முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

December, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீசையாக அல்ல..மயிராக..! -கருப்பு கருணா

(இந்த பதிவை முழுசா படிக்கலன்னா ராத்திரி கனவுல மீசை வந்து கண்ணைக் குத்தும்..சொல்லிப்புட்டேன்..)  போன வாரம் சேலத்துக்கு ஒரு புஸ்தகத்தப் பற்றி பேசப்போயிருந்தப்பதான் நந்தஜோதி பீம்தாஸை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு பாலம் சகஸ்ரநாமம். பீம்தாஸ், ஆதவன் தீட்சண்யாவுக்கும் நண்பருங்க…அவருகிட்ட பேட்டியெல்லாம் எடுத்திருக்காரு ஆதவன் என்று கூடுதல் தகவலை சொல்லவும், பீம்தாஸை எனக்கு இன்னமும் புடிச்சிப்போச்சி…ஆதவனை புடிச்சிருக்கிறமாதிரியே. கூட்டம் முடிஞ்சதும் கிளம்பட்டுமா.. எனக்கேட்டேன். இல்லை.. நானும்கூட வர்றேன்..எனக்கு இப்பவே உங்கக்கிட்ட பேசவேண்டியது நெறைய்ய இருக்குன்னு… என்கூடவே கிளம்பிட்டாரு பீம்தாஸ். மலைகள் சிபிச்செல்வன், ரத்னா கபேன்னு ஒரு பாடாவதியான ஓட்டலுக்கு கூட்டிட்டுபோயி சாப்பாடு வாங்கிக்குடுத்தாரு. நீங்க சாப்பிடலையான்னு பீம்தாஸை கேட்டேன். இல்லை..என்கிட்ட மார்க்வெஸ் குடுத்த சுருட்டு இருக்கு… இப்பத்திக்கி அதுவே போதும்.. நீங்க சாப்டு வாங்க..வெயிட் பண்றேன்னு சொல்லிட்டாரு. ஒரு வயசான பெரிய மனுசன ஒக்காரவெச்சிட்டு சாப்பிடறதுக்கு என்னமோமாதிரி இருந்ததாலயும், சாப்பாடு அவ்ளோ ருசியாக இருந்ததா…

மறுபடியும் கொளுத்துவோம் மநுஸ்மிருதியை - ஆதவன் தீட்சண்யா

மீசை என்பது வெறும் மயிர் - ஆதவன் தீட்சண்யா

வெளிவந்துவிட்டது
நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை:நந்தஜோதி பீம்தாஸ்
மீசை என்பது வெறும் மயிர் சந்திப்பு/ நேர்காணல்/ நாவல் சுருக்கம்   - ஆதவன் தீட்சண்யா

பக்கம்: 176, விலை: ரூ. 130 /- வெளியீடு: சந்தியா பதிப்பகம்
புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ,
அசோக் நகர், சென்னை - 600 083
தொலைபேசி : 044 24896979
‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலுக்கான முதற் பதிப்புரை
உலகெங்கும் மக்கள் தமது சொந்த வாழிடங்களை விட்டு பெயர்ந்தோடிக் கொண்டிருக்கிறார்கள். ஊர், நாடு, கண்டம் என்று அவர்கள் நீங்கிவருகிற நிலப்பரப்புகளின் பரந்த கடல்களையும் நெடிய மலைகளையும் பனி, மழை, வெயிலுக்கூடாக அவர்கள் இரவும் பகலுமாய் நடந்தே கடக்கின்றனர். பாலைவனங்களில் பொசுங்கிய பாதங்களில் கசியும் ரத்தம் கொண்டு அவர்கள் புதிய பெருவழிகளை வரைந்தபடி விரைகிறார்கள். உடலும் மனமும் சோர்ந்து வீழும் இடங்களில் அபயம் கேட்டு இரைஞ்சும் அவலம் இன்று குடிமைச் சமூகத்தின் பெருந்துயராகியுள்ளது.
பிறந்த மண்விட்டு குடிமக்கள் அகலும் சமூகச்சூழல் நிலவுவதை ஒரு அவமானமாகக் கருதாத அரசுகள் இன்றைய நாகரீகச் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல. மனிதகுலம் உயர்த்திப் பிடிக்கும் மாண்புகளை வெட்டி…

துப்புரவுத் தொழிலாளர்களை இழிவுபடுத்தி ரவிக்குமார் எழுதிய பதிவுக்கு கண்டனம்

துப்புரவுத் தொழிலாளர்களை இழிவுபடுத்தி எழுத்தாளர் ரவிக்குமார் முகநூலில் எழுதிய பதிவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாற்றுப் பத்திரிகையாளர் எழுத்தாளர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை:

பத்திரிகைச் செய்தி

வணக்கம்.
இந்தியாவில் மிக நீண்டகாலமாக நடைமுறையில் இருந்துவரும் மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர்க் கால்வாய்களை மனிதனைக் கொண்டே சுத்தம் செய்ய வைக்கும் மனிதத்தன்மையற்ற கொடுமையான வழக்கத்தை - உலகளாவிய மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு தலித் மக்கள் இயக்கங்களும் - மிகக்கடுமையாக எதிர்த்துப் போராடி வருகின்றன. உச்ச நீதிமன்றம்கூட மனிதக் கழிவுகளை மனிதனைக் கொண்டு அகற்றும் கொடிய வழக்கத்தை ஒழித்துக் கட்ட மத்திய, மாநில அரசுகளுக்கு கெடு வைத்து ஆணையிட்டுள்ளது.

இச்சூழலில், எழுத்தாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார், கழிவுநீர்க் கால்வாயிலும் மலக்குழிக்குள்ளும் இறங்கிச் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் குறித்து தனது முகநூலில் தெரிவித்துள்ள கருத்துகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்களிடமும் சமூக மாற்றத்திற்காகப் போராடும் அனைவரிடமும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ரவி…