வியாழன், ஆகஸ்ட் 17

ஆஹா ஓஹோ ஆய்வுகளுக்கு அணுகவும்: தமிழ் இந்து - ஆதவன் தீட்சண்யா

வெற்றி பெற்றவன் சொல்வதை உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க ஒருவரும் துணியமாட்டார் என்று ஹிட்லர் சொன்னதாக ஒரு செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் செய்தித்தாளே உண்டு என்பதை இப்போதுதான் தமிழ் இந்து மூலமாக அறிகிறேன்.
தமிழ் இந்துவில் வெளியாகும் கட்டுரைகள் எந்தளவுக்கு ஆய்வுப்பூர்வமானவை என்கிற கேள்வி வாஞ்சிநாதன் விசயத்தில் சந்தி சிரிக்கிறது. இதற்கு முன் கடந்த 03.08.2017 அன்று வெளியான "வீரத்தால் வெற்றி கொள்ளமுடியாத வீரன்: தீரன் சின்னமலை" http://tamil.thehindu.com/opinion/blogs/article19413439.ece என்ற கட்டுரையிலும் இப்படியான தகவல் பிழைகளைக் காணமுடியும்.
//1790களின் பிற்பகுதியில் சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டிணம் ஆகிய மூன்று இடங்களிலும் சின்னமலை, திப்பு சுல்தான் கூட்டணி ஆங்கிலேயருடன் மோதியது. அதில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெருத்த சேதத்தை விளைவித்து, வெற்றிவாகையும் சூடியது.// என்கிறார் கட்டுரையாளர் க.சே.ரமணி பிரபா தேவி.
1790களின் பிற்பகுதி என்பதால் 1799ல் நடந்த நான்காம் ஆங்கிலோ -மைசூர் போரையே இக்கட்டுரை குறிப்பதாக கொள்ளலாம். சித்தேஸ்வரத்தில் 1799 மார்ச் 6 அன்றும், 1799 மார்ச் 27 அனறு மழவல்லியிலும் 1799 ஏப்ரல் மே மாதங்களில் சீரங்கப்பட்டிணத்திலும் தி்ப்புவுடன் ஆங்கிலேயர் நடத்திய போரின் இறுதியில் திப்பு கொல்லப்பட்டார். அவரது ஆளுகைப்பரப்பையும் ஆங்கிலேயர் கைப்பற்றிக்கொண்டனர். இதுகுறித்து https://en.wikipedia.org/wiki/Battle_of_Mallavelly, https://en.wikipedia.org/wiki/Fourth_Anglo-Mysore_War http://journals.sagepub.com/d…/full/10.1177/2158244013482836 - போன்ற சுட்டிகளில் ஏராளமான விவரங்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.

இந்த ஆவணங்கள் யாவுமே, திப்பு வீழ்த்தப்பட்டது பற்றியே விவரிக்கின்றன. ஆனால் தமிழ் இந்துவோ "சின்னமலை, திப்பு சுல்தான் கூட்டணி ஆங்கிலேயருடன் மோதியது. அதில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெருத்த சேதத்தை விளைவித்து, வெற்றிவாகையும் சூடியது" என்கிறது. இவ்வாறு வெற்றிவாகை சூடியிருந்தால் திப்பு ஏன் ராஜ்ஜியத்தையும் உயிரையும் ஏன் அப்போரில் இறந்தார் என்பதை தமிழ் இந்து விளக்குமா?
தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர்பாக வெளியிடும் ஒரு கட்டுரையில் அவரது குணநலன்களையும் பெருமைகளையும் பகிர்வது சரிதான். ஆனால், வரலாற்றை திரித்து இட்டுக்கட்டி புகழ்வது சரிதானா? அந்தந்த வட்டாரத்தில் செல்வாக்குள்ள இடைநிலைச்சாதியினரின் மரியாதைக்குரிய தலைவர்கள் குறித்து ஆஹாஓஹோ என்று அளந்துவிட்டு சந்தையை விரிவுபடுத்தும் வணிகநோக்கத்திற்காக தமிழ் இந்து இவ்வாறு செய்கிறதா அல்லது தன்னியல்பாகவே அது வரலாற்றை திரிப்பதை ஓர் ஊடக அறமாக கைக்கொண்டுள்ளதா?
( திரிக்கப்பட்ட இந்த வரலாறு வேறு சில இதழ்களிலும் தலைவர்கள் சிலரது அறிக்கைகளிலும் இடம்பெற்றுள்ளது.)

1 கருத்து:

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...