முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

June, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெருக்கடிநிலை, சங் பரிவாரம், சுப்பிரமணியன் சுவாமி - எஸ்.வி.ராஜதுரை

சுதந்திர இந்தியாவில் முதல் உள்நாட்டு நெருக்கடி நிலையை காங்கிரஸ் அரசாங்கத்தின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அறிவித்த நாற்பதாண்டு நிறைவையொட்டி 2015 ஜூன் 25,26,27ஆம் நாள்களில் ‘தி ஹிந்து’ தமிழ் நாளேட்டில் தொடர்ச்சியான கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜூன் 25 இதழின் 9 ஆம் பக்கத்தில் ‘நெருக்கடி நிலையின் 40 ஆண்டுகள்- கருப்பு நினைவுகள்’ என்ற கட்டுரைக்குக் கீழே ‘நெருப்பாற்று நாயகர்கள்’ என்ற தலைப்பில் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடியவர்கள் என்று சில அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அங்கு பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் ராம்நாத் கோயங்காவும் ‘சோ’ ராமசாமியும் ஆவர். அரசியல் தலைவர்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளவர்களில் மு.கருணாநிதி, ஜார்ஜ் ஃபெர்னாண்டெஸ் ஆகியோரை மட்டுமின்றி எல்.கே.அத்வானியையும்கூட ‘பத்திரிகையாளர்கள்’ என்று கூறமுடியும். அந்த மூவரும்கூட பத்திரிகைகளை நடத்தியவர்கள்தாம். அதிலும் குறிப்பாக, நெருக்கடி நிலைக்கால நெருக்கடிகளை சமாளித்து, ‘முரசொலி’ நாளேட்டை நடத்திச் சென்ற மு.கருணாநிதியின் சாதுரியத்தை விளக்கத் தனியொரு நூலே எழுதவேண்டும்.
தம…

தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை – ஆதவன் தீட்சண்யா

இப்போதெல்லாம் அடிக்கடி என் கனவில் வரத் தொடங்கிய சுசீலாக்கா முதன்முதலில் எனக்கு அறிமுகமான வயதினளாய் இருந்தாள். கல்யாணம் முடிந்து எங்கள் ஊருக்கு சுசீலாக்கா வரும்போது எப்படி இருந்தாளோ… அப்படி. அப்போது பிரபலமாக இருந்த யாரோ ஒரு நடிகையின் சாயலில் அவள் உடுத்தி இருந்தாள். அவளது சிகை அலங்காரம் கூட அப்படித்தான் இருந்தது. அடிக்கடி ஜடையை முன்பக்கம் எடுத்துப் போட்டுக்கொள்வாள். அதன் நுனியைப் பிரித்தும் பின்னிக்கொண்டும்தான் பேசுவாள். ‘அவளும் சினிமாக்காரியைப் போல் டோப்பா வைத்து இருக்கிறாளோ’ என்கிற சந்தேகம் எங்கம்மாவுக்கும்கூட முதலில் இருந்தது. ஆனால், ஒருநாள் சுசீலாக்கா பம்ப்செட்டில் குளித்துவிட்டு ஈரமுடியின் நுனியில் நீர் சொட்ட வருவதைப் பார்த்தப் பிறகு, அதிசயமாகிப் போனாள். உண்மையில் அவளுக்கு தரை தொட நீண்டு இருந்தது கூந்தல். பனங்கொட்டைக்கு நார் சிலுப்பியதுபோல முடி வைத்திருந்த எங்கள் ஊர் பொண்டுகளுக்கு, அவள் கூந்தல் அற்புதம்போல் தெரிந்ததில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.
அவளது புருசன், மாமியார், குழந்தைகள் எல்லோரையும் விட்டுவிட்டு தன்னந்தனியாகத்தான் என் கனவுக்குள் வருவாள். அந்த மாதிரியான நேரங்களில் அவர்கள் இ…