பிக்காஸோ ஓவியத்தில்
அமைதியின் உருவகமாய்
அவசரமாய் உயிர்த்தெழுந்து
புத்தனை ஏற்றிக்கொண்டு
போர்முனைக்கு விரைகிறது
திகிலூட்டும் வெடியோசை
தீப்பிழம்பு புகைமூட்டம்
என்ன நேர்ந்ததோ என் வானிற்கென
திக்குதிசையறியாது
றெக்கைகள் பொசுங்கப் பொசுங்க
படபடத்தலைகிறது அங்குமிங்கும்
காற்றின் நெடியில் கண்களெரிய
உயிர்ச் சொடுங்கி
எச்சத்தைப்போல வீழும் அந்தப் புறாவை
ரேடாரில் சிக்கிய நொடியில்
குறியிலக்கெனத் தாக்குகிறது எரிகணை
பொடிந்துதிரும் சாம்பலிலிருந்து
மற்றொரு புத்தனும் புறாவும்
வருவதும் வராததும்
உங்கள் விருப்பம்.
07.05.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக