முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

July, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூகநீதி கவிழ்த்த வீராங்கனைகளே வீராங்கன்களே.. ஆதவன் தீட்சண்யா

IIT: Iyer Iyengar institute of Technology என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோவம் வருதோ இல்லியோ அவர்களின் இரப்பாளிகள் எகிறி குதிக்கிறார்கள். ஆனால் என்ன நடந்துகொண்டிருக்கிறது? அண்ணல் அம்பேத்கர் பெரியார் என்கிற பெயர்களைக்கூட உள்ளேவிடமாட்டோம் என்று சென்னை IIT அக்ரஹாரம் செய்த அலப்பறை அடங்குவதற்குள் ரூர்கி IIT அக்ரஹாரம் தன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை கூடிய அதன் செனட், CGPA என்னும் மதிப்பெண் புள்ளி 5க்கும் குறைவாக எடுத்தவர்கள் என்று முதலாமாண்டு மாணவர்கள் 73பேரை நீக்கியுள்ளது.  இது ஏதோ தகுதி திறமை என்கிற அளவுகோல்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது போல காட்டுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் போலியானவை என்பது உடனடியாகவே    அம்பலமாகியுள்ளது.  இந்த 73 பேரில் 7 பேரைத்தவிர மற்றவர்கள்   அதாவது 90.4% பேர்  இடஒதுக்கீடு வழியாக நுழைந்தவர்கள் என்கிற விவரம் இவ்விசயத்தில் சாதியவாதத்தின் பங்கை ஆராயுமாறு கோருகிறது. மொத்தமுள்ள 75 எஸ்.டி மாணவர்களில் 31 பேர் இப்போது நீக்கப்பட்டுள்ள நிலையில் இதே அளவீடு தொடருமானால் எஞ்சியுள்ளவர்களும் மூன்றாமாண்டு முடிவில் வெளியேற்றப்படுவார்கள் என்று நியாயமான க…

இலங்கையில் பீம்தாஸ்...

ஞாபகமாய் மறத்தல் - ஆதவன் தீட்சண்யா

சூரியோதயத்திற்கு பின்னும் முன்னும்
சந்திராஸ்தமனத்துக்கு முன்னும் பின்னுமான நேரத்தில் மட்டும்  
வெளியே யாரும் தலைகாட்ட வேண்டாமெனும்
ஊரடங்கு உத்தரவு காலவரையின்றி அமலுக்கு வருகிறது
சட்டப்புத்தகத்தின் எல்லாப்பிரிவுகளுக்கும்   
144 என்றே எண்ணிடப்பட்டு வருவதால் 
எவரொருவரும்
தத்தமது நிழலை உடனழத்துப்போவதும் சட்டவிரோதம்

உளவுத்துறை முடுக்கிவிடப்படுகிறது
சாலையோர மரங்களின் உச்சியில்
ரகசிய காமிராக்கள் பொருத்தப்படுகின்றன பகிரங்கமாய்
உற்றார் உறவாரின் காலடிப்புழுதியில் ஒளிந்து
ஒற்றர்கள் பின்தொடர்கிறார்கள்

அதிகரித்துள்ள கெடுபிடிகளும் வாகனச்சோதனையும்
புதியவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறது
சந்தேகத்திற்குரியவர்கள்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு
விதிவிலக்கின்றி ஒன்றேபோல்
‘தற்கொலை’ செய்துகொண்டதாக அறிவிக்கப்படவிருக்கிறார்கள்

உறங்கிக்கொண்டிருப்பவர்களில்
கலகம் விளைவிப்பவர்களையும்
சதிச்செயலில் ஈடுபடுகிறவர்களையும்
இன்னபிற அ.கொ.தீ.க. படையினரையும்
கனகச்சிதமாக கண்டறிந்துவிடும் போலிஸ்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
அவர்களை கைதுசெய்யவிருக்கிறது நள்ளிரவில்
தீர்ப்பதிகாரிகளின் ஒப்புதலோடு
நிரம்பப்ப…

அப்பட்டமான கோஷம் - ஆதவன் தீட்சண்யா

வெள்ளப்பெருக்கில் செத்துப்போ
வெயிலில் கருகிச் செத்துப்போ
பசியடித்து செத்துப்போ
பயந்து நடுங்கிச் செத்துப்போ
கடனில் மாட்டி செத்துப்போ
கடலில் மூழ்கிச் செத்துப்போ
கலவரத்தில் செத்துப்போ
கஸ்டடியில் செத்துப்போ
விஷம் குடித்து செத்துப்போ
வெடிவெடித்து செத்துப்போ
மரம் விழுந்து செத்துப்போ
மாடுமுட்டி செத்துப்போ
ரயிலில் மோதி செத்துப்போ
ராக்கெட்  தாக்கி செத்துப்போ
எகிறி குதித்து செத்துப்போ
இடறிவிழுந்து செத்துப்போ
எதிலேயும் சாகாட்டி
என்கவுன்டரில் செத்துப்போ

மனக்காயத்தால்கூட செத்தொழி
தலைக்காயத்தால் சாகாதே

1.7.2015