வெள்ளி, ஜூலை 15

அங்கீகாரம்... தீட்டு... பறையர்... -ஆதவன் தீட்சண்யா

2013 நவம்பர் 'தோர்ச்ச' மாத இதழில் வெளி்யான மலையாள எழுத்தாளர் தோமஸ் ஜோசப்புடைய நேர்காணலின் தமிழாக்கம் நியூ செஞ்சுரியின் 'உங்கள் நூலகம்' ஜூலை 2016 இதழில் வெளியாகியுள்ளது. கலை இலக்கியம் தொடர்பான முக்கிய உரையாடல். ஆனால் அது இப்படி முடிகிறது: 

" .... இங்கே இலக்கியத்தின் அதிகாரிகள், சற்று விலகி நின்று எழுதுகிறவர்களின் படைப்புகளை அபத்த இலக்கியம் என்று தீட்டு சொல்லி விலக்கி வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, கவிதையோடு ஒப்பிடும்போது கதை இலக்கியத்தில் அதிகாரப்பூர்வமான ஒரு ஒளிவட்டம் இன்று மிக முக்கியம். தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் வேலை செய்யும் எழுத்தாளர்கள் மீது ஊடகங்களின் பாசம் முடிந்தவரை பொழியும்போது, கதையை வழக்கமான பாணிகளிலிருந்து விடுவிக்கப் பாடுபடும் எழுத்தாளன் இலக்கியத்தின் பூந்தோட்டத்துக்கு வெளியே அகிறான். அவனுக்கு அங்கீகாரங்களின் இனிமை மறுக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் பிறகு கதையின் எதிர்காலம் எங்கே சென்று நிற்கும் என்று சொல்லமுடியாத நிலை வருகிறது. ஒருக்கால், இன்று கொண்டாடப்படும் கதாசிரியனை காலம் பின் தள்ளுமென்றும், இன்றைய கதை இலக்கியத்தின் பறையர்கள் நாளையக் கதையின் ராஜாக்களாக மாறுவார்கள் என்றும் நம்பலாம்." 

அங்கீகாரமின்றி விலக்கிவைக்கப்படுகிறவர்களைச் சுட்ட " பறையர்" என்கிற சொல்தான் ஒரு எழுத்தாளரிடமும் இருக்கிறதா? மொழிபெயர்த்தவருக்கும் இதழாசிரியருக்கும் கூட இது உறுத்தவில்லையா? ஒருவேளை நான் தான் சொற்களைப் பிடித்து தொங்குகிறேனா...

ஓர் எழுத்தாளரின் சொற்கிடங்கு எவ்வளவு அடர்ந்து செறிந்திருந்தாலும் அவரது கருத்தியலே அதிலிருந்து பொருத்தமான சொல்லை தெரிவு செய்கிறது போலும்.

3 கருத்துகள்:

  1. வரவேற்கிறேன் உங்கள் எழுத்தை

    பதிலளிநீக்கு
  2. "ஓர் எழுத்தாளரின் சொற்கிடங்கு எவ்வளவு அடர்ந்து செறிந்திருந்தாலும் அவரது கருத்தியலே அதிலிருந்து பொருத்தமான சொல்லை தெரிவு செய்கிறது போலும்."

    பதிலளிநீக்கு
  3. அவர் மலையாளி எனபதால் பேட்டி ஆங்கிலத்தில்தான் இருந்திருக்கும். ஆங்கிலத்தில் பறையா |(பறையர் என்று எழுதமாட்டார்கள்) என்ற சொல்லுக்குப்பொருள்சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட பொருள், செயல், அல்லது நபர்க்ள். இதுதான் அந்த முதற்பொருள். பல பொருள்களையும் பட்டியலிடுவது அகராதி. அப்படி வரும்போது, இச்சொல் ஒரு ஜாதியினரைக்குறிக்கும் சொல் என்றும் போட்டிருப்பார்கள்.

    இச்சொல், ஆங்கிலத்தில் எல்லாருமே பயனபடுத்தும் சொல் அது. ஐரொப்பிய ஐக்கிய நாட்டுச்சபை விவாதங்களிடம் கூட இச்சொல் காணப்படும். ஒரு நாடு தள்ளிவைக்கப்பட்டால், இப்படிச் சொல்வார்கள். It has become a pariah of the world.

    இந்தியா ஆங்கிலேயரின் காலனி நாடாக இருந்த போது இங்கு ஆட்சியாளர்காகவும் அவர்கள் குடும்பங்களாகவும் இருந்த அவர்கள், தங்கள் பேச்சுவழக்குகளில் இந்தியச்சொற்களை பயன்படுத்தினர். கடிதங்கள். கட்டுரைகள் என்று. அப்படி ஊடுறுவிய தமிழ்ச்சொற்கள்; மிளகுத்தண்ணி, கட்டுமரம், பறையா.


    பிராமன் என்ற சொல்லும் ஆங்கில அகராதியின் ஊடுறுவி ஆங்கிலேயர்களால் பயனபடுத்தப்பட்டு வருகிற்து வேறொரு பொருளில். அதாவது தங்களைத்தாங்களே ஒரு மேட்டிமையுணர்வால் பிற் மக்களிடமிருந்து ஒதுங்கிக்கொண்டார்கள் என்ற பொருளில் .

    பறையா - சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர். தெருநாய்களூக்கும் கூட அச்சொல் பயன்படும். ஏனெனில் அவைகளைக் தங்களுடமையாகக் கொள்வாரில்லையெனவே. It is a pariah dog.

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...