புதுவிசை 39 வது இதழின் தலையங்கம்

தாமல்லாத பிறர் தமது அண்டைஅயலாராக வசிப்பதை விரும்பாதவர்கள் பற்றிய (http://www.dailymail. co.uk/news/article-2325502/Map -shows-worlds-racist-countries- answers-surprise-you.html). இன்னும் துல்லியமாக கணக்கிடப்படுமானால் ஜோர்டானை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பெறக்கூடும். அந்தளவுக்கு மற்றமை பற்றிய சகிப்புத்தன்மை குறைந்தவர்களாக இந்தியர்கள் இருப்பதற்கு காரணமே இங்குள்ள சாதியமே. தங்களுக்குச் சமமானவர்கள் யாருமில்லை, தங்களைத்தவிர மற்ற எல்லோருமே தாழ்ந்தவர்கள் என்று கருதி ஒதுக்குவதும் ஒதுங்குவதுமாகிய சாதி உளவியல், வாழிடத்தை சுயசாதியினரின்  தொகுப்பு வீடுகளாகவே வரையறுக்கிறது. மற்றமைகளின்  இருப்பை அதனதன் சுயத்தோடு அங்கீகரிக்க மறுக்கும் இந்த சாதிஉளவியல்தான், சாதிரீதியாக வசிப்பிடங்கள் பிரிந்திருப்பதற்கும், சொந்தசாதிக்குள்ளேயே திருமணம் முடிப்பதற்கும், கலப்புத்திருமண தடைச் சட்டம் கோரவும், இளவரசனின் உயிரழிப்புக்கும், முசாபர் நகர் கலவரத்திற்கும், பாலியல் வதைகளுக்கும் தேவையான கருத்தியல்பலமாக இயங்குகிறது. ஆகவே, சாதியத்தை எதிர்த்துப்போராடுவது யாரோ சிலருக்கு ஒதுக்கப்பட்ட வேலைப்பிரிவினை அல்ல, இணங்கி வாழ்வதற்குரிய சமூக அடிப்படைகளை உருவாக்க விரும்புகிற ஒவ்வொருவரின் வேலைத் திட்டமாகவும் இருக்க வேண்டியுள்ளது.
பன்னாட்டு கணக்கெடுப்பு ஒன்றில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார்கள்

***
கையால் மலமள்ளுதலும், மலக்கிடங்கு மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை நீக்குதலும் தொழில்களல்ல, சாதிய ஒடுக்குமுறையும் உழைப்புச்சுரண்டலுமாகும். (தொழில்கள் எனில் பல்வேறு சாதியினரும் இந்தப்பணிகளை கைப்பற்றியிருப்பார்கள். இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவோரில் மிகப் பெரும்பாலோர் தலித்துகள். கல்விக் கூடங்களிலும்கூட இப்பணிகளைச் செய்யுமாறு தலித் மாணவர்களே நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்) இவர்கள் உயிராபத்து, உடல்நலக்கேடுகள், சுயமரியாதையிழப்பு, ஆளுமைக் குறுக்கம் ஆகிய பாதிப்புகளுக்கு ஆளாவதுடன் சமூகத்தில் தாழ்நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். தனிமனிதர்கள், உள்ளாட்சி மன்றங்கள், ரயில்வே உள்ளிட்ட அரசுத்துறைகள் மனிதத்தன்மையற்ற இப்பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதை தடுக்கவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணியமான மறுவாழ்வை ஏற்படுத்தித் தருவதற்குமான சட்டத்தை நிறைவேற்று மாறு இந்திய ஆளும்/ பேழும் வர்க்கத்தை பல்வேறு தலித் மற்றும் மனிதவுரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த அழுத்தத்தினால் இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட முன்வரைவு (Manual Scavengers and their Rehabilitation Bill, 2012)  குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாக வரவுள்ளது.

கையால் மலமள்ளவோ, மலக்கிடங்கு மற்றும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை நீக்கவோ மனிதர்களை பயன்படுத்துகிறவர்களுக்கு 1-5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் ஓராண்டு முதல் ஐந்தாண்டுகள்வரை சிறைவாசமும் தண்டனையாக விதிக்க வழிவகை செய்கி றது என்கிற வகையில் இச்சட்டம் முந்தையச் சட்டங் களைக் காட்டிலும் முன்னேற்றகரமானது. அதேவேளையில் சட்ட அமலாக்கத்தை கண்காணிப்பதற்குரிய பொறிமுறை, மறுவாழ்வு ஆகியன குறித்து இச்சட்டத்தில் காணப்படும் தெளிவின்மை களையப்பட வேண்டும். மேலும் தம்மில் ஒருபகுதி மக்களுக்கெதிராக இவ்வளவு கொடிய அநீதியை இழைத்து வந்ததற்காக இச்சமூகத்தின் சார்பில் இந்திய அரசாங்கம் தலித்துகளிடம் பொதுமன்னிப்பு கோரவேண்டும். 

***
பெண்களின் மானம், கற்பு, சுயமரியாதை, பாதுகாப்பு, அறவுணர்ச்சி என்றெல்லாம் முழங்கிக்கொண்டே சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று தலித் பெண்களை பாலியல் வதைக்குள்ளாக்குகிறது இந்தியச்சமூகம்.  தலித் பெண்கள்மீது பாலியல் வதை புரிவதை சாதியப் பெருமிதமாக கொண்டாடிக்கொண்டே பெண்களின் மாண்பு பற்றி பேசுவதற்கான அருகதையை எவ்வாறு பெறமுடியும்? நீதிமன்றங்கள், ஊடகங்கள், மனிதவுரிமை அமைப்புகள், பெண்ணிய அமைப்புகள், கட்சிகள் என்று சமூகத்தின் அனைத்து நிறுவனங்களும் தலித் பெண்கள் விசயத்தில் கடைபிடிக்கும் இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ளாத வரை, தூக்குதண்டனை உள்ளிட்ட எந்த தண்டனையும்  பாலியல் வதைக் குற்றங்களை தடுத்துவிடப்போவதில்லை.
- ஆசிரியர் குழு

பொருளடக்கம்:
கட்டுரை
சாதிகளின் உருவாக்கத்திற்கு காலனியத்தின் பங்களிப்பு
- தலித் செயல்பாட்டிற்கான சிந்தனையாளர் வட்டம்    3

சாதி, தலித்துகள், பெண்கள்: மாறி வரும் சமுதாய உறவுகளும் மாறாத வன்மமும் - வ.கீதா    13

வன்முறைக்கு வியாக்கியானம் - கோ.ரகுபதி    27

நரேந்திர தபோல்கர் : ஒரு சமூக மருத்துவரின் மறைவு - எஸ்.வி.ராஜதுரை    40

போலச்செய்தலும் திரும்பச்செய்தலும்
- சாதி எதிர்ப்பின் இரண்டு வழிமுறைகள் - டி.தருமராஜ்        50

முதலாளியமும் சாதிகளும் அவற்றின் முரண்தர்க்கங்களும் - ந.முத்து மோகன்        73

தன்வரலாறு அனாலியா II - தமிழில்- தேவா 63

சிறுகதை: அதற்காக எப்போதும் வடியும் குருதி - மாரி செல்வராஜ்    77

கவிதை
தகவலிசம் - இரா.தனிக்கொடி 11
பெய்ரூட் - உருதுகவிதை  அஹம்மது பராஸ்   62

முகப்போவியம். கார்த்தி

பிரதிகளுக்கு: ந.பெரியசாமி 9487646819


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக