சனி, பிப்ரவரி 13

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற மார்க்ஸிய அறிஞர் மார்ஸெல்லொ முஸ்ட்டோ மறுப்பு


ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவைநிறுவனக்கொலை செய்திருக்கும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் உரையாற்ற மார்க்ஸிய அறிஞர் மார்ஸெல்லொ முஸ்ட்டோ மறுப்பு

பெறுகை
ஹைதரபாத் பல்கலைக்கழகம்                                                       ஜனவரி 26,2016
அரசியல் விஞ்ஞானத் துறை
சமூக விஞ்ஞானப் பள்ளி
மத்தியப் பல்கலைக்கழகம் அஞ்சல்
ஹைதராபாத்-500 046
ஆந்திரப் பிரதேசம்

அன்புள்ள சக ஆசிரியர்களுக்கு,
            வரும் பிப்ரவரியில்  இந்தியாவில் நான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் கல்விப்புலம் சார்ந்த பயணத்தின் பகுதியாக, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையில் வருகை ஆசிரியராக சில நாள்களைச் செலவிடுமாறு கடந்த அக்டோபர் 15 அன்று அழைக்கப்பட்டு, அந்த சந்தர்ப்பத்தில் கார்ல் மார்க்ஸ் பற்றியும் அவரது கோட்பாடுகள் உலகளவில் புத்தாக்கம் பெறுவது பற்றியும் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றுமாறு கேட்கப்பட்டேன். நானும் உங்கள் மாணவர்களைச் சந்திக்க மிகவும் ஆவல் கொண்டிருந்தேன்.

ஆனால், முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவின் துயரமிக்க மரணம் பற்றியும், வேறு நான்கு மாணவர்களைத் தன்னிச்சையாக இடைநீக்கம் செய்த உங்கள் பல்கலைக்கழகத்தின் பாரபட்சக் கொள்கைகளைப் பற்றியும் கடந்தவாரம் நான் கேள்விப்பட்டேன்.  பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைகள்  ‘நிறுவனரீதியான மரணம்’ என்று வரையறுக்கப்படும் ஒன்றுக்கான நிலைமைகளை உருவாக்கியுள்ளன என்று வாதிடுபவர்களுடன் நான் உடன்படுகிறேன். அத்துடன்  உங்கள் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து கொண்டிருப்பவையும், மிக வேகமாக நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கின்றவையுமான எதிர்ப்புப் போராட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை நான்  முழுமையாக ஆதரிக்கின்றேன்.
           
இந்தச் சூழ்நிலைமகளில், இந்த மாணவர் போராட்டத்துடன் உண்மையான ஒருமைப்பாடு கொள்ளாத பல்கலைக்கழகச் செயல்பாடுகள் எதிலும் நான் பங்கேற்கமாட்டேன் என்பதை அறிவிக்க விரும்புகிறேன்.

                        உண்மையுள்ள
                        மார்ஸெல்லோ முஸ்ட்டோ

தமிழில்:  எஸ்.வி. ராஜதுரை
புதுவிசை 45

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...