செவ்வாய், நவம்பர் 29

சுழல்வு - ஆதவன் தீட்சண்யா

ரியும் பால்சட்டியும் ஒழிந்த வீடுகளின்
வெற்று உத்திரங்களில் தாவிக் களைத்திருந்த
பூனைகளுக்கு
கிலியூட்டும் அச்செய்தி வந்தது
பூனைக்கழுத்தில் மணி கட்ட பயந்து நடுங்கியிருந்த எலிகள்
மணியின் கழுத்தில் சுருக்கிட்டு சாகடித்திருந்தன பூனையொன்றை

பதற்றத்தில் கூடிய மாநாடு
மேலாண்மைச் சரிவு தடுக்க உத்திகள் வகுத்தது:
எலிகள் வளர்ந்து வளர்ந்து பூனைகளை விடவும் பெரிதாக இப்போது
தின்பதிலும் திருடுவதிலும் திறன்நுட்பம் கூட
வழக்கு தொடுத்தாலும் வாய்தாவில் தப்புகின்றன
வளையிலும் தங்குவதில்லை
பொறியிலும் சிக்குவதில்லை
கவ்விப்பிடிக்கக் காத்திருந்தாலும்
கண்ணறியாது வந்து போகின்றன
..................................................................
................................................................
எலிகளுக்கு எப்படியாவது
மணி கட்ட வேண்டும்.

2 கருத்துகள்:

  1. "பூனைக்கழுத்தில் மணிகட்ட பயந்து ஒடுங்கியிருந்த எலிகள் மணியின் கழுத்தில் சுருக்கிட்டுச் சாகடித்திருந்தன பூனையொன்றை.."... அருமை ! பூனை-எலி வீரதீரம் சாகசக் கதை இன்னும் எத்தனை நாள் தொடரும்?

    பதிலளிநீக்கு
  2. அருமை. திருடித் தின்பதை இருவருமே செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும். பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...