் கோபமூட்ட வேண்டுமென்றல்ல
ஆனாலும் நான் சொல்லத்தான் வேண்டும்
என் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது
நான் ஓடிப் போகப் போகிறேன்.
பிறந்தது முதல் இன்று வரை
பார்த்துவிட்டேன் எல்லாம்
தந்தையின் சாவு சகோதரர்களின் பிரிவு
என் குழந்தைகளின் அழுகை.
இன்று கல்லறைக்குள்ளிருக்கும் என் அன்னை
எவ்வளவு துன்புற்றிருக்கிறாள்
இன்று அவளுக்கு துச்சமாகிவிட்டன
குண்டுகளும் கவிதை வரிகளும்.
நான் கைதியாக இருந்த போது
என்னிடமிருந்து பறிக்கப்பட்டன
என் மனைவி என் ஆத்மா
என் இனிய கடந்தகாலம் முழுவதும்
நாளை அதிகாலையில்
இறந்த ஆண்டுகளின் முகத்தில்
அறைந்து சாற்றுவேன் என் கதவை
புறப்பட்டுச் செல்வேன் என் பாதையில்.
பிச்சை எடுத்து வாழ்வேன்
பிரான்ஸ் நாட்டு வீதிகளில்
வடமேற்கிலிருந்து தென் திசை வரை
மக்களிடம் எடுத்துச் சொல்வேன்.
மறுங்கள் அடி பணிய
மறுங்கள் போர் புரிய
போகாதீர்கள் போருக்கு
புறப்பட மறுங்கள்.
நாட்டுக்கு ரத்தம் தேவையென்றால்
நீங்கள் போய்த் தாருங்கள்
தெய்வ தூதராயிற்றே நீங்கள்
குடியரசு தலைவர் அவர்களே.
என்னைப் பின் தொடர்வதானால்
சேவகர்களிடம் சொல்லிவிடுங்கள்
ஆயுதமிருக்காது என்னிடம்
தைரியமாகச் சுடலாம்
*
Boris vian, Texts et Chansons Union Generale D' Editions, 8 rue Garanciere, Paris 6 என்ற புத்தகத்திலிருந்து தமிழில்: வெ.ஸ்ரீராம், ஓவியம்: நடேஷ்
இனி 1987 ஜனவரி இதழில் வெளியான இக்கவிதையை எடுத்தனுப்பிய தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு நன்றி.
என் முடிவு எடுக்கப்பட்டுவிட்டது
நான் ஓடிப் போகப் போகிறேன்.
பிறந்தது முதல் இன்று வரை
பார்த்துவிட்டேன் எல்லாம்
தந்தையின் சாவு சகோதரர்களின் பிரிவு
என் குழந்தைகளின் அழுகை.
இன்று கல்லறைக்குள்ளிருக்கும் என் அன்னை
எவ்வளவு துன்புற்றிருக்கிறாள்
இன்று அவளுக்கு துச்சமாகிவிட்டன
குண்டுகளும் கவிதை வரிகளும்.
நான் கைதியாக இருந்த போது
என்னிடமிருந்து பறிக்கப்பட்டன
என் மனைவி என் ஆத்மா
என் இனிய கடந்தகாலம் முழுவதும்
நாளை அதிகாலையில்
இறந்த ஆண்டுகளின் முகத்தில்
அறைந்து சாற்றுவேன் என் கதவை
புறப்பட்டுச் செல்வேன் என் பாதையில்.
பிச்சை எடுத்து வாழ்வேன்
பிரான்ஸ் நாட்டு வீதிகளில்
வடமேற்கிலிருந்து தென் திசை வரை
மக்களிடம் எடுத்துச் சொல்வேன்.
மறுங்கள் அடி பணிய
மறுங்கள் போர் புரிய
போகாதீர்கள் போருக்கு
புறப்பட மறுங்கள்.
நாட்டுக்கு ரத்தம் தேவையென்றால்
நீங்கள் போய்த் தாருங்கள்
தெய்வ தூதராயிற்றே நீங்கள்
குடியரசு தலைவர் அவர்களே.
என்னைப் பின் தொடர்வதானால்
சேவகர்களிடம் சொல்லிவிடுங்கள்
ஆயுதமிருக்காது என்னிடம்
தைரியமாகச் சுடலாம்
*
இனி 1987 ஜனவரி இதழில் வெளியான இக்கவிதையை எடுத்தனுப்பிய தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக