அப்பட்டமான கோஷம் - ஆதவன் தீட்சண்யா


வெள்ளப்பெருக்கில் செத்துப்போ
வெயிலில் கருகிச் செத்துப்போ
பசியடித்து செத்துப்போ
பயந்து நடுங்கிச் செத்துப்போ
கடனில் மாட்டி செத்துப்போ
கடலில் மூழ்கிச் செத்துப்போ
கலவரத்தில் செத்துப்போ
கஸ்டடியில் செத்துப்போ
விஷம் குடித்து செத்துப்போ
வெடிவெடித்து செத்துப்போ
மரம் விழுந்து செத்துப்போ
மாடுமுட்டி செத்துப்போ
ரயிலில் மோதி செத்துப்போ
ராக்கெட்  தாக்கி செத்துப்போ
எகிறி குதித்து செத்துப்போ
இடறிவிழுந்து செத்துப்போ
எதிலேயும் சாகாட்டி
என்கவுன்டரில் செத்துப்போ

மனக்காயத்தால்கூட செத்தொழி
தலைக்காயத்தால் சாகாதே

1.7.2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக