ஜெயமோகன், உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்- சுதீர் செந்தில்(28.6.12 அன்று நான் அனுப்பிய கடிதத்தை தனது வலைத்தளத்தில் வெளியிடாமல், நான் எழுப்பியுள்ள கேள்விகளில் ஒன்றுக்குகூட பதிலளிக்காமல்  ஜெயமோகன் எழுதிய கடிதமும் அதற்கான எனது மறுப்பும்) 
சுதீர் செந்தில், சுற்றிசுற்றி நீங்கள் சொல்லிவருவது, சொல்புதிதில் இருந்த, கடைசியில் எஞ்சும் பணத்துடன் சொல்லாமல் நின்றுவிட்ட, ஒருவருக்கு நீங்கள் லட்சக்கணக்கில் கொடுத்தீர்கள். கணிப்பொறி முதலியவை.

நான் அந்தக் கணக்குகள் விஷயத்தை முன்னெடுக்கவில்லை. இளைமையில் ஒருவர் செய்தமைக்காக இப்போது ஒரு நிறுவனத்தில் கௌரவமான பணியிலிருப்பவரை இழுத்துவிட எனக்குச் சம்மதமில்லை

நீங்கள் மருதம் இதழுக்கு டொமெய்ன் கொடுத்ததை , அது மாதம் கிட்டத்தட்ட 3000 வரை ஆகுமென கணக்கில், சொல்லியிருக்கிறேன். அந்தக்கணக்குகள் இப்போது புதிதாக கிளம்பிவருகின்றன.

சரிதான், என்னிடமே நீங்கள் லட்சக்கணக்கில் பணம் கொண்டுவந்து தந்தீர்கள் என்று என்னிடமே சொல்லாதவரை நான் அதிருஷ்டசாலிதான்.

எந்த நல்ல நோக்கம் இருந்தாலும் தரமற்ற மனிதர்களுடன் கொள்ளும் தொடர்புக்கு அதற்கான பலன் உண்டு என்பதை அறியவைத்துவிட்டீர்கள்.

இந்த விஷயத்தை நான் தொடரவிரும்பவில்லை. இந்த சல்லிசான விவாதங்களை மேடைஏற்றிப்பேசுவதில் உள்ள கூச்சம் காரணமாக

நீங்கள் நீதிமன்றம் செல்லலாம். அதையும் உங்களிடமிருந்து பெறும்போது உங்களுடனான என் தொடர்புக்கான விலை முழுமை அடைகிறது

நல்ல பாடம்

நன்றி
ஜெ

      ஜெயமோகன்உங்கள் நிலைப்பாட்டில் இருந்து உங்களை மாற்றிக் கொள்ளவில்லை. பொய்களையும் அவதூறுகளையும் வாரி இறைத்துவிட்டு நீங்கள் எந்தப் பொறுப்பும் இன்றி தப்பிச்சென்றுவிட முடியாது. பொதுவெளியில் நீங்கள் செய்து வரும் பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்றுதான் ஆக வேண்டும் என்று உங்களுக்கு உணர்த்தவே உங்களுக்கு எதிர்வினையாற்றினேன்.

உங்களால் என் கேள்விகளுக்கு பதில்கூற முடியாது. ஏனெனில் அது உண்மைகளின் சொற்களால் எழுதப்பட்டது. நீங்கள் பொய்களின் பக்கம் நிற்கிறீர்கள். திரும்பத்திரும்ப பொய்களை பேசுவது உங்களுக்கு ஒருபோதும் உதவாது.

"சொல்புதிதில் இருந்த, கடைசியில் எஞ்சும் பணத்துடன் சொல்லாமல் நின்றுவிட்ட, ஒருவருக்கு நீங்கள் லட்சக்கணக்கில் கொடுத்தீர்கள். கணிப்பொறி முதலியவை. நான் அந்தக் கணக்குகள் விஷயத்தை முன்னெடுக்கவில்லை. இளைமையில் ஒருவர் செய்தமைக்காக இப்போது ஒரு நிறுவனத்தில் கௌரவமான பணியிலிருப்பவரை இழுத்துவிட எனக்குச் சம்மதமில்லை" என்று கூறுகிறீர்கள்.


உங்கள் கருத்துப்படி சரவணன் உங்கள் பணத்துடன் நின்றுவிட்ட ஒருவர். ஆனால் அவர் வாழ்வு குறித்து கவலைப்படுகிறீர்கள்; பெருந்தன்மையோடு இருக்கிறீர்கள். ஆனால் எஸ்.வி.ஆர், .கீதா, .மார்க்ஸ் போன்றவர்களை வசைபாடுவீர்கள். சரவணன் தரப்பைக் கேட்டால் அவர் என்ன சொல்வார் என்று தெரியும். உங்களுடைய எந்தச் சொற்களிலும் உண்மை இல்லாதபோது சரவணன் பற்றி நீங்கள் சொல்வதிலும் பொய்யும் அவதூறும் மட்டுமே மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை. அதன்பொருட்டே நீங்கள் அவரை தவிர்ப்பதும்.

"எந்த நல்ல நோக்கம் இருந்தாலும் தரமற்ற மனிதர்களுடன் கொள்ளும் தொடர்புக்கு அதற்கான பலன் உண்டு என்பதை அறியவைத்துவிட்டீர்கள்" என்று சொல்கிறீர்கள்.. பொதுவெளியில் நான் உங்களை அம்பலப்படுத்திவிட்டேன் என்பதற்காக என்னை வசைபாடுகிறீர்கள். அனைவரும் உங்கள் வாசகர்கள் உட்பட பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் மடியில் எந்தக் கனமும் இல்லை. என் முந்தைய கடிதத்தை பிரசுரிக்காததிலிருந்தே உங்கள் அறத்தையும் ஜனநாயகத்தையும் அனைவரும் புரிந்துகொண்டனர்.


"இந்த விஷயத்தை நான் தொடரவிரும்பவில்லை. இந்த சல்லிசான விவாதங்களை மேடை ஏற்றிப்பேசுவதில் உள்ள கூச்சம் காரணமாக". பொய்கள் நிரூபணமாகி விட்டால் மேடையில் எப்படி ஏறி சவடால் பேசமுடியும். உங்கள் அறத்தைப் பற்றி கேட்டால் இது சல்லிசான விவாதம்!


"நீங்கள் நீதிமன்றம் செல்லலாம்". என்று நீங்கள் சொல்கிறபோது வேறுவழியும் இல்லை எனக்கு. உங்களுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருப்பது என் வேலையுமில்லை. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.சுதீர் செந்தில்
திருச்சி
29.06.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக