முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

December, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நெனப்பு பொழப்பை கெடுத்தக் கதை

உங்களுக்கு ஏற்கனவே  தெரிந்த   இந்தக் கதையின் நாயகன் திருவாளர் எகச்சு.உண்மையில் அவரது பெயர் எக்ஸ். ஆனால் தீவிர வடமொழி புறக்கணிப்பு உணர்வினால் ஸ்டாலின் என்பதை சுடாலின் என்று விளிக்கும் பாரம்பரியத்தில் வந்தவராதலால் தன் பெயரை எகச்சு என்று மாற்றிக்கொண்டார்.

ஆளை விழுங்கும் அளவுக்கான பசியில் கிறுகிறுவென மயக்கம் வந்தது திருவாளர் எகச்சு.  அவர்களுக்கு. சாலையோர மோரிக்கல் ( பாலம்) ஒன்றில் தலைசாய்த்து அப்படியே படுத்துவிட்டார். அன்னாடம் இப்படி அடுத்த வேளை வயித்துப்பாட்டுக்கு அல்லாடும் நிலையில் இருநது தப்பிக்க வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். அரணாக்கயிறு கோமணமில்லாம அலைந்த அம்பானி, அதானியெல்லாம் ஏதேதோ தில்லாலங்கடி திலுப்பாமாரி வேலை செய்து இன்னிக்கு பெரிய பணக்காரனுங்களா இருக்கறப்ப தன்னால் ஏன் ஆகமுடியாது என்று யோசிச்சுக்கிட்டே இருந்தவர் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

ஊரில் இரண்டு கல்யாணம். ஒரு கல்யாணத்தில் சாப்பிட்டு விட்டு மற்றொரு கல்யாணத்தில் சாப்பாட்டைபொட்டலமாக கட்டிக்கொண்டு வந்து யாருக்காவது விற்று அதில் வருகிற காசில் ஒரு கோழிக்குஞ்சு வாங்கி வளர்த்து, அது முட்டையிட்டு குஞ்சுபொறிச…

அழும்பு - ஆதவன் தீட்சண்யா

கொஞ்சூண்டு வெட்டாப்பு கொடுத்திருந்த வானம் மறுபடியும் பொத்துக்கொண்டு ஊத்தியது. சுதாரிக்க அவகாசமில்லாத தாக்குதல். ஒருநாள் ரெண்டுநாளுன்னா சமாளிக்கலாம். வாரம், பத்து நாளுன்னா என்ன பண்ண முடியும்... மூச்சு முட்டி திணறி தவிக்குது ஊர் ஜனமே.
திடீர்னு மழை நின்னு தூறலா தனிச்சு சிறுத்து பளீர்னு வெளி வாங்கும். கூண்டை திறந்து விட்டதும் குப்பைமேட்டுக்கு ஓடுற கோழிகளாட்டம் ஜனங்க பறக்கும். அவங்கவங்களுக்கு ஆயிரம் வேலை. இன்னேரம்வரைக்கும் வயிறுமுட்ட அடக்கிவச்சிருக்கிற மூத்திரம் பேயணும்... கோணப்பன் கடைக்கு ஓடி சூடா போண்டா வடை தின்னு டீ குடிச்சு கதகதப்பா பீடி பத்தவைக்கணும்... மேங்காட்டுத்தண்ணி வயல்ல நின்னு சவுக்கு எடுக்காம இருக்கிறதுக்கு வாய்க்கா வெட்டி ஓடைக்குத் திருப்பணும்... மாடுகன்னுக்கு தீனி போடணும்... ராத்திரிக்கு கரண்ட் போயிடும். அதனால் சிம்னிக்கும் ராந்தலுக்கும் சீமெண்ணய் வாங்கணும்... முக்யமா யாரையாச்சும் பாத்து அஞ்சோ பத்தோ கடன் கேட்கணும்... ஜனங்க அதுக்கும் இதுக்கும் பறந்து வேலையை முடிக்கிறவரைக்கும் பொறுக்காது. கிர்ருன்னு மேகம் கூடி கரைஞ்சி அடர்த்தியா இறங்கும்.
மழைக்கு முன்னாடி, தினத்துக்கும் ஆளாளுக…

கடவுளும் கந்தசாமிப் பறையன் உள்ளிட்ட வகையறாக்களும் - ஆதவன் தீட்சண்யா

வா மகனே வா
வந்தாயே இப்பவாவது துணிஞ்சு உள்ளே வர எனக்குத்தான் தடை
வெளியே வந்து பார்க்க உனக்கென்ன கேடு?

                          கோபம் நியாயந்தான் ஆனா
                          அவங்க கட்டுக்காவலை மீறி எப்படி நான் வரமுடியும்?
                          நாம சந்திச்சிடக்கூடாதுன்னு தான்
                          உள்ளே வெளியேன்னு பிரிச்சு வச்சிருக்கானுங்க

பிரிச்சு வைக்கிறதுதானே அவனுங்க குணம்
உம்புத்தி எங்கே பீ திங்கப்போச்சு
எம்புள்ளைங்களப் பாக்கறதைத் தடுக்க
உனக்கென்னடா அதிகாரம்னு
உதைச்சி வீசிட்டு வரவேண்டியதுதானே

                          தூபப் புகையில கண்ணவிஞ்சு
                          மந்திர இரைச்சல்ல காதடைஞ்சு
                          ஊதுபத்தி நெடியில மூர்ச்சையாகி
                          உன் கால்பட்ட கணத்தில்தான் மீண்டெழுந்தேன்
                          இனி இங்கே வேண்டாம் எனக் கிளம்பினார் அவனோடு

இப்போதெல்லாம் கடவுள்
கோயில்பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை
தன்பெயரால் நடந்த குற்றங்களுக்கு கழுவாயாய்
மோளமடிக்கவும் முட்டுத்துணி அலசவும்
மாடறுக்கவும் மயானங்காக்கவும் மலமள்ளவும்
நியமம் தவறாம…