முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

October, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விசுவாசி : சுவாமி அசீமானந்தா சங் பரிவாரத்திற்காக நிகழ்த்திய பயங்கரவாதங்கள் - லீனா கீதா ரெகுநாத் தமிழில்: செ.நடேசன்

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞரான ரோஹினி சலியன், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் மீது கடுமை காட்டவேண்டாம் என்று தேசிய புலனாய்வு அமைப்பு தன்னை மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், அந்த பயங்கரவாதச் செயலில் நேரடியாக பங்கெடுத்தவரின் வாக்குமூலமாக அமைந்துள்ள இக்கட்டுரை பல உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. ‘தி கேரவன்’ 1 பிப்ரவரி 2014  இதழில் வெளியான  The Believer: Swami Aseemanand’s radical service to the Sangh  இக்கட்டுரைக்காக, லீனா கீதா ரெகுநாத் மதிப்புமிக்க ‘ரெட் இங்க்’ விருதுக்கு தேர்வாகியுள்ளார். சுவாமிஜியை அழைத்து வாருங்கள்- ஜெயிலர் உத்தரவிட்டார். இரண்டு காவலர்கள் ஜெயிலரின் அலுவலகத்தை விட்டு விரைந்து, சிறையின் தரைத்தளத்திற்குச் சென்றனர். சுவர்களுக்கு வெளியே பார்வையாளர் நேரத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் ஒரே நேரத்தில் அலறுவது போன்ற, காதுகளைச் செவிடாக்கும் சத்தம் அறைகளினூடே எதிரொலித்தது.
அடுத்த சில நிமிடங்களில் இந்து கலவரவாதியும், 2006 முதல் 2008க்கு இடையே நாடு முழுவதும் பொதுமக்களைக் குறிவைத்துப் பல்வேறு வன்முறைத் தாக…