தூங்கா இரவும் தூங்கித் தொலைத்த பகலும் - ஆதவன் தீட்சண்யா


வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்து நவம்பர் 4ம் தேதி மாலை நாடு திரும்ப கோலாலம்பூரில் ஏர் ஏசியா விமானம் ஏறியபோது அதியதிசயமென மிகச்சரியாக 9 மணிக்கு வண்டி கிளம்பியது. ஆனால் கிளம்பிய விமானம் வெகுநேரமாக ஓடுபாதையில் சுற்றிக் கொண்டேயிருந்தது. ஒருவேளை இது தரைவழியாகவே இந்தியாவைச் சென்றடையும் விமானமாக இருக்குமோ என்கிற சந்தேகம்கூட வந்துவிட்டது. இது வெறும் பஸ்ஸா அல்லது ஏர்பஸ்ஸா என்கிற அளவுக்கு எனது யோசனை தாறுமாறாகிகொண்டிருக்க விமானமோ பல சுற்றுகளுக்குப் பின்னும் மேலெழும்பவேயில்லை. கடைசியில் ஏதோ இயந்திரக் கோளாறு என்று புறப்பட்ட இடத்திற்கே கொண்டுபோய் நிறுத்திவிட்டு 10 நிமிடங்கள் பொறுமை காக்குமாறு சொன்னார்கள். நமது பொறுமைதான் உலகறிந்த விசயமாயிற்றே, காத்திருந்தோம். கொஞ்சநேரத்திற்குப் பிறகு, இப்போதைக்கு சரியாகும் வழியைக் காணோம் என்று சொல்லி  கீழேயிறக்கி  அழைத்துப்போய் ஒரு அறையில் உட்காரவைத்துவிட்டார்கள். இப்போ அப்போவென நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நேரம் ஆகஆக அதற்கு முந்தைய நாள் ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, காணாமல் போய் ஒருவருடமாகியும் கண்டுபிடிக்க முடியாத மலேசிய விமானம் என்று பயணிகள் விமானம் தொடர்பான மர்மங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள்  . 

நானோ யாரோடும் தொடர்பு கொள்ள வழியற்று எங்கோ மாட்டிக்கொண்டது போன்ற உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் விமான நிலைய ஊழியர் ஒருவரது மொபைல் வழியாக சகோதரி மணிமொழியிடம் பேசி, வந்து சேர தாமதமாகும் என்கிற தகவலை வீட்டாருக்கு தெரியப்படுத்தினேன். ஆனால் அதற்குள்ளாகவே பெங்களூர் விமான நிலையத்திலிருந்து என்னை வீட்டுக்கு அழைத்து வருவதற்கான வண்டியை அவர்கள் அனுப்பிவைத்து விட்டிருந்தார்கள். நானோ கோலாலம்பூர் விமானநிலையத்திலேயே காத்துக்கிடந்தேன்.

நண்பர்களைச் சந்தித்ததிலும், நிகழ்வுகளில் பங்கேற்றதிலும் உண்டாகியிருந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் வடிந்து ஊர் போய் சேர்ந்தால் போதும்  என்றாகிவிட்டது. மேலும் தாமதமாகிக் கொண்டிருந்த நிலையில் ஏர் ஏசியாவினர்சோத்துப்பொட்டலம் கொடுத்து தின்னச் சொன்னார்கள். ஒருவழியாக கோளாறை சரி செய்துவிட்டதாக இரவு 12.30 மணிக்கு அதே விமானத்தில் ஏற்றிய போது மற்றவர்களுக்கு எப்படியோ எனக்கு கொஞ்சமும் நம்பிக்கை ஏற்படவில்லை. இயல்பான சத்தங்கள்கூட கோளாறாகவே கேட்டதில் கண்ணைக் குத்தினாலும் தூக்கம் வரவில்லை.  நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதில் ஆதவன் சாவு என்கிற செய்தி கேட்டு முதலில் மகிழ்ச்சியடையக் கூடியவர் யார் என்று யோசித்ததில் சிலபெயர்கள் பின்னுக்குப் போய் சில பெயர்கள் புதிதாக முன்னுக்கு வந்தன. ( யாருமற்பாலைத்தில் விட்டாலும் லை எதிரியாக்கிக் கொள்ளும் வல்மை மக்கிருக்கிதே?) ஆனால் அத்தகைய நல்வாய்ப்பை அவர்களுக்கு இந்தமுறை வழங்காத ஏர் ஏசியா, ஒருவழியாக அதிகாலை 5 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்தது. 

ஒசூரிலிருந்து  வண்டியோடு ராத்திரி 10 மணிக்கே வந்துவிட்டிருந்த நண்பர்கள் ராமனும் வரதராஜனும் விடியவிடிய தூக்கமின்றி  விமான நிலையத்தில் காத்திருந்தனர். காத்திருக்கும் அன்புக்கு கட்டணம் பெறத்தெரியாராமன் ஒரு தொழில்முறை வாகனமோட்டியாய் இருந்திருந்தால் பெரும் ஷ்த்திற்கு ளாகியிருப்பார்.

சொக்கிச்சொக்கி விழுந்தபடியே வீடு வந்து சேர்ந்ததுதான் தெரியும், நேற்று மாலைவரை தூக்கம் தூக்கம்... தூக்கம் முழுவதும் கனவுகள். பிற்பகலில் பிரளயன் வந்து எழுப்பாவிட்டால் ஒருவேளை எனக்கான அஞ்சலிக்கூட்டத்தையும் கனவில் கண்டிருப்பேன்.


1 கருத்து: