வெள்ளி, அக்டோபர் 5

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவினருடன் த.மு.எ.க.ச. பொதுச்செயலாளர் சந்திப்பு


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.சு.வெங்கடேசன் நேற்று (4.10.12) திரு.உதயகுமார், புஷ்பராயன், முகிலன், 'பூவுலகின் நண்பர்கள்' சுந்தரராசன் உள்ளிட்ட  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினரைச் சந்தித்தார். முன்னதாக அவர், போராட்டத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட திரு.அந்தோணிஜான் மற்றும் விமானத்தை மோதவிட்டு கொல்லப்பட்ட திரு.சகாயம் ஆகியோரது இல்லங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அன்னாரது குடும்பங்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
அமைதிவழியில் போராடும் இடிந்தகரை மக்கள்மீது தமிழக அரசு காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவக்கூடாது; அவர்களுக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி திரும்பப்பெற வேண்டும்

கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரம்,பாதுகாப்பு, கடல்வளம்,சுற்றுச்சூழல் தொடர்பாக சுயேட்சையான நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை அணுஉலையைச் செயல்படுத்தும் நடவடிக்கைகளை நடுவண் அரசு நிறுத்தி வைக்கவேண்டும்.

அணுஉலை விபத்துக்கான இழப்பீட்டுக்கு உச்சவரம்பு விதிக்கும் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும்.  - எனக் கோரியும்

போராடும் மக்களில் இருவரை துப்பாக்கிச்சூடு நடத்தியும், விமானத்தை மோதவிட்டும் கொன்றது

காவல்துறையினர் பெண்களை அவமானப்படுத்துவது 

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது
மத்திய- மாநில அரசுகள் அடக்குமுறைகளை ஏவுவது
- ஆகியவற்றைக் கண்டித்தும்,
13-10-2012 சனிக்கிழமையன்று திருநெல்வேலியில்  ஆர்ப்பாட்டம் நடத்துவதென்னும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயற்குழு முடிவை அப்போது போராட்டக்குழுவினரிடம் அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆன்டன் செகாவின் ஆறாவது வார்டும் அரூர் பன்னிரண்டாவது வார்டும் -- ஆதவன் தீட்சண்யா

kate jarvik birch ஜ னநாயகத்திருவிழா என்னும் தேர்தலை நோக்கி நாடு உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருவருக்கு ஒரு மதிப்பு ஒவ்வொருவருக்...