முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

“நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

https://thetimestamil.com இணைய இதழுக்காக மு.வி. நந்தினி மின்னஞ்சல் வழியே என்னிடம் எடுத்த நேர்காணல்.30 ஆண்டுகளில் இல்லாத தலித் எழுச்சியை குஜராத் கண்டிருக்கிறது. நேரில் அதைப் பார்த்திருக்கிறீர்கள். எப்படி இருந்தது அந்த அனுபவம்?

“முதலில் முப்பதாண்டுகளுக்கு முந்தைய தலித் எழுச்சி என்பதை பற்றி சொல்ல வேண்டியிருக்கிறது.
1960ல் குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து அடுத்துவந்த இருபதாண்டுகளும் குஜராத்தின் அரசியல் களம் பார்ப்பனர்கள், பனியாக்கள், படேல்களின் ஆதிக்கம் நிறைந்ததாகவே  இருந்தது.  அவசர நிலையை விலக்கிக்கொண்ட பிறகு 1977ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளில் 6ல் மட்டுமே காங்கிரஸ் வென்றது. ஜனசங்கமும் பங்குபெற்ற  ஜனதா கூட்டணி 20 இடங்களை கைப்பற்றியது. சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தது. அவசரநிலைக் கொடுமைகளால் காங்கிரசை வீழ்ச்சியடையும் கட்சியாக கணித்த பார்ப்பனர்கள், பனியாக்கள், படேல்களில் கணிசமானவர்கள் அதன் எதிர்நிலைக்குத் தாவியதாலேயே இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டது. பாபுபாய் படேல் தலைமையிலான  ஜனதா அரசாங்கத்தில் இந்த மூன்று பிரிவினரும் – குறிப்…